Saturday, December 18, 2010

நெஞ்சு பொறுக்குதில்லையே தோழா...



நெஞ்சு பொறுக்குதில்லையே.

நெஞ்சு பொறுக்குதில்லையே தோழா...
மாறிவரும் நம் சமுதாய உணர்வுகளை நினைந்துவிட்டால்.


சமத்துவமும், சமதர்மமும் ஒன்று சேர்ந்து
சோஷலிச பாதை நோக்கி செல்லும்
நம் ஒன்று பட்ட இந்தியாவில்
பாபர் மசூதி-ராமர் கோவில் பிரச்சனையா?

தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் - கடவுள்.
பிறகு எங்கே ராமருக்கு பிறந்த இடம் - தனித்து அயோத்தியில்?

நெஞ்சு பொறுக்குதில்லையே தோழா...
மாறிவரும் நம் சமுதாய உணர்வுகளை நினைந்துவிட்டால்.


உலக நாடுகளின் பிரச்சினை - பெட்ரோலிய பொருட்களின் பற்றாக்குறை  பற்றிய ஆராய்ச்சியில். இந்திய நாட்டின் பிரச்சினை மசூதியை மீண்டும் கட்டலாமா கூடாதா என்பதில்.

ஒருபுறம் கொட்டும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும் கொடுமைபடும் பாட்டாளிகள். மறுபுறம் ஏசியிலும், ஏழடுக்கு மாளிகையிலும்
ஏட்டை புரட்டி நோட்டை என்னும் ஏகாதிபத்தியங்கள்.

மாற்றம் தர வேண்டிய மந்திரி சபைகளோ மாதமொருமுறை மாறும் அவலம் நமக்கு.

நெஞ்சு பொறுக்குதில்லையே தோழா...
மாறிவரும் நம் சமுதாய உணர்வுகளை நினைந்துவிட்டால்.


வருடத்துக்கொருமுறை தேர்தல்
மாதத்துக்கொருமுறை  பந்த்
வாரத்துக்கொருமுறை கடையடைப்பு

பொருட்களின் உற்பத்தி பெருக்குவது எப்படி?
மக்கள் உற்பத்தியில் உயர்வு கண்டதுதான் பலன்.

மலிவு விலை மது தேடி கணவன்.
ஏறிவரும் அதிகவிலை அத்தியாவசிய பொருள் தேடி மணைவி.

நெஞ்சு பொறுக்குதில்லையே தோழா...
மாறிவரும் நம் சமுதாய உணர்வுகளை நினைந்துவிட்டால்.


இன்றைய மாணவர்கள் நாளைய இந்திய மன்னர்கள்.
ஆனால் இவர்களுக்குள் ஏற்படும் சந்தேகம் - நாளை புதுப்படம் ரிலீஸ் ஆகுமா - ஆகாதா என்பதே.

இவர்களுக்குள் ஏற்படும் போட்டி நடிகைகளின் வயது குறைவா - அதிகமா என்பதில்தான்.

இவர்கள் எங்கே வெல்லப்போகிறார்கள் ஒலிம்பிக் தங்கத்தை?

நெஞ்சு பொறுக்குதில்லையே தோழா...
மாறிவரும் நம் சமுதாய உணர்வுகளை நினைந்துவிட்டால்.

*=========================================*
பி.கு. 1990 - களின் ஆரம்பம் என நினைக்கிறேன். என்னுடைய உறவுகார பெண் ஒருவர் தஞ்சை மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற போட்டி ஒன்றில் கலந்து கொள்வதற்காக என்னிடம் ஏதாவது ஒன்றை எழுதி தருமாறு கேட்டார். அதற்காக எழுதிய கவிதை(!) தான் இது. அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம். இந்த கவிதைக்கு பரிசாக (முதல் பரிசா என்பது ஞாபகம் இல்லை) பாரதியாரின் பாடல்கள் என்ற புத்தகமும் ஒன்று பரிசாக கிடைத்தது. 

*========================================*


பொருட்குற்றம், இலக்கனக்குற்றம், பிழை எதுவாக இருந்தாலும் பொருத்துக்கொண்டதற்கு நன்றி. 

 
share on:facebook

7 comments:

தேவன் மாயம் said...

நெஞ்சு பொறுக்கவில்லைதான்!

Philosophy Prabhakaran said...

// தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் - கடவுள்.
பிறகு எங்கே ராமருக்கு பிறந்த இடம் - தனித்து அயோத்தியில்? //

நெத்தியடி வரிகள்...

// ஏட்டை புரட்டி நோட்டை என்னும் ஏகாதிபத்தியங்கள். //

நல்ல சொலவடை...

ஆதி மனிதன் said...

நன்றி மாயன்.

நன்றி பிரபாகரன்.

கிருபாநந்தினி said...

நல்லவேளை, கடைசியில கவிதைன்னு போட்டுத் தப்பிச்சுக்கிட்டீங்க! இல்லேன்னா, இது என்ன கட்டுரை மொக்கையான்னு நினைச்சிருப்பேன்! :)

ஆதி மனிதன் said...

@கிருபனந்தினி said...

//நல்லவேளை, கடைசியில கவிதைன்னு போட்டுத் தப்பிச்சுக்கிட்டீங்க! இல்லேன்னா, இது என்ன கட்டுரை மொக்கையான்னு நினைச்சிருப்பேன்! :) //

சும்மா டமாசு பன்னாதீங்கக்கா. நானெல்லாம் ஏதோ நேரம் கிடைக்கிறப்ப ஒன்னிரண்டு (உங்க பாஷையில் மொக்க) பதிவ போட்டுட்டு போய்க்கிட்டுருக்கேன். உங்கள மாதிரி எப்பவுமே மொக்க I am sorry... நல்ல பதிவா போட்டுக்கிட்டு இருக்க முடியுமா.

இப்படிதான் உங்கள் கமெண்ட்டுக்கு பதில் கமென்ட் போட இருந்தேன்.

அப்புறம் பார்த்தா அட நம்ம கிருபா அக்கா. ஆமா எப்படி இருக்கீங்க? நீங்கள் மீண்டு வந்ததில் மிகுந்த மகிழ்ச்சி. உங்கள் கடைசி - வேணாம் உங்களுடைய முந்தய பதிவை உடனே எடுத்துவிடுங்கள் அல்லது புதிதாக ஒரு பதிவை இடுங்கள். உங்களின் விடைபெறுகிறேன் பதிவை பார்க்க இன்னும் கஷ்டமாக இருக்கு.

சாய்ராம் கோபாலன் said...

கலக்கல் ஆதி.

உங்களின் இந்த ஆறாமை மனம் தெரியாமல் போய்விட்டதே. கஷ்டப்பட்டாவது உங்களை காண வந்திருப்பேன். அழகோ அழகோ. கவிதை போல் அழகாக பிரித்து போட்டு இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

முதல் பரிசு கிடைத்ததில் சந்தேகம் இல்லை.

ஆதி மனிதன் said...

@ சாய் said... //...அழகோ அழகு..//

நன்றி சாய். எப்பவோ எழுதியது. இப்போ கிடைத்தது. பிரசுரித்தேன். உங்கள் பாராட்டு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது.

Post a Comment