Friday, October 29, 2010

அன்னமிட்ட கை


ஆயிரத்தில் ஒருவன், அன்னமிட்ட கை. இன்னும் என்ன சொல்லி வேண்டுமானாலும் இவரை அழைக்கலாம். ரோட்டில் கலைந்த முடியும், அழுக்கேறிய உடலும் மன நலம் குன்றியவராகவும் ஒருவரை கண்டால் சராசரி மனிதனாய் நகர்ந்து போகும் இந்த உலகில், அவர்களை ஒவ்வொரு நாளும் தேடி சென்று உணவளிப்பது மட்டுமல்லாமல், அதை உணவு என்று கூட தெரியாமல் தட்டிவிடவும் தள்ளிவைப்பவர்களுக்கும் தன் கையாலேயே ஊட்டியும் விடும் இவர்  ஆயிரத்தில் ஒருவன் அல்ல லட்சத்தில் ஒருவன் என்று கூட சொல்லலாம், பின்னல் வரும் காரணங்களுக்காக.

நாராயணன் கிருஷ்ணன்(29) - இந்த பெயர் இன்று உலகம் பூராவும் உச்சரிக்கப் படுகிறது. காரணம் உங்களில் சிலருக்கு தெரிந்து இருக்கலாம். தெரியாதவர்களுக்கு இதோ...

நாராயணன் ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தலைமை சமையல்காரர் (Chief Chef). அதுமட்டுமில்லாமல் தன் தொழிலில் பல பதக்கங்களை குவித்தவர். Swiss நாட்டில் தனக்கு கிடைத்த வேலையில் சேருவதற்கு முன் தன் சொந்த ஊருக்கு செல்வதற்காக ரயில் நிலையம் வந்தவர் அங்கு பிளாட்பாரம் ஓரத்தில் புத்தி பேதலித்த பெரியவர் ஒருவர் தன் மலத்தையே தான் எடுத்து தின்னும் அவலத்தை நேரில் கண்ட போது அதிர்ச்சியானார்(இதை எழுதும்போதே எனக்கு உமட்டல் வருகிறது என்பதை உண்மையுடன் ஒத்துக்கொள்கிறேன்).

என்ன நினைத்தாரோ, ரயில் பிடித்து ஊருக்கு சென்றவர் திரும்பவும் Swiss நாட்டுக்கு செல்லவேயில்லை. இனி தன் வாழ்க்கையின் ஒரே குறிக்கோள் இம்மாதிரி மனிதர்களுக்கு உணவளிப்பது ஒன்றே என்ற முடிவுக்கு வந்தார். அன்றிலிருந்து (2003 முதல்) இன்றுவரை பன்னிரண்டு லட்சத்திற்கும் அதிகமான உணவு பொட்டலங்களை தானே (தனது அக்சயா தொண்டு நிறுவனத்தின் மூலம்) சமைத்து பொட்டலம் கட்டி அதை ஒரு வேனில் எடுத்துக்கொண்டு ஊர் ஊராக தெரு தெருவாக மனநலம் குன்றியவர்கள் வயதானவர்கள் என எல்லோருக்கும் கொடுத்து உதவுகிறார்.

தற்போது இவரின் இந்த சேவையை பாராட்டி அமெரிக்க போன்ற நாடுகளில் பெருமளவு பார்க்கப்படும் CNN
தொலைக்காட்சி, தனி மனித சேவையில் உலகின் தலை சிறந்த மனிதரை (உலகில் ஒவ்வொரு நாளும் மாற்றத்தை கொண்டுவரும் - “everyday individuals who are changing the world”)  தேர்வு செய்ய அமைத்த கமிட்டி பரிந்துரைத்த 10, 000 நபர்களில் இருந்து முதல் பத்து பேரில் ஒருவராக நாராயணனை உலகில் 100 க்கு மேலான நாடுகளில் உள்ள CNN பார்வையாளர்கள் தேர்ந்தெடுத்து உள்ளார்கள்.

இதற்காக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நவம்பர் 25 தேதி ஒரு விழா எடுத்து கவரவிக்கப்போகிறது CNN. அத்துடன் $ 25,000 பணமுடிப்பும் அளிக்கிறது. அதே நேரத்தில் தலை சிறந்த பத்து பேரில் ஒருவரை online voting மூலம் தேர்ந்தெடுத்து அவரை "CNN - Hero of the year" ஆக அறிவிக்கிறது. அப்படி அறிவிக்கப்படுபவர்க்கு 100, 000 அமெரிக்க டாலர்கள் பணமுடிப்பாக அளிக்கிறது.

நாராயணனின் தற்போதைய ஒரே கவலை, தங்களுக்கு கிடைக்கும் உதவிகள் மூலம் சராசரியாக ஒரு மாதத்திற்கு 22 நாட்களுக்கு மட்டும் தான் இம்மாதிரி ஆதரவற்றவர்களுக்கு உணவு அழிக்க முடிகிறது.

என்னுடைய ஒரே வேண்டுகோள் உங்களுக்கெல்லாம் என்னவென்றால், நம்மால் இந்தளவு ஒரு தியாக சிந்தனையுடன் வாழ்கையை அர்பணிக்க முடியாவிட்டாலும், பெரிய அளவில் பண உதவிகள் செய்ய முடியாவிட்டாலும் கூட கீழே உள்ள சுட்டி மூலம் நமது நாராயணனை தேர்வு செய்தால் அவர் CNN அறிவிக்கப்போகும் "Hero of the Year" ஆக தேர்வாகிவிட்டால் அவரின் தொண்டு உலக நாடுகளுக்கெல்லாம் தெரிவது மட்டுமில்லாமல் அவரின் இந்த பனி இன்னும் சிறப்பாக தொடர நாம் நமது பங்கை அளித்த மன நிறைவாவது கிடைக்கும்.

எனக்கு கீழே ஓட்டளிக்க நான் கேட்கவில்லை. ஆனால் இங்கு கிளிக் செய்து நாராயணனுக்கு ஓட்டளிக்க மறந்து விடாதீர்கள். நன்றி.

மேலும் விபரங்கள் ஆங்கிலத்தில் அறிய : இங்கே சொடுக்கவும்.

படம் நன்றி: The Hindu      
share on:facebook

5 comments:

Madhavan Srinivasagopalan said...

ok done

சாய்ராம் கோபாலன் said...

மனிதருள் மாணிக்கம்.

வாழ்க்கையில் எதாவது செய்யவேண்டும் ஆதி. இவர்களை எல்லாம் பார்க்கும் போது வேலையை மயி... போச்சு என்று விட்டு விட்டு இதைபோல் எதாவது செய்யலாம் என்று தோணும்

Chitra said...

Already voted!!! :-)

ஸ்ரீராம். said...

ஆச்சர்யமான நெகிழ வைக்கும் இந்த விஷயத்தை முன்னரே கேள்விப் பட்டு இருக்கிறேன். வேறொரு பதிவில் இதைப் படித்து முன்னரே வாக்களித்தும் விட்டேன். நல்லொதொரு பகிர்வு.

CS. Mohan Kumar said...

முன்பே வாசித்திருந்தாலும் பலரும் அறிய வேண்டிய நல்ல பதிவு.. நீங்கள் சுட்டியுள்ளீர்கள்
**
தங்கள் மெயில் முகவரி தெரியாததால் நீங்கள் எனது பதிவில் எழுதியதற்கு பதில் இங்கு எழுதுகிறேன்

அம்சவல்லி தியேட்டர் பற்றி எழுதி ஆச்சரிய பட வைத்து விட்டீர்கள். ஆம் அம்சவல்லியில் படம் பார்த்துள்ளேன். அந்த அனுபவங்கள் பற்றி தனி பதிவே எழுதலாம்

நீங்கள் பதிவை ரசித்து எழுதியது மகிழ்ச்சி தருகிறது

மோகன் குமார்

Post a Comment