Wednesday, January 26, 2011

தாய்பால் விலை அவுன்ஸ் $ 3.50



ரஜினி அண்ணாமலை படத்தில் ஒரு பாட்டு பாடுவார். ...புல்லு கொடுத்தா பாலு கொடுக்கும் உன்னால முடியாது தம்பி...பாதி புள்ள குடிக்குதப்பா பசும் பால தாய் பாலா நம்பி ... என்று. ஆனால் இபோதெல்லாம் 1 %, 2 % மாட்டு பால் போல் தாய்ப்பாலும் சுலபமாக மார்க்கெட்டில் கிடைக்கிறது. என்ன விலைதான் கொஞ்சம் அதிகம். ஒரு அவுன்ஸ் $ 3.50 (ஒரு அவுன்ஸ் தோராயமாக 30 ml).

சமீபத்தில் MPR எனப்படும் மினசோட்டா பப்ளிக் ரேடியோவில் ஒரு நிகழ்ச்சியை கேட்ட போது உண்மையில் இப்படியெல்லாம் நடக்குமா என்ற ஆச்சர்யம் மட்டுமில்லாமல் இதெல்லாம் நல்லதா கெட்டதா என எனக்கு தெரியவில்லை. நீங்கள் சொல்லுங்களேன்...

பல நூறு/ஆயிரம் ஆண்டுகளாக குழந்தை பிறந்ததும் அதற்கு தாய்ப்பால் ஊட்டுவது நம் கலாச்சாரம். இன்னும் கூட விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரை தவிர எனக்கு தெரிந்து பெரும்பாலான தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய் பால் ஊட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் அப்படியில்லை. தாய்பால் ஊட்டுவதை தங்கள் கடமை என நினைப்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆனால் தற்போது அங்குள்ள தாய்மார்களும் தாய்ப்பாலின் அருமையை புரிந்து கொள்ள ஆரம்பித்துள்ளார்கள். இது நல்ல விஷயம் தான் என்றாலும் தாய்ப்பாலையே அவர்கள் பாணியில் சந்தைபடுத்தி இருப்பதை என்னும்போது தான் வேதனையாக இருக்கிறது.


ஆம் தற்போது அமெரிக்காவில் தாய்பால் விற்பனை என்பது சர்வசாதாரணமா நடக்கிறது. ஒரு அவுன்ஸ் தாய்பால் $ 1.50 இருந்து $ 3.50 வரை விற்கபடுகிறது. சில தாய்மார்கள் இலவசமாகவும் தங்களின் தாய்பாலை தேவைப்படும் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு  தந்து உதவுகிறார்கள்.

நீங்கள் என்ன கேக்க போகிறீர்கள் என எனக்கு தெரியும். இப்படி செய்தால் குழந்தைகளுக்கு மற்றவர்களின் தாய்பால் மூலம்  கிருமிகள் பரவ வாய்ப்பிருக்கிறதே என்று தானே? அதற்க்காகதான் தாய்பாலை வாங்கும் முன் அந்த தாயின் medical history மற்றும் blood test results என அனைத்து வகையான பரிசோதனை முடிவுகளை தெரிந்து கொண்டு தான் தாய்பாலை வாங்குகிறார்கள். இருந்தும் அரசாங்கம் மற்றும் சமூக நல அமைப்புகள் இது சற்று ஆபத்தான விஷயம் என்கிறார்கள்.  

இதைப்பற்றி தாய்பால் வாங்கும் ஒரு தாயிடம் கேட்டபோது, பாலை விற்கும் தாயின் உடல்நலத்தை தெரிந்து கொள்வதோடு அந்த தாயின் குழந்தைகளின் உடல் நலத்தை பற்றியும் தெரிந்து கொண்டுதான் நான் பாலை வாங்குகிறேன். பாலை கொடுக்கும் தாயின் குழந்தைகள் நல்ல புஷ்டியாக இருந்தால் என் குழந்தையும் புஷ்டியாக தானே வளரும் என கூறுகிறார்.

பெரும்பாலான தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு கொடுத்தது போக மிச்சம் இருக்கும் பாலைத்தான் அடுத்தவர்களுக்கு கொடுப்பதாக கூறுகிறார்கள். ஒரு வகையில் பார்த்தால் இது ஒரு மிக சிறந்த உதவி/தியாகம் என்றே கூறலாம். சிலர் அதற்காக காசு கூட வாங்குவதில்லை என்பதும் உண்மை.

வெகுதூரம் பயணத்தில் இருந்த தாய் ஒருவர் தன் குழந்தை பாலுக்காக அழுவதை கண்டு ஆன்லைனில் பக்கத்தில் ஒருவர் தாய்ப்பால் தருவதை அறிந்து அவரிடம் தொடர்புகொண்டு போகும் வழியிலேயே அவரின் கணவர் கூலர் பெட்டியில் கொண்டு வந்து கொடுத்த தாய்பாலை தன் குழந்தைக்கு கொடுத்ததாக தன் பெட்டியில் தெரிவித்தார்.

பெரும்பாலான breast milk trading ஆன்லைன் மூலமாக நடக்கிறது. பதிவு செய்யப்பட்ட தாய்பால் சேமிப்பு கிடங்குகள் அமெரிக்காவில் பத்துக்கும் மேற்ப்பட்ட இடங்களில் செயல்படுகிறது. மற்றபடி ஒன்றிரண்டு மாகாணங்களில் (நியூயார்க், கலிபோர்னியா) தாய் பால் விற்பனை சட்ட விரோதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்ப சொல்லுங்கள்...தாய்பால் விற்பனை நல்லதா கெட்டதா?

ஆமா, சென்னையில் தான் இந்தியாவிலேயே பெண்களுக்கு அதிக பாதுகாப்பாமே! சமீபத்தில் NCRB வெளியிட்ட அறிக்கையில் பெண்களுக்கு அதிக பாதுகாப்பு இல்லாத நகரங்களின் வரிசையில் கடைசி இடத்திற்கு முன் இடத்தை சென்னை பிடித்திருக்கிறது. கடைசி இடம் தன்பாத்துக்கு. கடைசியாக இருந்தாலும் இது பெருமைப்பட வேண்டிய விஷயம் தானே!


share on:facebook

9 comments:

CS. Mohan Kumar said...

அதிர்ச்சியா இருக்கு

Madhavan Srinivasagopalan said...

நல்ல தகவல்
பகிர்விற்கு நன்றி..

Philosophy Prabhakaran said...

ஆச்சர்யமா இருக்கு... சில சமயங்களில் நல்லது தான்... தாயை சிறு வயதிலேயே இழந்தவர்கள், ஒருவேளை தாய் நோய்வாய்ப்பட்டால் பயனுள்ளதாக இருக்கும்... எனினும் நம் நாட்டு நவநாகரிக யுவதிகள் சீரழியவும் இது ஒரு வாய்ப்பாக அமையும்...

ஸ்ரீராம். said...

முதல் செய்திக்கும், கடைசி பாராவுக்கும்...
"அப்படியா?"

புதுசு புதுசா வியாபாரம். எதையும் சந்தைப் படுத்தும் டெக்னிக்.

ஆதி மனிதன் said...

@மோகன் குமார்

//அதிர்ச்சியா இருக்கு //

இங்க இதெல்லாம் சாதாரணமா எடுத்துக்குவாங்க மோகன்.

ஆதி மனிதன் said...

@Madhavan Srinivasagopalan

நன்றி மாதவன்.

ஆதி மனிதன் said...

@Philosophy Prabhakaran said...

தங்களின் இரண்டு கருத்துக்களையும் அமோதிக்கிறேன்.

ஆதி மனிதன் said...

@ஸ்ரீராம்.

//புதுசு புதுசா வியாபாரம். எதையும் சந்தைப் படுத்தும் டெக்னிக்//

அமெரிக்கர்கள் இதில் டாப்.

சாய்ராம் கோபாலன் said...

குழந்தைகளை அதிகம் பெற்று கொள்ளுவது மெக்சிகர்கள் மற்றும் ஆப்ரிகர்கள். யூதர்களும் கூட. குழந்தை பிறந்தால் ஒழிய பால் சுரக்காது.

இந்த ஊரில் பலர் (பெண்கள்) புகைப்பிடிப்பதால் மற்றும் போதைபழக்கம் சிறு வயதில் கொண்டு இருக்க சாத்தியங்கள் உள்ளதால் - ஏனோ தாய்ப்பால் விநியோகம் நல்லதாக படவில்லை ?

எங்கள் குடும்பம் எதையுமே கேவலமாக யோசிக்கும் (பிரக்டிகல் ஜோக் வகை) - அப்படி வந்த ஜோக் இது. முடிந்தால் சிரியுங்கள் இல்லையேல் சாய் குடும்பத்தை திட்டாதீர்கள்.

இந்தியாவில் "ஆரோக்யா மில்க்" விளம்பரம் நினைவிருக்கின்றதா ? 4 1/2 % milk ??? நாங்கள் அர்ஜுனுக்கு நாலரை என்றால் மிச்சம் 95 1/2 அப்பாவுக்கா என்று கேட்ப்போம் !! கேட்ட பசங்க நாங்கள் !!

Post a Comment