பனிபொழிவு. நான் மிகவும் பார்த்து ரசித்து அனுபவிக்கும் ஒன்று. நண்பர் சாயை தொடர்ந்து நானும் நானே எடுத்த சில புகைப்படங்களை இங்கு இணைத்துள்ளேன்.
பனிப்பொழிவில் பல வகை உண்டு. சில சமயம் ரவையை போல் பொடி பொடியாக பெய்யும். சிறிய மரக்கிளைகளில் அது ஒட்டிக்கொண்டிருப்பதே அழகு.
சில சமயம் பெரிய அளவில் பொத் பொத்தென்று பனி விழும். ஒரு அரை மணி நேரத்தில் தரை எல்லாம் வெண்மை பூசிவிடும்.
பல தடவைகள் மரங்களில் தொத்திக்கொண்டு இருக்கும் பனியின் அழகை ரசிக்கவே சும்மாவேனும் காரை எடுத்துக்கொண்டு சுற்றுவேன்.
மிசிசிப்பி ஆறு பனிக்காலத்தில் அப்படியே உறைந்து அங்குள்ள சிறிய கப்பல் ஒன்று தரையில் தெரியும் கட்டடம் போல் காட்சி அளிக்கிறது.
சில நேரங்களில் வெள்ளையும் கொள்ளை அழகுதான்.
சென்னையில் இருந்தால் மழை பெய்வதை பார்க்க எனக்கு ரொம்ப பிடிக்கும்(வீட்டுக்குள்ளிருந்து தான்).
share on:facebook
6 comments:
அத்தனை படங்களும் அருமை.
பகிர்வுக்கு நன்றி.
ok.. that's great
அழகிய புகைப் படங்கள்...
வருகை மற்றும் பின்னூட்டத்திற்கு நன்றி : ராமலக்ஷ்மி, மேடி & ஸ்ரீராம்.
நண்பரே நான் ராமலக்ஷ்மியை quote செய்தேன், நீங்கள் என்னை சொல்லி இருக்கின்றீர்கள். நன்றி.
அத்தனை படங்களும் அருமை.
@ சாய் said...//அத்தனை படங்களும் அருமை. //
நன்றி சாய்.
Post a Comment