Thursday, September 22, 2011

சன் டி.வி நிறுவனர் கலாநிதி மாறனின் சம்பளம் எவ்வளவு?


பல இந்தியர்கள் இன்று கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள்.
2020 இந்தியா நம்பர் ஒன் ஆகும் என்று. ஆனால் நம்பர் ஒன் எதில் என்று தான் புரியவில்லை. இந்த லிங்கை சொடுக்கி பாருங்கள். உங்களுக்கு தெரிந்து விடும். எதில் நாம் நம்பர் ஒன் ஆவோம் என்று.

சொடுக்காதவர்களுக்காக...

சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் தினம் இருபத்தி ஐந்து ரூபாய்க்கும் கீழே சம்பாதிப்பவர்கள் தான் வறுமை கோட்டுக்கு கீழே வாழுபவர்கள் என்று ஒரு கணக்கை கூறி இருக்கிறது. அடப்பாவிகளா...ஒரு டீ ஐந்து ரூபாய் விற்கிறபோது வெறும் இருபத்தி ஐந்து ரூபாயை வைத்துக்கொண்டு ஒரு குடும்பத்தை எப்படி காப்பாற்ற முடியும். இதில் கொடுமை என்னவென்றால் இந்த இருபத்தி ஐந்து ரூபாயில் ஒரு குடும்பத்தின் உணவு, கல்வி மற்றும் மருத்துவ செலவுகள் அனைத்தையும் சமாளிக்க முடியுமாம்.

இப்படி தான் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பித்து இருக்கிறது. எது எதையோ கேள்வி கேக்கும் உச்ச நீதிமன்றம் இந்த விசயத்திலும் மத்திய அரசை கேள்வி கேக்கும் என நம்புவோமாக. கொள்ளை அடித்த பணத்தில் எத்தனை சைபர்கள் இருக்கிறது என எண்ணுவதே கஷ்டமாகி போன காலத்தில் இந்த அரசியல் வியாதிகளுக்கு ஏழை என்றால் யார் என்று புரிய போகிறது.

இப்படியே போனால் 2020 ல் நிச்சயம் நாம் நம்பர் ஒன் ஆகிவிடுவோம்.  பணக்கார பலமான சூப்பர் பவர் நாடாக அல்ல. உலகத்தில்  பிச்சைகாரர்கள் அதிகம் உள்ள நாடாக. ஆம் மாதம் ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான வருமானம் என்பது பிச்சை எடுப்பவர்களை விட கீழான பொருளாதாரம் தானே!?

கொசுறு செய்தி: சன் டி. வி. உரிமையாளர் திரு. கலாநிதி மாறனின் வருட சம்பளம் சும்மா 37,08,00,000 (முப்பத்தி ஏழு கோடியே எட்டு லட்ச) ரூபாய் தான். அவரின் மனைவியும் சன் டி. வியின் இணை மேலான் இயக்குனருமான திருமதி காவேரி மாறனின் வருட சம்பளமும்  37,08,00,000 (முப்பத்தி ஏழு கோடியே எட்டு லட்ச) ரூபாய். அதாவது ஒரு குடும்பத்தின் வருட வருமானம் 74,16,00000  ருபாய்.

அதாவது ஒரு நாளைய சம்பளம் மட்டும் இருவருக்குமாக சேர்த்து
20,31,780 (இருபது லட்சத்து முப்பத்து ஓராயிரத்து எழுநூற்றி என்பது) ரூபாய் 82 பைசா. என்ன என் கணக்கு சரிதானே. 

share on:facebook

3 comments:

Philosophy Prabhakaran said...

திரட்டியில் இணைப்பதற்கு நல்ல நேரம் பார்ப்பீர்களா...?

ஆதி மனிதன் said...

@Philosophy Prabhakaran said...
//திரட்டியில் இணைப்பதற்கு நல்ல நேரம் பார்ப்பீர்களா...? //

நீங்கள் எதை வைத்து இப்படி கேட்டீர்கள் என தெரியவில்லை. ஆனால் எனக்கு காலையில் சிறிது நேரம் கிடைக்கும் போது எனது பதிவுகளை வெளியிட்டு வருகிறேன். மற்ற நேரங்களில் எனக்கு நேரம் கிடைப்பதில்லை.

CS. Mohan Kumar said...

கணவன் - மனைவி இருவரின் சம்பளத்தையும் கணக்கில் எடுத்தால் இந்தியாவில் ஒரு நிறுவனத்தில் அதிக சம்பளம் வாங்கும் நபராக இவர்கள் இருப்பார்கள்

Post a Comment