Thursday, August 23, 2012

IT (வேலை) படுத்தும் பாடு 

ஒவ்வொரு தொழிலிலும் நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு. உதாரணத்திற்கு சினிமாவை எடுத்துக் கொண்டால் நடிகர்/நடிகையர் எல்லோரும் சந்தோசமாக வாழ்வதாக நாம் நினைத்தால் அதை விட முட்டாள்தனம் வேறு ஏதும் இல்லை.

அது போல் தான் இந்த IT  துறையும். பணம் வேண்டுமானால் அவர்கள் ஒரு மாவட்ட கலெக்டரை விட அதிகம் சம்பாதிக்கலாம். நடிகர்களை போல பல நாடுகள் சுற்றி பார்க்கலாம். ஆனால் அவை ஒன்றொன்றுக்கும் அவர்கள் படும் பாடும் இழப்பதும் அதிகம்.

முதலில் IT யில் வேலை கிடைப்பது ஒன்றும் முன் போல் சாதாரண விஷயம் இல்லை. எல்லோரும் புத்திசாலிகளாக பிறப்பதில்லை. அதி புத்திசாலி மாணவர்கள் சிலரை தவிர மற்ற எல்லோரும் இந்த வேளையில் சேருவதற்கு படும் பாடு அவர்களிடம் கேட்டால் தான் தெரியும். வருடத்திற்கு ஒன்றரை லட்சம் மாணவர்களுக்கு மேல் தமிழகத்திலிருந்து மட்டும் இஞ்சினியர்களாக வெளியே வருகிறார்கள். இவர்களில் ஐந்தில் ஒரு பகுதி மாணவர்கள் கூட நேரடியாக வேலை வாய்ப்பு பெறுவதில்லை.

மற்ற எல்லோரும் குறைந்தது ஆறு மாதத்திலிருந்து இரண்டு வருடம் மூன்று வருடம் படாத பாடு பட்டு தான் இத்துறைக்குள் நுழைய முடிகிறது. இந்த காலத்தில் இவர்கள் அதை படித்தால் வேலை கிடைக்கும் இதை படித்தால் வேலை கிடைக்கும் என்று பணம் செலவழித்து படிப்பதும், ஒவ்வொரு கம்பெனியாக நேர்முகத் தேர்வுக்கு அலைவதை போல் ஒரு கொடுமை வேறொன்றும் இல்லை. இதை விட பெரிய கொடுமை இவர்களோடு படித்த மற்ற மாணவர்கள் நல்ல கம்பெனிகளில் வேலைக்கு சேர்ந்திருந்தால் மற்றவர்களாலும், வீட்டில் உள்ளவர்களாலும் இவர்களுக்குள் ஏற்படும் குற்ற உணர்ச்சி தாங்க முடியாதது. இவை எல்லாம் இவர்களின் தன்னம்பிக்கையை சில நேரம் பதம் பார்த்து விடும்.

இதெல்லாம் முடிந்து ஒரு வழியாக வேலை கிடைத்தது என்றால் அது நிச்சயம் உள்ளூரில் இருக்காது. ஏன், நம் மாநிலத்தில் கூட இருக்காது. பெங்களூரு, மும்பை என அனுப்பி விடுவார்கள். அங்கு நமக்கு இந்தியும் தெரியாமல் முகங்களையும் தெரியாமல் ஓரிரு ஆண்டு வேலை பார்த்த பிறகு தான் 'டிரான்ஸ்பர்' என்ற பேச்சையே எடுக்க முடியும். அநேகமாக தற்போது எல்லா கம்பெனிகளும் இரண்டு வருடத்திற்காவது 'பான்ட்' போட்டு விடுவார்கள். நம்மூரிலேயே வேறொரு வேலை கிடைத்தாலும் இடையில் மாற முடியாது.

இதையெல்லாம் சமாளித்து ஓரளவு ஸ்டெடி ஆகும் போது அவன்லாம் அமேரிக்கா போகிறான் ஆஸ்ட்ரேலியா போகிறான் நீ எப்ப போக போற என்று அடுத்தட கட்ட 'பியர் பிரஷர்' வந்து விடும். சும்மாவா, பக்கத்து சீட்டு காரன் ஒரு மூணு மாதம் அமேரிக்கா போயிட்டு வந்ததிற்கே கைல ஐபோன் ஐபாட்னு சுத்திக்கிட்டு அலைஞ்சா நம்மால சும்மா இருக்க முடியுமா? அடுத்த போராட்டம் எப்படியாவது 'ஆன் - சைட்', அதாங்க அமேரிக்கா அல்லது வேறு நாடு போறதுக்கு என்னவெல்லாம் பண்ணனும்னு ராவும் பகலும் நேரம் பார்க்காம பிராஜக்ட் மேனேஜர் சொல்ற வேலையெல்லாம் பாத்துக் கொடுக்கணும்.

ஒரு வழியா எவனோ ஒருத்தன் கல்யாணத்திற்கு இந்தியா வரான்னு அந்த கேப்புல நமக்கு ஒரு சான்ஸ் கிடைத்து அமேரிக்கா போனா அது மட்டும் சும்மாவா? அமேரிக்கா போறது அப்படி என்ன கஷ்டமான்னு கேகுறீங்களா? சொர்கத்துக்கே டிக்கெட்  வாங்கி போயிட்டு வந்துடலாம். ஆனா இந்த அமேரிக்கா போறது அப்படி ஒன்னும் ஈசி இல்லீங்கோ...

அதை பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்...

   

share on:facebook

10 comments:

அப்பாதுரை said...

interesting. அடுத்து என்ன சொல்லப்போறீங்க?

பழனி.கந்தசாமி said...

அப்போ அமெரிக்கா போறது சொர்க்கத்திற்கு போறது மாதிரி அப்படீங்கறீங்க. அப்ப நான் 1990 லயே சொர்க்கத்தைப் பார்த்துட்டனுங்க.

ANaND said...

தல... இந்தவாட்டி அடி கொஞ்சம் பலமோ

krish said...

தொடர்ந்து எழுதுங்கள்,எதிர்பார்த்திருக்கிறேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

பல தகவல்கள் அறிய முடிந்தது...

தொடருங்கள்... நன்றி...

பழூர் கார்த்தி said...

ஹா ஹா.. நல்லா எழுதி இருக்கீங்க.. ஐ.டி வேலை என்னால் ஈசி.. காலை ஆட்டிக்கொண்டே ஹாயாக இருக்கலாம் என்று பலரும் நினைக்கிறார்கள்.. கம்யூட்டர் இஞ்சினியரிங்க் படிச்சுட்டாலே 30000 சம்பளத்துல வேலைதான்னு நினைக்கிறாங்க.. அவங்களுக்கெல்லாம் உங்க பதிவு ஒரு விழிப்புணர்வா அமையும்னு நினைக்கிறேன், தொடர்ந்து எழுதுங்கள்! வாழ்த்துகள்!

***

நானும் அமெரிக்காவில்தான் வசிக்கிறேன், உங்களது "ஆ"மெரிக்கா பதிவுகளின் ரசிகன் :)

ஆதி மனிதன் said...

@அப்பாதுரை said...
//interesting. அடுத்து என்ன சொல்லப்போறீங்க?//

நிறைய இருக்கு நண்பரே. வரும்....

ஆதி மனிதன் said...

@பழனி.கந்தசாமி said...
//அப்ப நான் 1990 லயே சொர்க்கத்தைப் பார்த்துட்டனுங்க.//

கண்டிப்பாக ஐயா... அப்போ நீங்க பார்த்த அமெரிக்காவை பற்றி சொல்லுங்கலேன்...? சுவாரசியமாக இருக்கும்.

ஆதி மனிதன் said...

@ANaND said...
//தல... இந்தவாட்டி அடி கொஞ்சம் பலமோ //

?!?!?!?அப்படியெல்லாம் ஒன்னும் இல்லீங்கோ...

ஆதி மனிதன் said...

நன்றி திண்டுக்கல் தனபாலன்...

@பழூர் கார்த்தி said...
//நானும் அமெரிக்காவில்தான் வசிக்கிறேன், உங்களது "ஆ"மெரிக்கா பதிவுகளின் ரசிகன் :)//

நன்றி கார்த்தி. மிக்க சந்தோசம்...

Post a Comment