Thursday, August 16, 2012

இந்த இந்தி காரங்களே இப்படிதான்ப்பா..


இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம். இப்படி ஒரு காலத்தில் கோஷம் போட்டவன் தான் நான். ஆனால், அதை படிக்காததால் இழந்தது நிறைய என்பதை காலம் தான் எனக்கு உணர்த்தியது. ஆமா, தெரியாமதான் கேக்குறேன்? ஹிந்தி படிச்சா நாம என்ன கெட்டா போய்டுவோம்?

சரி, முதலில் இந்தி பேசும் மக்கள் வாழும் ஊர்களில் உள்ள நல்ல விசயங்களை பார்ப்போம். மும்பைக்கு நீங்கள் போய் இருந்தீர்களானால் நிச்சயம் இதை விரும்பி இருப்பீர்கள். அது அங்குள்ள (பெரும்பாலான) ஆட்டோ காரர்களின் நேர்மை. நமக்கு இந்தியே தெரியாது என அவருக்கு தெரிந்தாலும், ஒழுங்கான மீட்டர் போட்டு, நேர் வழியில் சென்று மீட்டர் பார்த்து காசு வாங்குவது. ஒரு மொழி தெரியாத ஊருக்கு போகும் போது இதை விட comfort என்னங்க வேணும். ஒரு ருபாய் சில்லறை நமக்கு திரும்பி கொடுக்க வேண்டும் என்றால் கூட பாக்கெட்டை துலாவுவார்கள்.

அடுத்ததாக மும்பை அதன் சுற்றுள்ள நகரங்களில் அடுக்கு மாடி குடியிருப்புகளின் பாதுகாப்பு தன்மை. பெரும்பாலான குடியிருப்புகளில் வேலைக்கு சேரும் பணிப்பெண்ணாக இருக்கட்டும், செக்கூரிட்டியாக இருக்கட்டும், எல்லோரும் காவல்துறை வெரிபிகேஷன் செய்யப்பட்டு அவர்களை பற்றிய முழு வரலாற்றையும் சரிபார்த்த பிறகுதான் வேலைக்கு சேர்க்கிறார்கள். பல இடங்களில் வீட்டு சாவியை செக்கூரிடியிடம் கொடுத்து விட்டு போவதை பார்த்திருக்கிறேன். அது மட்டும் இல்லாமல், வீட்டு வேலைக்கு வரும் பெண்கள் அவர்களிடம் சாவியை வாங்கி வேலை முடித்து மீண்டும் சாவியை செக்கூரிட்டியிடம் கொடுத்து விட்டு செல்கிறார்கள்.  

Exceptions are everywhere. இருந்தாலும் நான் பார்த்தவற்றை தான் இங்கு பகிர்கிறேன்.

அது போல் சமீபத்தில் பார்த்த சில பொதுவான விஷயங்கள். அநேகமாக எல்லா மோட்டார் சைக்கிளிலும் மழை காலத்தில் முன்புறம் உள்ள ஹெட் லைட் மற்றும் இன்டிகேடர்களை மழையிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு அதை சுற்றி ஒரு கவர் போட்டுள்ளார்கள்.

அலுவலகம் செல்லும் பெரும்பாலானோர் backpack என்று சொல்லக்கூடிய பாக்கை எடுத்து செல்கிறார்கள். இதில் என்ன புதுமை என்கிறீர்களா? நாம் எல்லாம் backpack பின் புறம் தான் மாட்டிக்கொள்வோம். இங்கு பெரும்பாலானோர் அதை முன் பக்கம் மாட்டிக்கொள்கிறார்கள். அதிலும் டூ வீலரில் செல்பவர்கள் முன் பக்கம் தான் மாட்டிக் கொள்கிறார்கள். இதனால் இரு பயன்கள். ஒன்று, முன் பக்கம் மாடிக்கொள்வதால் உங்களுக்கு தெரியாமல் யாரும் பாக்கில் உள்ளதை எடுத்து விட முடியாது. இன்னொன்று வண்டியில் உங்களுடன் வேறு யாரும் உட்கார்ந்து கொண்டு வந்தால் உங்கள் பாக் முன் பக்கம் இருப்பதால் அவர்களால் வசதியாக உட்கார முடிகிறது.

வட நாட்டில் பெரும்பாலானோர் அசைவம் சாப்பிடாவிட்டாலும் மும்பை போன்ற இடங்களில் pure vegetarian ஹோட்டல்கள் பார்ப்பது அரிது. அதை விட முக்கியம் பெரும்பாலான ஹோட்டல்கள் பார்களுடன் அமைத்திருப்பது. Family restaurant & Bar என்று இருந்தால் அங்கு குடும்ப சகிதம் போய் வெறுமனே சாப்பிடலாம்/சரக்கு அடித்துக்கொண்டும் சாப்பிடலாம். வெறும் Family restaurant என்றால் அங்கு சரக்கு அடிக்கும் வசதி கிடையாது. அதை விட இங்கு குடும்பத்துடன் சாப்பிட ஹோட்டலுக்கு வரும்போது ஆண்கள் (சில சமயம் வீட்டுப்பெண்களும்) பீர்/ஹாட் அடிப்பார்கள். குழந்தைகள் அவர்கள் கூடவே உட்கார்ந்து சாப்பிடுவார்கள் அல்லது அங்கேயே விளையாண்டுக் கொண்டிருப்பார்கள்.










share on:facebook

9 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தங்களின் அனுபவம் மூலம் நல்ல பல தகவல்கள்...

நன்றி...

Anonymous said...

இந்தி படிக்க வேண்டாம் என்று யார் சகோ சொன்னது. தமிழ்நாட்டில் பலர் இந்தி படிந்துக் கொண்டு தான் இருக்கின்றார்கள். கட்டாய இந்தியைத் தான் எதிர்த்தார்களே ஒழிய இந்தி படிப்பதையே யாரும் எதிர்க்கவில்லை .. மும்பையின் பை மாட்டும் முறையை நானும் கவனித்தது உண்டு ஆனால் சிந்தித்தது இல்லை .. மற்றப்படி மராத்திய பகுதிகளுக்கும் மும்பைக்கும் மொழி கலாச்சார வேறுபாடுகள் அதிகம் என்பது தான் இந்த சரக்கு அடிக்கும் பழக்கமும் என நினைக்கின்றேன் !!!

Anonymous said...

இந்தத் தகவல்களுக்கும் இந்தி படிப்பதற்கும் என்ன தொடர்பு என்பதுதான் விளங்கவில்லை. இங்கே ஜப்பானில் மக்கள் இன்னும் ரொம்ப நல்லவங்க. அதனால் நாம எல்லாரும் ஜப்பானிய மொழி படிக்காம போனதுதான் தப்பு.

Anonymous said...

Another benefit of having the backpack in front is, any dust, water sprayed by the vehicle before you will not damage your dress.

ஆதி மனிதன் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன்.

ஆதி மனிதன் said...

@இக்பால் செல்வன் said...
//கட்டாய இந்தியைத் தான் எதிர்த்தார்களே ஒழிய இந்தி படிப்பதையே யாரும் எதிர்க்கவில்லை //

இதை பற்றி பேச வேண்டும் என்றால் நிறைய பேசலாம் நண்பரே. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஆதி மனிதன் said...

@Anonymous said...
//இந்தத் தகவல்களுக்கும் இந்தி படிப்பதற்கும் என்ன தொடர்பு என்பதுதான் விளங்கவில்லை//


ஹி ஹி...சும்மா ஒரு பேச்சுக்குதான். இருந்தாலும் இந்தி படிக்காதலால் தமிழர்கள் நிறைய இழக்கிறோம்.

Anonymous said...

//ஹிந்தி படிச்சா நாம என்ன கெட்டா போய்டுவோம்?
//

ஆமா பாஸ். நீங்க ஏன் இந்தி படிச்சிருக்கக்கூடாது?

Rawdeva said...

கட்டாய இந்தி மொழி படிப்பதால் பயனடைய போவது நீங்கள் தானே தவிர ! அரசாங்கம் அல்ல

Post a Comment