Friday, August 24, 2012

பதிவுலக மாநாடு. அமெரிக்காவிலிருந்து ஆதிமனிதன் ஆஜர்

பதிவுலக மாநாடு. அமெரிக்காவிலிருந்து ஆதிமனிதன் ஆஜர். இப்படி எழுத ஆசைதான். இப்படி எழுதியும் கூட இருக்கலாம். ஒரு சின்ன 'ஸ்லிப்'. ஆகஸ்ட்டில் நடக்கும் மாநாட்டிற்கு ஜூனில் வந்துவிட்டேன்.

ஓரிரு வாரங்களுக்கு முன் மாநாடு பற்றிய செய்திகள் வந்தபோது ஆஹா நமக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது என மகிழ்ந்திருந்தேன். அப்போது பார்த்தா என்னை மும்பைக்கு அனுப்ப வேண்டும் என் கம்பெனி? நண்பர் (வீடு திரும்பல்) மோகன் கூட என்னை அலை பேசியில் அழைத்து மாநாடு பற்றி கூறி அவசியம் வர வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

சரி மும்பையில் இருந்தாலும் அந்த வாரம் மட்டும் சென்னைக்கு எஸ்கேப் ஆகி மாநாட்டில் ஆஜர் ஆகிவிடலாம் என நினைத்திருந்த போது தான் வீட்டில் மனைவிக்கு சற்று உடல் நிலை சரியில்லாமல் போக கடந்த வாரமே இரு முறை சென்னை செல்ல நேர்ந்து விட்டது. அதனால் இந்த வாரம். மிகுந்த வருத்தத்துடன் கூறிக் கொள்கிறேன். No  way.

ஆனால் கடந்த ஓரிரு வாரமாக வலை உலகம் படும் பாடு அப்பப்பா...எந்த ஒரு கேப்பையும் விடாமல் பதிவர்கள் பதிவர் சந்திப்பை வைத்து பதிவாக போட்டு தாக்குகிறார்கள். 'ஆரிய கூத்தாடிக்கு காரியத்தில் கண்ணு'  என்று சொல்வார்கள். அது போல், பதிவர் மாநாட்டுக்கு போகலாமா வேண்டாமா? பதிவர் மாநாடு அவசியமா? பதிவர் மாநாட்டை புறக்கணிப்போம்....என்று மாநாட்டை வைத்து எத்தனை பதிவுகள். அப்புறம் நான் மட்டும் சும்மா இருப்பேனா?

அதான், பதிவர் மாநாட்டுக்கு, அமெரிக்காவிலிருந்து ஆதிமனிதன் ஆஜர்...ஹி  ஹி ஹி ....   

எப்படி இருந்தாலும் பதிவர் மாநாடு சிறப்புடன் நடை பெற என் இனிய வாழ்த்துக்கள். மாநாட்டை பற்றி சுட சுட பதிவுகளை ஆவலுடன் எதிர் பார்த்திருக்கும் நூற்றுக்கணக்கான பதிவர்களில் நானும் ஒருவனாக இருப்பேன்.

அதோடு அடுத்த மாநாடு எப்போ என விழா குழுவினர் அறிவித்தால் இன்னும் சந்தோசம்.

share on:facebook

2 comments:

MARI The Great said...

//
மாநாட்டை பற்றி சுட சுட பதிவுகளை ஆவலுடன் எதிர் பார்த்திருக்கும் நூற்றுக்கணக்கான பதிவர்களில் நானும் ஒருவனாக இருப்பேன்.
//

அந்த லிஸ்டில் நானும் இருக்கிறேன் நண்பரே!

ஆதி மனிதன் said...

@வரலாற்று சுவடுகள் said...
//அந்த லிஸ்டில் நானும் இருக்கிறேன் நண்பரே!//

இன்னும் பலரும் கூட. காத்திருப்போம்.

Post a Comment