சென்ற பதிவில் நண்பர் ஒருவரின் கிறிஸ்துவ முறை திருமண ஆசை பற்றி எழுதி இருந்தேன். அதன் தொடர்ச்சியாக இதோ அந்த திருமண நிகழ்வு பற்றிய ஒரு பதிவு.
ஆம், பெரும்பாலான மேற்கத்திய நாடுகளில் திருமணம் மற்றும் துக்க நிகழ்சிகளில் dressing sense/attire மிக முக்கியம். பெரும்பாலும் திருமணங்களில் பெண்கள் வெள்ளை நிறத்திலும் துக்க நிகழ்சிகளில் எல்லோருமே கருப்பு நிறத்திலும் ஆடை அணிவார்கள். அதிலும் கோட் சூட் தான் அணிவார்கள்.
ஆனால் நம் கலாச்சாரப்படி பெண்கள் வெள்ளை நிற ஆடை உடுத்த தயங்கியதால் நண்பர் பின்பு பெண்களுக்கு ரெட் கலர் ஓகே என தெரிவித்தார். ஒரு வழியாக எல்லோரும் சர்ச்சுக்கு சென்று ஆவலுடன் காத்திருந்தோம் திருமண நிகழ்ச்சியை காண.
சரியான நேரத்திற்கு முதலில் ஒரு ஜோடி கை கோர்த்த படி சார்சினுள் நுழைந்தது. முதலில் வந்த ஜோடியில் ஆண் ராணுவ உடை அணிந்திருந்தார். பின் வரிசையாக மூன்று நான்கு ஜோடிகள் ஒருவருடன் ஒருவர் கை கோர்த்தபடி மெதுவாக நடந்து சர்ச்சின் மேடையில் ஏறி ஆண்கள் வலது புறமும் அவர்களின் ஜோடிகள் இடது புறமும் வரிசைப்படி நின்றனர். சொல்ல மறந்துவிட்டேன். நம் கல்யாண ஜோடி கடைசியாக Coat suit & bridal costume ல் சிரித்தபடி மெதுவாக மேடை ஏறியது.
வழக்கம் போல் அங்கிருந்த பாதிரியார் இருவருக்கும் திருமண உறுதி மொழி எடுக்க செய்து அவர்கள் இருவரும் அந்த கணம் முதல் கணவன் மனைவியாக அறிவிக்கப்பட்டனர். பின் திருமண ஜோடியை ஒருவருக்கொருவர் முத்தம் கொடுத்துக்கொள்ள கேட்டுக்கொண்டார். நண்பர் என்ன நினைத்தாரோ இங்கிலீஷ் ஸ்டைலில் முத்தம் கொடுக்காமல் பெயருக்கு கணத்தில் ஒரு முத்தமிட்டதுடன் நிறுத்திக்கொண்டார். இங்கு திருமண ஜோடிகள் முத்தமிடுவது/விட்டுக்கொண்டேயிருப்பது என்பது ஒரு சகஜமான நிகழ்வு.
பின் அனைவருக்கும் விருந்து பரிமாறப்பட்டது. அப்போது தான் எங்களுக்கு ஒரு செய்தி தெரிய வந்தது. அதாவது, மணப்பெண்ணுக்கு இம்மாதிரி ஒரு திருமண ஏற்பாடு செய்திருப்பதையே சொல்லாமல் நம் நண்பர் அழைத்து வந்துள்ளார். எல்லாத்திலும் வித்யாசமானவராய் இருப்பார் போலும். விருந்துக்கு பின் நடை பெற்ற இன்னொரு நிகழ்ச்சியுடன் இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.
எல்லோரும் கிளம்பி போகும் முன், அணைத்து single man களும் ஒரு இடத்திற்கு அழைக்கப்பட்டார்கள். அந்த கும்பலை நோக்கி ஒரு பெண் அணிந்திருந்த socks ஐ தூக்கி வீசினார்கள். அதை யார் பிடிக்கிறார்களோ அவர்களுக்கு அடுத்து திருமணம் நடக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை. அதே போல் single woman அனைவரையும் ஒரு இடத்திற்கு வர செய்து அவர்களை நோக்கி ஒரு பூச்செண்டை (பெண்களுக்கு மட்டும் பூச்செண்டு, ஆண்களுக்கு நாற்றமடிக்கும் socks என்ன கொடுமை சரவணா இது?) தூக்கி எறிந்தார்கள்.
இறுதியாக 'toast' நடக்கும் என எல்லோரும் எதிர்பார்த்தோம். ஆனால் நண்பர் அதற்க்கு ஏற்பாடு செய்யவில்லை போலும். 'Toast' என்பது, எல்லோரும் வைன் அல்லது ஷாம்ப் பெய்ன் ஒரு சின்ன கிண்ணத்தில் ஏந்தி திருமண தம்பதிகளுக்காக ஒருவருக்கொருவர் சியர்ஸ் செய்து கொள்வது. பொதுவாக திருமண ஜோடியின் நெருங்கிய உறவினர் அல்லது நண்பர்கள் இந்த டோஸ்ட்டை செய்வார்கள். நண்பரின் திருமணத்தில் அவரின் பக்கத்து வீட்டு நண்பர் அவரின் அருமை பெருமைகளை எடுத்துக்கூறி சிம்பாலிக்காக ஒரு வைன் பாட்டிலில் ஸ்பூனால் அடித்து சத்தம் வர செய்து டோஸ்ட் செய்தார். அதாவது வைன்/ஷாம்ப்பெய்ன் பரிமாறாமலேயே!
அத்துடன் திருமண நிகழ்ச்சி நிறைவடைந்தது. எங்களுக்கு அன்றைய பொழுது இனிதே போனது. நண்பருக்கு எங்களது திருமண வாழ்த்துக்களையும் இங்கே பதிவு செய்ய விருபுகிறேன். வாழ்த்துக்கள் நண்பரே.
படம் நன்றி: http://www.engagements.ca/
share on:facebook