முத்துக்கள் மூன்று பாகம் -1 தொடர்ந்து இது அடுத்த ஐந்து முத்துக்கள். முதலில் என்ன இது நம்மை நாமே புகழ்ந்து கொள்வது அல்லது நம்மை பற்றி நாமே சொல்லிக்கொள்வது என்று தான் தோன்றியது. ஆனால் ஒவ்வொரு முத்துக்கும் உண்மையிலேயே யோசித்து யோசித்து பதில் தந்த பிறகு அட இவ்வளவு நாள் இதெல்லாம் நமக்கு உள்ளே தான் இருந்து இருக்கிறதாக தோன்றியது. தோண்டி எடுத்த புண்ணியவான் மாதவன் வாழ்க.
6) உங்களைச் சிரிக்க வைக்கும் மூன்று விஷயங்கள் அல்லது மனிதர்கள்.
# நிச்சயமாக நம்ம வடிவேலு காமெடி.
# என் குழந்தையின் மழலை பேச்சு.
# வாரத்தில் ஒரு நாளோ அல்லது மாதத்தில் ஒரு நாளோ மட்டும் நான்-வெஜ் சாப்பிட மாட்டேன் என சொல்பவர்கள் தப்பி தவறி என் லஞ்ச் பாக்ஸ்சில் நான்-வெஜ் ஐட்டத்தை பார்த்து விட்டு ஓட்டம் எடுக்கும் போது(நான்-வெஜ்ஜே சாப்பிடாதவர்கள் அவ்வாறு அலறலாம். ஆனால் செவ்வாய் வெள்ளி என்பதால் மட்டும் ஓட்டம் எடுப்பது எனக்கு சிரிப்பை தரும். அப்படியே தப்பி தவறி சாப்பிட்டால் என்ன ஆகி விட போகிறது?)
7) தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்:
# முடிந்தமட்டும் தவறாமல் மாலை வேளையில் வாக்கிங் போவது.
# இரவு எட்டு மணிக்கு முன் இரவு சாப்பாட்டை சாப்பிட்டு முடித்து விடுவது (அதுவும் மூக்கு முட்ட இல்லாமல் அளவோடு).
# என் வலைதளத்தில் தொடர்ந்து பதிவுகள் போட தொடங்கி இருப்பது.
8) வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்.
# எங்கள் சொந்த கிராமத்தில் ஒரு தோப்பு வீடு உருவாக்கி அங்கு அவ்வப்போது சென்று அமைதியாக பொழுதை கழிக்க வேண்டும்.
# ஏழை மாணவ மாணவர்களுக்கு ஏதாவது பெரிதாக செய்ய வேண்டும்.
# அரசாங்கத்தில் ஒரு முக்கிய பதவியில் வேலை கிடைத்தால் அதில் லஞ்சமே வாங்காமல் அடுத்தவர்களுக்கு உதாரணமாக வாழ்ந்து காட்டுவது.
9) உங்களால் செய்து முடிக்க கூடிய மூன்று விஷயங்கள்.
# இந்தியா சென்ற பின் ஒரு நல்ல புது கார் வாங்குவது.
# அம்மாவுக்கு துணையாகவும் ஆதரவாகவும் இருப்பது.
# பழைய நண்பர்களையும், ஆசிரியர்களையும், என் பள்ளியையும் சென்று சந்திப்பது.
10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்:
# அடுத்தவர்களிடம் என்ன சம்பளம் என்பதை.
# துயர செய்திகளை.
# இளமையில் வறுமையை.
கடைசி பாகம் தொடரும்...
share on:facebook
7 comments:
வழக்கம் போல அசத்தல்!
அருமையான பதில்கள்..
// # நிச்சயமாக நம்ம வடிவேலு காமெடி. //
தேர்தல் பிரச்சாரம்தான.. அது காமெடியோ காமெடி..
// அரசாங்கத்தில் ஒரு முக்கிய பதவியில் வேலை கிடைத்தால் அதில் லஞ்சமே வாங்காமல் அடுத்தவர்களுக்கு உதாரணமாக வாழ்ந்து காட்டுவது. //
அப்படின்னா உங்களுக்கு அரசாங்க வேலை கிடைக்காது...
நன்றி ஐடியா மணி அவர்களே. ஆமா நீங்க பேருக்கு பின்னாடி போட்டு இருகிரதேல்லாம் நீங்க படிச்சு வாங்கின பட்டமா? இல்ல சும்மா லொள்ளா? உண்மைதான்னா மன்னிச்சுடுங்க.
@Madhavan Srinivasagopalan said...
//அருமையான பதில்கள்..//
நன்றி மாதவன். நீங்க தான் கோத்து விட்டுட்டீங்களே!?
@Philosophy Prabhakaran said...
//அப்படின்னா உங்களுக்கு அரசாங்க வேலை கிடைக்காது... //
ஆங்...அழுதுடுவேன்.
அசத்தல் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
Post a Comment