Tuesday, September 6, 2011

டில்லி ஐகோர்ட் வாசலில் குண்டு வெடிப்பு; 9 பேர் பலி; பலர் காயம்


புதுடில்லி: டில்லி ஐகோர்ட் 5-வது கேட் அருகே இன்று காலை 10: 17 மணிக்கு சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 9 பேர் பலியானதாகவும் 30 பேர் படுகாயம் அடைந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். மேலும் பலர் காயம் அடைந்திருக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன.


டில்லி ஐகோர்ட் அருகே இன்று காலை கோர்ட் பணிக்கு வந்த ஊழியர் ஒருவர் ஐகோர்ட் 5-வது கேட் அருகே பயங்கர சத்தத்துடன குண்டு வெடித்ததாக தெரிவித்தார். இதைத் தொடர்‌ந்து சம்பவ இடத்தில் குண்டு வெடித்ததற்கான தடயம் இருந்தது. ஆம்புலனஸ்கள் விரைந்து வந்து சம்பவ இடத்தில் காயமடைந்தவர்களை சப்தர்ஜங், ராம் மனோகர் லோகியா ஆகிய மருத்துவமனை உட்பட பல்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனர். சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வண்டிகள் விரைந்துள்ளன.

உள்துறை அமைச்சகம் நிலைமை குறித்து விவாதித்து வருகிறது. டில்லி போலீஸ் கமிஷனர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார். ஒரு பிரீப்கேசில் இந்த குண்டு வைக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது.

தேசிய பாதுகாப்புப்படையினர் (என்.எஸ்.ஜி), தேசிய புலனாய்வு ஏஜென்சியினர் (என்.ஐ.ஏ) அதிகாரிகள் சம்பவ இடத்தினை ஆய்வு செய்து வருகின்றனர்.

பார்லிமென்டில் கண்டனம்: குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பார்லிமென்டில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குண்டு வெடிப்பு எதிரொலியாக ராஜ்யசபா 2 மணி வரையும், லோக்சபா 12.30 மணி வரையும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு வளையத்தில் டில்லி: குண்டுவெடிப்பு சம்பவத்தினை தொடர்ந்து டில்லி ஐகோர்ட் வளாகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டில்லி முழுவதையும்போலீசார் தீவிர பாதுகாப்பு வளையத்தில் கொண்டுவந்துள்ளனர்.

2-வது முறை: கடந்த 4 மாதங்களில் டில்லி ஐகோர்டில் நடந்த 2-வது குண்டுவெடிப்பு என போலீசார் தெரிவிக்கி்ன்றனர். கடந்த மே மாதம் 25-ம் தேதி இதே போன்று டில்லி ஐகோர்ட் வளாகத்தில் குண்டுவெடித்தது குறிப்பிடத்தக்கது

நன்றி : dinamalar.com  

share on:facebook

6 comments:

அம்பலத்தார் said...

பயங்கரவாத நடவடிக்கைகள் கண்டிக்கப்படவேண்டியவை

Madhavan Srinivasagopalan said...

// Also refer your previous post --- ராஜீவ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளிகள் அனைவரும் தாங்களாகவோ அல்லது வேறு விதத்திலோ மரணம் அடைந்த பிறகும் பேரறிவாளன் (இவர் கொலையாளிகளுக்கு பாட்டரி வங்கி கொடுத்தார் என்பது ஒரு குற்றம்) போன்றோரை தூக்கில் போடுவது என்பது . நியாயமா என்று தெரியவில்லை. //

குண்டு வெடிப்புக்கு (மே 21 , 1991 உட்பட ) காரணமானவங்கள / சம்பந்தப் பட்ட வங்காள / நேரடியா / மறைமுகமா உதவி செஞ்சவங்கள்ள ஒரு சிலரயாவைது பிடிச்சு.. கோர்ட்டுல கேசெல்லாம் நடத்தி.. அலசி ஆராஞ்சு தூக்கு தண்டன கொடுக்கப்பட்ட ஆளுங்களுக்கு வக்காலத்து வாங்குறாங்களே.. (உங்களது சமீபத்திய பதிவு உட்பட).. அவங்க இப்பவாது சரியா யோசிக்க ஆரம்பிப்பாங்களா ?

Madhavan Srinivasagopalan said...

குற்றத்தின் அளவு பார்த்து அதற்க்கேத்த தண்டனை வழங்க வேண்டியதுதான்.... உண்மை..
ஆனால், கொலைகாரக் கும்பல் எனத் தெரியவருமின்.. உட்சபட்ச தண்டனைதான் தகுந்தது.
அமெரிக்க இரட்டை கோபுர நிகழ்விற்குப் பின், தீவிரவாதத்தை கடல் கடந்து வேரறுத்த செய்தி உங்களுக்கு தெரியாததல்ல..

இன்று ஜெயிலில் இருக்கும் ஒரு தீவிரவாதியின் தண்டனையை எதிர்த்து மற்றுமொரு தீவிரவாதம் தலை காட்டுகிறது. இந்நிலையில் தண்டனையை நிறைவேற்றுவதில் காலம் தாழ்த்தினால் என்ன ஆகும் என்பதற்கு இதாவது ஒரு பாடமாகட்டும்.. ம்ம்ம்ம்.. எத்தனை தடவ சார்.. முடியல... தாங்கிக்க முடியல......

"நூறு கேட்டவர்கள் வெளியே நடமாடலாம்.. ஒரு நிரபராதிகூட தண்டிக்கப் படக்கூடாது " == எட்டு சுரைக்காய்.. கறிக்கு உதவாது..

நானும்.. நீங்களும் போலம்புரதுனால எதுவும் சரியாயிடப் போறதா எனக்குப் படல..
சம்பந்தப் பட்ட ஆளுங்க (ஆட்சியாளர்.. அதிகாரிகள்) சரியான (!) திட்டமிடுதல்.. நடவடிக்கை எடுத்தல் (!!) இதெல்லாந்தான் ரொம்ப முக்கியம்.

நடக்கட்டும்.. நடக்கட்டும்... எவ்ளோ நாள் தான் இப்படிலாம் நடக்குதுன்னு பாத்திட நாமன்றி வேறு யார் ?

பின் குறிப்பு : மனக் கொந்தளிப்புடன் எழுதிய (நீண்ட !) கருத்துரை..

Madhavan Srinivasagopalan said...

"I am confident that this is a war we will and we must win," said Manmohan Singh in reply to a query on the blast in which 11 people were killed. Source ndtv news


எனக்கு உடனே தோன்றியது... இதுதான்
"Who are in that we ? Does 'we' include those who died yesterday ? Or.. will that include the future(!) vitims ?"

வேதனை சார்.. வேதனையோட எழுதி இருக்கேன் பின்னூட்டங்கள, இந்தப் பதிவுக்கு

ஆதி மனிதன் said...

வருகைக்கு நன்றி அம்பலத்தார் அவர்களே.

நன்றி மாதவன். தங்களின் ஆதங்கம் புரிகிறது. என்ன செய்வது? நம் அரசியல் அமைப்பும், அரசியல் வியாதிகளும் மாறாதவரை மக்கள் இப்படி அநியாயமாக செத்துக்கொண்டு தான் இருப்பார்கள்.

CS. Mohan Kumar said...

இந்த தகவல் உங்கள் பதிவில் தான் முதலில் பார்த்து அதிர்ந்தேன். (நேற்று அலுவலகத்தில் வாசித்தேன். அங்கிருந்து சில ப்ளாகுகளில் பின்னூட்டம் இட முடிவதில்லை)

Post a Comment