Friday, December 24, 2010

2010 - Top 10


2010 ஆம் ஆண்டு எல்லாமே பெருசுதான்...

2G ஸ்பெக்ட்ரம்:
சுமார் ஒரு லட்சத்து எழுபத்தையாயிரம் கோடி ரூபாய் (1,75,000, 000,000) ஊழல் நடந்திருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் இது எல்லாம் யூகத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளதாகவும், ஒரு தனி நபரால் இந்தளவு எல்லாம் ஊழல் செய்ய முடியாது என்று சப்பை கட்டு கட்டுகிறார்கள்.

அப்படி என்றால் ஒரு நாலு பேர் அல்லது நாற்பது பேர் அட நாலாயிரம் பேர் சேர்ந்து செய்தால் பரவாயில்லை என கூறுகிறார்களா? இல்லை மேலே கூறிய தொகையில் ஒரு லட்சத்தை எடுத்துவிட்டு எழுபத்தையாயிரம் ஊழல் என்றால் ஒத்துக்கொள்வார்களா?

விக்கி லீக்ஸ்:
அமெரிக்க அரசாங்க ரகசியங்களை கசிய விட்ட விக்கி லீக்ஸ் இணையதள ஆசிரியருக்கு லண்டன் ஐ கோர்ட் ஜாமீன் வழங்கியது. இருந்தும் அவரால் உடனே விடுதலையாக முடியவில்லை. அவர் ஜாமீனில் செல்ல 200,000 (1,60,00,000 ரூபாய்) இங்கிலாந்து பவுண்டுகளை பணமாக கட்ட வேண்டும் என விதித்த நிபந்தனைதான். இதை ஏற்பாடு செய்ய அவரது ஆதரவாளர்களுக்கு ஒன்றிரண்டு நாட்களுக்கு மேல் ஆனது.


ஜூலியன் அசான்ஜிடம் சுமார் 250,000 ரகசிய ஆவணங்கள் இருக்கிறது. ஒரு வேளை ஒரு ஆவணத்திற்கு ஒருபவுண்ட் என பினையதொகையை கணக்கு செய்திருப்பாரோ அந்த நீதிபதி!


கோவை குழந்தைகள் கடத்தி கொலை:
கல்நெஞ்சம் படைத்தவர்கள் கூட அந்த குழந்தைகளின் (அக்கா தம்பியாக சேர்ந்திருந்த) புகைப்படங்களை பார்த்தபிறகு அவர்களை ஒருவன் பணத்திற்காக கொலை செய்தான் என்பதை நம்ப மாட்டார்கள். தமிழகத்தில் குழந்தைகளின் பாதுகாப்பில் ஒரு மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய சம்பவம். குற்றம் செய்தவர்களுக்கு உடனடி தண்டனையும் கிடைத்தது.


குற்றம் செய்தவர்களை என்கவுண்டரில் சுட்டு கொன்றதை பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொண்டால் கூட இதே போல் குழந்தை கடத்துபவர்கள் எல்லோரையும் போலீசார் சுட்டு கொள்வார்களா? அப்படியே செய்தாலும் அதை எப்போதும் மக்கள் ஏற்றுகொள்வார்களா? முறையான தண்டனையே என்றும் சரியான தீர்வு.


எந்திரன் வெற்றி:
நடிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல என்பது விபரம் அறிந்தவர்களுக்கு தெரியும். அதிலும் எல்லா தரப்பினரும் பார்த்து ரசிக்கும் அளவுக்கு ஈர்ப்பது என்பது இன்னும் அரிது. அந்த வகையில் அறுபது வயதிலும் நான்கு தலைமுறை தாண்டி இன்னும் பழைய ரசிகர்களையும் புதிய ரசிகர்களையும் தொடர்ந்து ஈர்த்துவரும் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் மிகப் பெரிய வெற்றி படம் 'எந்திரன்'. இந்திய திரைப்பட வரலாற்றில் எதிர்பார்ப்பிலும் வசூலிலும் ஒரு மிக பெரிய சாதனை படைத்த தமிழ் திரைப்படம்.  அமெரிக்கா போன்ற நாடுகளில் அதற்கு கிடைத்த வரவேற்பும், வசூலுமே அந்த சாதனைக்கு ஓர் சாட்சி.

அதே சூப்பர் ஸ்டார், இனி கலை சேவையாக தன் மீது மக்களுக்கு உள்ள ஈர்ப்பை பயன்படுத்தி வாழ்ந்து மறைந்த மக்கள் தலைவர்களின் வாழ்கை வரலாற்றை தன் கதாபாத்திரமாக ஏற்றுக்கொண்டு குறைந்தது ஒரு சில படங்கள் நடித்து கொடுப்பாரேயானால் அதை விட இந்நாட்டு மக்களுக்கு சிறந்த வகையில் சேவை செய்ய வேண்டியதில்லை. தனக்கு மக்கள் கொடுத்த பேருக்கும் புகழுக்கும் நன்றிக்கடனாக திருப்பி கொடுக்க இதைவிட ஒரு நல்ல விஷயம் வேறு இருக்கப்போவதில்லை ஹ்ம்ம். ஆசை பட எல்லோருக்கும் உரிமையுண்டு. எனக்கும் தான்.


ஒபாமாவின் இந்தியா வருகை:
ஒபாமா காந்தியையும் மார்டின் லூதர் கிங்கையும் தன் குருவாக ஏற்றுக்கொண்டவர். ஒரு மிக சிறந்த பேச்சாளர். மெத்த படித்த அமெரிக்க மக்களையே தன் பேச்சாற்றலால் மயக்கும் மந்திரம் தெரிந்தவர். எதிர்பார்த்தது போலவே அவருடைய இந்திய வருகை பெறும் எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் சேர்த்தே தந்தது.


இது எல்லாவற்றையும் விட அவருக்காக தலை நகர் டில்லியில் பாதுகாப்பு என்ற பெயரில் அவர் செல்லும் வழி எங்கிலும் ரோட்டோரமாக இருந்த அனைத்து மரங்களும் வெட்டி வீழ்த்தப்பட்டன. தென்னை மரங்களில் இருந்த தேங்காய்கள் கூட தப்பவில்லை. இந்திய கடலோரத்தை சுற்றி இரண்டு பெரிய போர்க்கப்பல்கள் நாற்பதுக்கும் மேற்ப்பட்ட கடற்படை ரோந்து கப்பல்கள், தினம் 600 கோடி ரூபாய் செலவில் பல்லாயிரக்கணக்கான காவலர்கள் என அவருக்கும் அவருடன் பயணித்த 3000 மேற்பட்ட அவருடைய பரிவாரத்துக்கும் செலவிடப்பட்டதாக செய்திகள் கூறின.

என்னுடைய ஒரே ஆதங்கம், இன்றைய ஹைடெக் உலகத்தில் ஒரு வீடியோ கான்பரன்ஸ் மூலம் அவர் எல்லாவற்றையும் செய்திருக்க முடியுமே. நம் நாட்டில் கரும்பலகை கழிப்பிட வசதி இன்றி இருக்கும் எத்தனையோ பள்ளிகளுக்கு அவருக்காக செலவிடப்பட்ட தொகையில் ஒரு பகுதியை செலவிட்டிருந்தால் கூட போதும். பல்லாயிரக்கணக்கான ஏழை மாணவர்கள் பயனடைந்து இருப்பார்கள்.


Top 10 - ல் மீதி தொடரும்...

படம் நன்றி : boston.com
share on:facebook

5 comments:

philosophy prabhakaran said...

என்னைப் பொறுத்தவரையில் விக்கிலீக்ஸ் தான் டாப்...

philosophy prabhakaran said...

இது தவிர வேறு என்ன முக்கிய விஷயங்கள் இருக்கிறது என்று புரியவில்லை... இரண்டாம் பாகத்திற்காக காத்திருக்கிறேன்...

சாய் said...

ஆதி

ரஜினிக்கு அறிவுரை அழகு. நம் தலைமுறை பாரதியையும், வீரபாண்டிய கட்டபொம்மனையும், வா.வு.சி ஐயும் சிவாஜிகணேசன் முலம் கண்டது. நம் பிள்ளைகளுக்கு / அதற்கு பின் உள்ள தலைமுறைகளுக்கு ?

ஆதி மனிதன் said...

@ சாய் said...
//நம் பிள்ளைகளுக்கு / அதற்கு பின் உள்ள தலைமுறைகளுக்கு ? //

அதான் யூ டியூப் இன்டர்நெட் இருக்கே அதை பார்த்துதான் தெரிஞ்சுக்க வேணும்.

சாய் said...

//ஆதி மனிதன் said...அதான் யூ டியூப் இன்டர்நெட் இருக்கே அதை பார்த்துதான் தெரிஞ்சுக்க வேணும்.//

"சிவாஜி" என்று ரஜினியின் படம் வரும்வரை சிவாஜிகணேசன் என்ற அந்த சிம்மக்குரலோன் பெயர் மட்டும் கூகிள் தேடுதலில் வந்தது. இப்போது முதல் பத்து பக்கத்துக்கு ரஜினியின் / ஷங்கரின் சிவாஜி தான் வருது ? அதேபோல் நலம் தானா நலம் தானா முதல் எல்லா பழைய பாடல்களையும் காப்பி அடிப்பதால் பழைய பாடல்கள் தொலைந்து போகும்.

ஸ்ரீலங்கா தமிழர்கள் புண்ணியத்தால் பழைய தமிழ் பாடல்களும் / படங்களும் பிழைக்கலாம்.

Post a Comment