Sunday, January 23, 2011

நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கணவில்...



பொதுவாகவே நான் என்னுடைய வலைதளத்தில் தொடர்ந்து (மற்றவர்களை போல) எழுத முடிவதில்லை. அதே போல் பிற வலைதளங்களுக்கு வழக்கமாக விசிட் அடித்தாலும் பதிவுகளை படித்த பிறகு அதற்கு ஒரு பின்னூட்டமோ அல்லது கமென்ட் போடவோ நேரமின்றி அப்படியே போட்டாலும் அவர்களின் பதிவே பழையதாக போனபிறகுதான் என் கமென்ட் அங்கு ஏறும்.



இதையெல்லாம் தாண்டி தற்போது எங்கள் குடும்பத்தில் நிகழ்ந்த ஒரு துயர சம்பவம் என்னை மேலும் முடக்கி போட்டுவிடுமோ என்ற ஐயம் எனக்கு ஏற்படுகிறது.

ஒரு நிமிடம் கண்களை மூடி நாம் ஏன் இந்த உலகத்தில் பிறந்தோம், எதற்காக வாழ்கிறோம் முடிவில் என்ன ஆக போகிறது என நினைத்தால் இதுவரை நாம் வாழ்ந்த வாழ்க்கையே நமக்கு முன்னால் ஒரு கேள்விகுறியாகிப் போகிறது.

நேற்று இருந்தவர் இன்று இல்லை. இன்று இருப்பவர் நாளை இருப்பாரா தெரியவில்லை. அதை செய்யக்கூடாது இதை செய்தால் கெடுதல் என கூறுகிறோம். இது எதையும் செய்யாமலேயே சிலருக்கு எல்லா வியாதிகளும் வருகிறது. அதுதான் ஏன் என்று புரியவில்லை.

வெளிநாட்டில் பலகாலம் பணிபுரிந்து சொந்த நாட்டிற்கு வந்த பிறகு ஒவ்வொருவர் ஒவ்வொரு மாதிரி தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்வார்கள். என் பாசமிகு சகோதிரியின் கணவர் எங்களையெல்லாம் மீளா துயரத்தில் விட்டுவிட்டு போய்விட்ட என் அத்தான், பலவருட வெளிநாட்டு வாசத்திற்கு பிறகும் தாய் நாடு திரும்பி இந்தியாவின் முதுகெலுமாம் விவசாயத்தில் நாட்டம் கொண்டு அதை நவீன உத்திகள் கொண்டு திறம்பட நடத்திக்கொண்டிருந்த வேளையில் திடீரென்று வந்த மாரடைப்பு காரணமாக சென்ற வாரம் எங்களையெல்லாம் விட்டு பிரிந்து விட்டார்.

நான் மேலே கூறியதை போல் எந்த ஒரு தீய பழக்கங்களும் இன்றி தினமும் உடல் உழைத்து வந்தவர். அவருடைய ஆத்மா சாந்தியடையவும் என் சகோதிரி மற்றும் அவரின் குழந்தைகளுக்கு மண தைரியம் கிடைக்கவும் இறைவன் ஒருவன் இருந்தால் அவனை வேண்டிக்கொள்கிறேன்.

ஒன்றே ஒன்று நண்பர்களே...இருக்கும் வரை சந்தோசமாகவும் ஏதோ நம்மால் முடிந்த அளவு பிறருக்கு உதவியாகவும் இருங்கள்...Life is short. Live as much.




share on:facebook

7 comments:

Madhavan Srinivasagopalan said...

அவரது இழப்பிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்..

//ஒன்றே ஒன்று நண்பர்களே...இருக்கும் வரை சந்தோசமாகவும் ஏதோ நம்மால் முடிந்த அளவு பிறருக்கு உதவியாகவும் இருங்கள்...Life is short. Live as much. //

உண்மை.. வாழும் வரை, அடுத்தவருக்கு தீங்கிழைகாது, மகிழ்ச்சியாக வாழுங்கள்..

Chitra said...

I am terribly sorry to hear this sad news. அவர் ஆத்மா சாந்தியடையவும், அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆறுதலும் தேறுதலும் கிடைக்கவும் பிரார்த்திக்கிறேன்.

சாய்ராம் கோபாலன் said...

அன்புள்ள நண்பரே

துயரம் உங்களுக்கு மட்டும் அல்ல எனக்கும் தான். உங்கள் சகோதரி கணவருக்காகவா என்னை ஐயப்ப தரிசனத்தின் போது வேண்டிக்கொள்ள சொன்னீர்கள். நான் எவ்வளவு ஆறுதல் சொன்னாலும் தாங்காது. இந்தியா சென்று இருக்கின்றீர்களா ? முடிந்தால் இன்று உங்களை தொலைபேசியில் அழைக்கின்றேன்.

உங்கள் பல வரிகள் உண்மை. என் சொந்த வாழ்க்கையில் நடக்கும் போராட்டம், என் மன அமைதி, என் அனாவசிய கோவங்கள் என்று நினைத்து எனக்கே என்னை நினைத்தால் வெட்கம் வரும் அளவுக்கு இருக்கும் நிலையில் உங்கள் வரிகள் சில செருப்படி போல் விழுந்தது உண்மை.

நண்பரே, உங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

- சாய்

CS. Mohan Kumar said...

ஆழ்ந்த இரங்கல்கள் நண்பா. அவருக்கு என்ன வயது என்று கூற வில்லை. அறுபதுக்கு மேல் என்றால் மரணத்தை சற்றாவது ஜீரநிக்கலாம். அதற்கு முன் என்றால் பெரும் கொடுமை தான்.

ஒரு விதத்தில் மரணம் என்பது ஓர் விடுதலை. கஷ்டம் இறந்தவருக்கு அல்ல. (அவர் இல்லாமல்) இருப்பவர்களுக்கு தான். தங்கள் அக்காவிற்கும் அவர் குடும்பத்திற்கும் தைரியத்தை இறைவன் வழங்க வேண்டுகிறேன்

ஆதி மனிதன் said...

நன்றி நண்பர்களே.

உங்களின் ஆதரவான வார்த்தைகளும் காலமுமே எங்களின் காயத்தை ஆற்றும் வல்லமை கொண்டது.

கிருபாநந்தினி said...

அன்புள்ள ஆதி அண்ணா! உங்க பதிவைப் படிச்சப்புறம் மனசு ரொம்பக் கலங்கிப் போச்சுங்கண்ணா. ஒரு நாலு மாசம் முன்னே வரைக்கும், இதே நிலைமையிலதான் நானும் இருந்தேன். மனசைத் தளரவிடாதீங்கண்ணா! காலம் எல்லாக் காயங்களையும் ஆத்தும்! தைரியமா இருங்க.

ஆதி மனிதன் said...

@ கிருபாநந்தினி said... //காலம் எல்லாக் காயங்களையும் ஆத்தும்! தைரியமா இருங்க. //

நன்றி சகோதிரி.

Post a Comment