Friday, January 14, 2011

மயக்க வைக்கும் இசை - பேத்தோவன் ஓர் ஆச்சர்யம்

அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

ஜெர்மனி நாட்டில் 1770 இல் பிறந்த பேத்தோவன் (Ludwig van Beethoven) மேற்கத்திய கிளாசிக்கல் இசையில் தன் முத்திரையை பதித்தவர். தன் இருபதாவது வயதில் காதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கேக்கும் திறனை இழக்க ஆரம்பித்து சிறுது காலத்தில் கேக்கும் திறனை முழுவதும் இழந்த பிறகும் கூட தானே பாடல் இயற்றி இசை அமைத்து அதை அரங்கேற்றம் செய்வதை நிறுத்தவில்லை.

விடிய விடிய இசை/பாடல் அமைக்கும் போது தூக்கம் வராமல் இருக்க குளிர்ந்த தண்ணீரில் தன் தலையை முக்கி தூக்கத்தை களைத்துக்  கொள்வாராம்.


அவருடைய இனிமையான ஒரு இசை தொகுப்பு இங்கே (என்ன பிரமாண்டம் பாருங்கள்)...இசையை கேட்ட பிறகு இதை ஏதோ ஒரு இந்திய/தமிழ் சினிமா பாடலாக கேட்ட மாதிரி இருக்கிறதா? எனக்கு அப்படிதான் தோன்றுகிறது. ஆனால் எந்த படத்தில் இதை காப்பி அடித்தார்கள் என்றுதான் தெரியவில்லை. தெரிந்தால் பின்னூட்டத்தில் போடுங்களேன். மண்டை காய்கிறது.




அதே போல் இந்த இசையையும் நீங்கள் பல இடங்களில் கேட்டிருக்கலாம். காரின் ரிவர்ஸ் அலாரமாக, வீட்டின் காலிங் பெல் இசையாக. ஹ்ம்ம்..ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே.




நன்றி: You Tube.   
அன்புடன்...
share on:facebook

3 comments:

பொன் மாலை பொழுது said...

பீத்தோவான், மொசார்ட் போன்ற மேதைகைன் பாதிப்பு இல்லாமல் இங்கு எந்த இசை அமைப்பாளர்களும் இல்லை. எனவே திரைப்பட இசையில் இவர்களின் சாயல் வருவதை யாராலும் தவிர்க்க இயலாது.
நல்ல பதிவு.
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

எல் கே said...

http://blogintamil.blogspot.com/2011/01/blog-post_22.html

ஆதி மனிதன் said...

நன்றி மாணிக்கம்.

நன்றி எல். கே.: என்னுடைய பதிவை தாங்கள் வலைசரத்தில் சுட்டி காட்டியமைக்கு.

Post a Comment