Wednesday, August 17, 2011

யோஷிமிட்டீ : காடு, கரடிகளுக்கு நடுவே ஓர் இரவு தங்கல் (Camping)


மீண்டும் ஒரு சுற்றுலா. இந்த முறை கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள யோஷிமிட்டீ (Yosemite) என்ற ஒரு மலையில் அமைந்துள்ள தேசிய பூங்காவிற்கு. அமெரிக்காவில் இயற்கை வளங்கள் மிகுந்த பகுதிகளில் மக்கள் சென்று பொழுது போக்க அதை சிறிதளவு பூங்காக்களாக மாற்றி அதை தேசிய பூங்காவாக அறிவித்துவிடுவார்கள். இவைகள் பெரும்பாலும் காடுகள் போல் இருப்பதால் அதை ரேஞ்சர்கள் பொறுப்பில் விட்டுவிடுவார்கள்.


யோஷிமிட்டீ பூங்காவில் பல அம்சங்கள் உள்ளன. பெரிய பெரிய நீர்வீழ்ச்சிகள், கிரானைட் மலைகள், பெரிய பெரிய மரங்கள் என பார்ப்பதற்கு பல உள்ளன. இதை தவிர அங்கு ட்ரெக்கிங் செல்வது/காம்பிங் செய்வது மிகவும் பிரபலம்.


அமெரிக்காவிலேயே மிக உயர்ந்த நீர் வீழ்ச்சி(யோஷிமிட்டீ பால்ஸ்) இங்கு தான் உள்ளது. உலகத்திலேயே இது ஐந்தாவது உயர்ந்த நீர்வீழ்ச்சி. இது தவிர நிறைய நீர்வீழ்ச்சிகளும் அங்கு உள்ளது. அதில் என்னை மிகவும் கவர்ந்தது ப்ரைடல்வீல் (bridalveil) எனப்படும் நீர்வீழ்ச்சி. இந்த நீர்வீழ்ச்சியை பார்க்கும் போது கிறிஸ்தவ மணப்பெண்கள் அணியும் வெள்ளை நிற உடை போல் நீண்டு வளைந்து காற்றில் அசைந்து தண்ணீர் விழும் அழகே தனி.

அதே போல் யோஷிமிட்டீ பால்ச்சும். அப்பர், லோயர் என இரு நீர்வீழ்ச்சிகள் மேலிருந்தும் பின் நடுவிலிருந்தும் விழும் அழகே தனி. யோஷிமிட்டீக்கு மேலும் அழகு சேர்ப்பது அங்குள்ள மிக உயர்ந்த மரங்கள். எல்லாம் பல நூறாண்டுகள் பழமை வாய்ந்த மரங்கள். அவைகளை கண்ணும் கருத்துமாய் பாதுகாத்து வருகிறார்கள்.



மலை முகடுகள்/குன்றுகள் ஆங்காங்கே நிறைய இங்கு உள்ளது. அதில் பிரபலமானது ஹாப் டோம். ஒரு பெரிய மலையை பாதியாக வெட்டி எடுத்தால் எப்படி தெரியுமோ அப்படி காட்சி அளிக்கும் கிரானைட் மலை. சும்மா பள பள வென்று மாலை நேர சூரிய ஒளியில் தங்கம் போல் மினு மினுக்கிறது(இதில் சும்மா ஒரு டன் நமக்கு கிடைச்சதுனா போதும். ஆயிசுக்கும் செட்டில் ஆயிடலாம்). அதன் அருகே சிறிய ஓடை. பெரியவர்கள் மலை பார்த்து ரசித்துக்கொண்டு இருக்க சிறுவர்கள் அந்த நீரோடையில் வெயிலுக்கு இதமாக தண்ணீரில் நனைந்து விளையாடுவதை எப்போதும் காணலாம்.


இரண்டு நாள் யோசிமிட்டி சுற்றியதில் நேரம் போனதே தெரியவில்லை. முதல் நாள் யோசிமிட்டியில் சுற்றி பார்த்துவிட்டு அதே தினம் மாலை சற்று அருகில் உள்ள மாலை/காடு பிரதேசத்தில் காம்பிங் செய்வதாக திட்டம். அதன்படி மாலை ஆறு மணிக்கு காம்பிங் சைட்டுக்கு சென்று விட்டோம். அருவி ஒன்று அருகில் ஓட அதற்கு பக்கத்தில் உள்ள மலை அடிவாரம் தான் எங்கள் காம்பிங் சைட்.


அமெரிக்காவில் எனக்கு மிகவும் பிடித்தது என்ன செய்வதாக  இருந்தாலும் அதற்கு தேவையானதை தேடியோ அதற்கு என்ன செய்வது என்றோ நாம் முழிக்க வேண்டியதில்லை. காம்பிங் செல்ல வேண்டுமென்றால் வால் மார்ட் சென்றால் போதும். காம்பிங்க்கு வேண்டிய டென்ட், லாந்தர், பையர் லாக் எனப்படும் மரத் துண்டுகள் முதற்கொண்டு எல்லாம் ஒரே  இடத்தில் கிடைக்கும். முதல் தடவை செல்பவர்கள் கூட எளிதாக தங்களை தயார் படுத்திக்கொள்ள முடியும்.

அப்புறம் புகைப்படங்கள் எல்லாம் நானே எடுத்தது. வேறு யாரும் எடுத்துக் கொடுத்ததோ, கூகுளில் சுட்டதோ இல்லை. ஆமா. 

தொடரும்... 

share on:facebook

4 comments:

CS. Mohan Kumar said...

ஹும் (பொறாமை??? லைட்டா.. )

ஆதி மனிதன் said...

நன்றி மோகன்:
வாங்க ஒரு எட்டு நீங்களும். சுற்றி காண்பிக்கிறேன்.

சாய்ராம் கோபாலன் said...

ஆதி

போன வருடம் நான் அங்கே சுத்திக்கொண்டு இருந்தேன். இந்த வருடம் நீங்கள். போட்டோக்கள் அருமை. வர்ணனையும் அருமை.

நீங்கள் ஹெட்ச் ஹெட்ச் நீர்த்தேக்கம் போனீர்களா ? அந்த வழியில் ஒரு லேக் இருக்கும் - அருமையோ அருமை. என் மகன்கள் இருவரும் நன்கு நீச்சல் அடித்து குளித்தார்கள்.

நான் பத்து நாள் கலிபோர்னியா / ஒரேகோன் சுற்றினேன்.

ஆதி மனிதன் said...

நன்றி சாய்.

//நீங்கள் ஹெட்ச் ஹெட்ச் நீர்த்தேக்கம் போனீர்களா ?//

இல்லை சாய். நிறைய இடங்கள் இருந்தது. ஆனால் செம கூட்டம். ஆகையால் எல்லா இடங்களையும் பார்க்க முடியவில்லை.

Post a Comment