Tuesday, December 28, 2010
2010 - Top 10 'எல்லாமே பெரிசுதான்'
சென்ற 2010 - Top 10 'எல்லாமே பெரிசுதான்' பதிவில் என்னை கவர்ந்த, பாதித்த சில செய்திகளில் முதல் ஐந்தை பதிந்தேன். அவற்றில் மீதி ஐந்து இதோ...
பீகார் தேர்தல் முடிவு:
பீகாரில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என ஓரளவிற்கு அனைவரும் எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால் எதிர்க்கட்சிகளான ராஸ்ட்ரிய ஜனதா தளமும் அகில இந்தியா கட்சியான காங்கிரசும் இந்த அளவிற்கு மண்ணை கவ்வும் என யாரும் எதிர் பார்த்திருக்க மாட்டார்கள் - லல்லுவும் ராகுல் காந்தியும் சேர்த்து. பீகாரில் நிதீஷ் குமார் பெற்ற இந்த மாபெரும் வெற்றி இந்திய அரசியலில் நிச்சயம் ஒரு திருப்புமுனைதான்.
முற்றிலும் ஜாதியை அடிப்படையாகவும், வன்முறையை வழிகாட்டியாகவும் வைத்தே அரசியல் நடக்கும் பீகாரில், வளர்ச்சியையும், சட்டம் ஒழுங்கை (ஓரளவிற்கு) நிலை நாட்டியத்தை வைத்து மட்டுமே நிதீஷ் குமார் வெற்றி பெற்றார் என்றால் இந்தியாவில் மேலும் பின்தங்கியுள்ள மாநிலங்களும் முன்னேற வாய்ப்புண்டு என்பதை நாட்டு மக்களுக்கும் இதர அரசியல்வாதிகளுக்கும் உணர்த்திய பெருமை நிதீஷ் குமாரையே சாரும்.
CNN - Hero of the year:
இந்த வருடம் CNN நடத்திய Hero of the year தேர்வில் தமிழகத்தை சேர்ந்த நாராயணன் சங்கரன் முதல் பத்து பேரில் ஒருவராக தேர்வானது தமிழர்கள்/இந்தியர்களான நமக்கெல்லாம் கிடைத்த மிக பெரிய பெருமை என்றுதான் சொல்லவேண்டும்.
இறுதியாக நடந்த ஆன்லைன் வாக்கெடுப்பில் நாராயணன் சங்கரனால் முதல் இடத்தை பிடிக்க முடியவில்லை என்றாலும் அவரின் சேவையை பாராட்டி அவரை அமெரிக்காவிற்கு அழைத்து கவுரவித்ததுடன் $ 25,௦௦௦ அமெரிக்க டாலர்கள் பணமுடிப்பையும் வழங்கியது. சக அமெரிக்கர்கள் கூட 'who is this Sankaran' என அவரைபற்றியும் நம் மதுரையை பற்றியும் கேட்கும் அளவிற்கு தனி மனித சேவையில் எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்தவர் சங்கரன் நாராயணன்.
ஆ (சாமி) நித்யானந்தாவின் லீலைகள் (Villian of the Year):
உலகம் பூராவும் போலி சாமியார்களின் அட்டூழியங்கள் அவ்வப்போது அரங்கேறி கொண்டிருந்தாலும் மேல்வர்க்க மக்களிடமும் மீடியாக்களிடமும் சற்று அதிகமாகவே செல்வாக்கு பெற்றிருந்த நித்யானந்தாவின் லீலைகள் வெளியே தெரிந்த போது அந்த அதிர்ச்சி சற்று அதிகமாகவே இருந்தது.
தன்னை தானே சாமி என்று சொல்லிக்கொண்டு துறவறத்துக்கு சற்றும் சம்பந்தமில்லாமல் பளபளக்கும் கார்களிலும் பகட்டான குடில்களிலும் சுகபோக வாழ்க்கை வாழ்ந்து கொண்டு உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் கூடவே சிஷ்யைகளை கொண்டிருக்கும் இம்மாதிரியான ஆட்களால் நம் சமூகத்திற்கு மட்டும் அல்ல துறவறம் என்ற அந்த புனிதமான அறத்திற்கே அவப்பெயர் ஏற்படுத்திவிடுமோ என்ற ஐயமே தற்போது மிஞ்சுகிறது.
மழையில் நனைந்த தமிழகம்:
கடந்த சில வருடங்களாக ஒவ்வொரு வருடமும் வஞ்சனை இல்லாமல் தமிழகத்தில் மழை பொழிந்துகொண்டு தான் இருக்கிறது. ஆனால் கிடைக்கும் நீரை சேமித்து வைக்கவோ சீர்படுத்தி அகற்றவோ வழியில்லாமல் அரசாங்கம் இன்னும் உறங்கிக்கொண்டுதான் இருக்கிறது. அதிலும் தலை நகர் சென்னையில் கேட்கவே வேண்டாம். திரும்பிய பக்கமெல்லாம் தெப்பம் போல் மழை நீரில் வாகனங்கள் மிதந்து கொண்டு செல்கின்றன. ஆனால் அரசியல்வாதிகள் குடியிருக்கும் பகுதிகளில் மட்டும் துடைத்து விட்டாற்போல் பளிச்சென்று சாலைகள். ஹ்ம்ம் என்றுதான் இவர்கள் திருந்துவார்களோ.
தலைவர்களின் உயிருக்கு விடுதலைப்புலிகள் குறி:
இந்த ஆண்டின் மிக பெரிய காமெடி இதுவாகத்தான் இருக்கு வேண்டும். இலங்கை இன பிரச்சனைக்கு பிள்ளையார் சுழி போட்டது முதல் இன்றுவரை இலங்கை தமிழர்களை வைத்தே அரசியல் செய்து வந்த தமிழக அரசியல்வாதிகள் இன்று விடுதலை புலிகள் என்ற இயக்கமே இல்லாமல் போனபிறகும் கூட அவர்களை வைத்து இன்னும் அரசியல் செய்கிறார்கள்.
தமிழகம் வரும் பிரதமர் மற்றும் தமிழக முதல்வருக்கு விடுதலை புலிகளால் ஆபத்து என திடீரென்று ஒரு அறிக்கை வெளியாகிறது. இன்னும் பத்தாண்டுகள் கழித்து கூட ஏதாவது ஒரு பிரச்சனையை திசை திருப்ப இதே கதையை கட்டி விடுவார்கள் போலிருக்கிறது.
ஹையா, எல்லோருக்கும் முன் நான்தான் 2010 - ஒரு சிறப்பு கண்ணோட்டம் போட்டேனாக்கும் (!?). ஆமா நீங்க எப்ப போட போறீங்க?
படம் நன்றி: bostom.com
share on:facebook
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
ஆதி அருமை. திருச்சியில் இருக்கும் ஒரு அம்மன் கோயிலில் நாம் எழுதிவைத்தது நடக்கும் என்று சொல்லுவார்கள். தமிழ்நாட்டில் மழை தவறாமல் பெய்யவேண்டும் என்று கேட்டது நடந்தது ஆனால் உண்மையான / லஞ்சம் வாங்காத அரசியல்வாதி கேட்டேன் - அம்மனுக்கே சம்திங் கொடுத்து விட்டார்களோ ???
ம்ம்ம்... nice post...
@philosophy prabhakaran said...
//ம்ம்ம்... nice post...//
நன்றி பிரபா ...
//ஆனால் அரசியல்வாதிகள் குடியிருக்கும் பகுதிகளில் மட்டும் துடைத்து விட்டாற்போல் பளிச்சென்று சாலைகள்.//
மேலே நான் கூறியது தமிழகத்தை பற்றி...
ஆனால் இன்றுதான் MPR செய்தி கேட்டேன். நியூயார்க்கில் கூட எல்லா தெருக்களிலும் snow மலை போல் குவிந்து கிடக்க மேயர் வீடிருக்கும் தெரு மட்டும் சுத்தமாக snow அகற்றபட்டு பளிச்சென்று இருந்ததாக கூறினார்கள். சோ, அரசியல்வியாதிகள் எல்லோரும் ஒரே குட்டையில் ஊறின மட்டைகள்தான் போலும்.
@சாய் said...
//உண்மையான / லஞ்சம் வாங்காத அரசியல்வாதி கேட்டேன் -//
ரொம்ப பெரிய பெரிய ஆசை சாய் உங்களுக்கு. எனக்கு தெரிந்து எந்த சாமியும் உங்கள் ஆசையை நிறைவேற்ற போவதாய் தெரியவில்லை.
Both the posts ( I & II) are good. Able to read fully only today. Keep writing.
நன்றி மோகன். புத்தாண்டு வாழ்த்துக்கள்.
சரியான திருப்புப் பார்வை..
நா புத்தாண்டைப் பத்தி கொஞ்சம் பெரிசா சொல்லி இருக்கேன்.. முடிஞ்சா படிங்க..
Post a Comment