தூக்கிலிடுவோம் தூக்கை. ஆம், அடுத்தவர் உயிரை ஒருவர் பறித்தார் என்ற காரணத்திற்க்காக அரசே அவரின் உயிரை பறிப்பதென்பது என்னை பொருத்தவரையில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அதிலும் நடை பெற்ற குற்றத்தில் நேரடியாக சம்பந்தப்படாதவரை Rarest of Rare crime பிரிவின் கீழ் தூக்கு தண்டனை வழங்குவது என்பது எந்த வகையில் நியாயம் என தெரியவில்லை.
ராஜீவ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளிகள் அனைவரும் தாங்களாகவோ அல்லது வேறு விதத்திலோ மரணம் அடைந்த பிறகும் பேரறிவாளன் (இவர் கொலையாளிகளுக்கு பாட்டரி வங்கி கொடுத்தார் என்பது ஒரு குற்றம்) போன்றோரை தூக்கில் போடுவது என்பது . நியாயமா என்று தெரியவில்லை.
அதே போல் தான் மற்ற இருவரும். எல்லோரும் ஏதோ ஒரு வகையில் ராஜீவ் கொலையாளிகளுக்கு உடந்தையாக இருந்தார்கள் என்பதுதான் குற்றச்சாட்டு. விடுதலைப்புலிகளின் கட்டுக்கோப்பான, ரகசியத்திற்கு பேர் போன தாக்குதல் திட்டங்களில் இவர்களுக்கு எந்த அளவிற்கு இந்த படுகொலை தாக்குதல் பற்றிய விபரம் தெரிந்திருக்கும் என்பதும் ஒரு பெரிய கேள்விக்குறிதான்.
ராஜீவ்காந்தி என்ற இந்தியாவின் பிரபலமான ஒரு குடும்பத்தில் பிறந்தவர் என்ற காரணத்திற்க்காக என்று இல்லை. அவர் யாராக இருந்தாலும் ஒரு சாதாரண குடும்பத்தை சார்ந்தவராக இருந்தாலும் அவரை கொல்ல யாருக்கும் உரிமை இல்லை. அவரும் இரு குழந்தைகளுக்கு தந்தை. ஒரு குடும்பத்தலைவர். அதற்காக அதே தவறை ஒரு அரசாங்கமும் செய்யலாமா என்பதே என் கேள்வி? அது மட்டுமில்லை. இந்த நாகரீக உலகத்தில் இன்றும் அநாகரீகமா எனக்கு தெரிவது இந்த தூக்கு தண்டனைதான்.
அப்படியே போடவேண்டும் என்றால், கையில் ஏ.கே. 47 உடன் ஒன்றும் அறியா பொதுமக்களை (அரசியலுக்காக ஏதோ ஒரு உடன்பாடு போட்டு இன்று ஒரு இனத்தையே பரதேசிகளாக ஆக்கியவர்கள் அல்ல) சுட்டுக்கொன்றானே கசாப். அவரைத்தான் முதலில் போடவேண்டும் . கையில் துப்பாக்கியுடன் கொலை வெறியுடன் ஒவ்வொரு இடமாக போய் கண்ணில் பட்டவரையெல்லாம் கொன்னானே. அது எல்லாம் வீடியோவாக பதிவாகியுள்ளதே. இதுதான் Rarest of rare crime. இதுதான் சந்தேகத்திற்கு இடமின்றி நடை பெற்ற குற்றம். குற்றவாளி.
பேரறிவாளனோ மற்றவர்களோ அல்ல. கிடைக்குமா தூக்கு தண்டனைக்கு தூக்கு?
share on:facebook
4 comments:
// கிடைக்குமா தூக்கு தண்டனைக்கு தூக்கு? //
அப்ப கசாப விட்டுலாம்னு சொல்லுறீங்களா ?
//அப்ப கசாப விட்டுலாம்னு சொல்லுறீங்களா ?//
மாதவா படிக்காமலே கமெண்ட் போடுறே பாத்தியா?
கொலைக்குக் கொலை தீர்வாகாது.
தூக்கிலிடுவோம் தூக்கை. ஆம், தூக்கிலிடுவோம் தூக்கை...
*************
//விடுதலைப்புலிகளின் கட்டுக்கோப்பான, ரகசியத்திற்கு பேர் போன தாக்குதல் திட்டங்களில் இவர்களுக்கு எந்த அளவிற்கு இந்த படுகொலை தாக்குதல் பற்றிய விபரம் தெரிந்திருக்கும் என்பதும் ஒரு பெரிய கேள்விக்குறிதான்.//
நிச்சயாமாக கேட்கப்பட வேண்டிய கேள்வி இதுதான்.
Post a Comment