Wednesday, August 24, 2011

தமிழ் புத்தாண்டும் முட்டாள் தமிழனும்


நேற்று சட்ட மன்றத்தில் பேசிய தமிழக முதல்வர், யாருக்கும் பலனளிக்காத, தமிழக மக்களின் மனதை புண்படுத்திய புதிய தமிழ் புத்தாண்டு தினத்தை மீண்டும் பழைய தினத்துக்கே மாற்றப்போவதாக அறிவித்தார். எத்தனை பேர் அவரிடம் தங்கள் மனது புண்பட்டுவிட்டதாக எடுத்துக்கூறினார்களோ  தெரியவில்லை. 

ஆண்டாண்டு காலமாக பழக்கத்தில் உள்ள, மக்கள் நம்பிக்கையில் அரசு  தலையிட  கூடாது என்று வாதிடுகிறார். அப்படி பார்த்தால் உலகம் தட்டை என்று பைபிளில் கூறியுள்ளது தவறுதான் என்று ஏன்  கிறிஸ்துவர்கள் எல்லோருக்கும் தலைவராக உள்ள  போப் ஆண்டவர் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஒத்துக்கொள்ள வேண்டும்.

அது மட்டுமா, ஆண்டாண்டு காலமாக நடை பெற்று வரும் பொங்கல் திருநாளை ஒட்டிய மாட்டுப்பொங்கலின்  போது நடை  பெரும் மஞ்சு விரட்டுக்கு தற்போது ஏன் தடை விதிக்க வேண்டும்? தமிழ் புத்தாண்டைப்பற்றி பல இலக்கியங்களில் சொல்லப்பட்டிருப்பதாக பேசும் முதல்வருக்கு திராவிட இயக்கங்கள் போற்றி புகழும் புரட்சி கவிஞர் பாரதிதாசனின் பாடலை  யாராவது எடுத்துக்கூறினால் தேவலை. 

"நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்.
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!"

-பாரதிதாசன்.

மேலும் தமிழ் புத்தாண்டு பற்றி பல அரிய தகல்வல்கள் தெரிந்து  கொள்ள நண்பர் டான் அசோக் அவர்கள் பதிவு  இங்கே.

share on:facebook

2 comments:

Madhavan Srinivasagopalan said...

உங்களின் கருத்திலிருந்து நான் மாறுபடுகிறேன்.........

கண்டிப்பாக பெரும்பாலான தமிழ்நாட்டு வாசிகளின் சென்டிமென்ட்டை கஷ்டப் படுத்தும் விதத்தில், பல வருண்டங்களாக.. தலைமுறை தலைமுறையாக கொண்டாடி வரும் சித்திரை புத்தாண்டை ஏதோ ஒரு காரணத்தால் ஒரு தனிப்பட்ட மனிதர்.. ஆம்.. மக்களுக்கு நன்மை செய்வது எப்படி எனத் தெரியாத, சுயநலத்தை மட்டுமே கருத்தில் கொண்ட ஒருவரால், மாற்றி அமைக்கப் பட்டபோது அதனை நீங்கள் எப்படி எடுத்தக் கொண்டீர்கள் என எனக்குத் தெரியாது.. தெரியவும் வேண்டாம்.....

இப்போது மாற்றியதை அரசியலாக்க வேண்டாம்... நாமாவது எது தேவையோ அதனைப் பற்றி சிந்திப்போமே.. அதுதான் அடுத்த சந்ததியினருக்குப் பயன்படும்.

கண்டிப்பாக பெரும்பாலான மக்களுக்கு இது ஆறுதலாக இருந்திருக்கும் என நம்புகிறேன்... ஆம் பலரும்(பெரும்பாலும்) தங்கள் வீட்டில் சித்திரையைத்தான் ஆண்டுப் பிறப்பாக கொண்டாடியதாக நான் நம்புகிறேன்.

மேலும், சித்திரையை ஆண்டின் முதல் மாதமாகக் கொள்வதில் அறியியல் / வானவியல் சார்ந்த தகவல் ஒன்றினை நண்பர் ஒருவர் இணையதளத்தில் படித்ததாக நினைவு.. பின்னர் சுட்டி தருகிறேன்.

ஆதி மனிதன் said...

//ஆம் பலரும்(பெரும்பாலும்) தங்கள் வீட்டில் சித்திரையைத்தான் ஆண்டுப் பிறப்பாக கொண்டாடியதாக நான் நம்புகிறேன்.//

உண்மை தான். நாங்களும் சித்திரையில்தான் கொண்டாடி வந்தோம். ஆனால் பல காலமாக தொடர்ந்து கொண்டாடி வருகிறோம் என்ற ஒரே காரணத்திற்காக அதன் வரலாறு குறித்து தெரியவரும் போது அதை தானாக ஏற்றுக்கொண்டு மாற்றிக்கொள்வதில் ஒன்றும் தவறு இல்லை என்பது தான் என் கருத்து. அதற்கான எடுத்துக்காட்டுகளை தான் மேலே குறிப்பிட்டுள்ளேன்.

நன்றி மாதவன்.

Post a Comment