Wednesday, October 6, 2010

"ஆ" மெரிக்கா

      
அமெரிக்கா, அமெரிக்கானு நாம் அமெரிக்காவை பற்றியும் அமெரிக்கர்களை பற்றியும் வாயை பிளந்து கொண்டிருக்கிறோம். ஆனால் அவர்கள் நம்மை பார்த்து நம்மை விட அதிகமாக வாயை பிளப்பதும் உண்டு.

வேற எதுக்கு?

1. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மொழி பேசப்படுவது பற்றி கேள்வி படும்போது.

    இங்கு அமெரிக்காவில் ஆங்கிலம் ஒரு மொழி தான் பெரும்பாலும் எல்லா இடங்களிலும் பேசப்படும் மொழி. 

2. இந்தியாவில்  பெரும்பாலான திருமணங்கள் பெரியவர்களால் பார்த்து நிச்சயிக்கப்படுகிறது என அறியும்போது.

   அமெரிக்காவில் இது மிகவும் அரிது. பிள்ளைகள் தாங்களே தங்களது துணையை தேடிக்கொண்ட பிறகு கல்யாண நாள் நேரம் குறித்துவிட்டு அதை சர்வ சாதாரணமாக தங்கள் பெற்றோரிடம் தெரிவிப்பது தான் இங்குள்ள பழக்கம்.

3. இந்திய குழந்தைகள் பெற்றோருடன் சேர்ந்து ஒரே அறையில் தூங்குவார்கள் என்று சொன்னால்.

   இங்கு பிறந்து சில நாட்களிலேயே குழந்தைகளை தனியாக படுக்க வைத்துவிடுவார்கள். சற்று பெரிய குழந்தை ஆனவுடனேயே தனி படுக்கை அறை ஒதுக்கி அதில் தனியாக தூங்க பழக்கிவிடுவார்கள்.

4. இந்தியாவிலிருந்து வரும் LKG மற்றும் முதல் வகுப்பு படித்த குழந்தைகள் கூட அழகாக ஆங்கில எழுத்துக்களை கோர்த்து எழுதுவது cursive writing பார்க்கும் போது.

    இங்கு மெத்த படித்தவர்களின் கையெழுத்து கூட நம்மூரில் மூணாம் கிளாஸ் படிக்கும் குழந்தையின் கையெழுத்தை விட மோசமாக இருக்கும்.  

5. நம்மூரில் வீட்டு பாடம் செய்யாவிட்டாலோ பெயில் ஆகிவிட்டாலோ பள்ளியில் அடி பின்னுவார்களே. இதை சொன்னாலே என்னமோ அவர்களை அடித்தது போல் ஒரு மாதிரியாக பார்ப்பார்கள் இங்கு.

   இங்குள்ள பள்ளிகளில் அடி உதை (corporate punishment) என்ற பேச்சுக்கே இடம் கிடையாது.

6. இந்திய பெண்கள் கட்டும் சேலையும் அதன் நீளம் மற்றும் அதை பெண்கள் கட்டும் விதத்தையும் கண்டு வாயை பிளப்பார்கள்.

7. நாம் கும்பிடும் நூற்றுக் கணக்கான தெய்வங்களையும், ஒவ்வொரு சாமியின் பெயரையும் உருவத்தையும் நாம் ஞாபகம் வைத்து கொள்வதை பார்த்து "ஆ" என வாயை பிளப்பார்கள்.

8. நம்மூரில் போலீஸ் லஞ்சம் வாங்குவது மிகவும் சகஜம் என தெரியும் போது...

   இங்கு லஞ்சம் என்பது பெரும்பாலும் கிடையாது. அப்படியே இருந்தாலும் போலீசிடம் "ஊஹூம்" தப்பி தவறி நீங்கள் கொடுக்க முயன்றால் கூட உங்களுக்கு சங்கு தான். 

9. நாம் சாப்பிடும் கார உணவு வகைகளை பார்த்தால்.

   தப்பி தவறி ஒரு மிளகை இந்திய உணவில் சாப்பிட்டு விட்டால் கூட  இவர்கள் பத்து கோக் குடித்து விடுவார்கள்.     

10. வேற என்ன...இன்னும் நம்மூர் சங்கதி எத பத்தி சொன்னாலும் வாயை தான் பிளக்க போகிறார்கள். 

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு பதிவு. அவ் அப்போது மோகன் குமார் போன்றோர்கள் தரும் ஊக்கம் ஒரு முக்கிய காரணம்.  நன்றி மோகன் குமார்.
share on:facebook

10 comments:

அமுதா கிருஷ்ணா said...

ஓ..இவ்வளவு ஆ க்களா...

சைவகொத்துப்பரோட்டா said...

வாங்க! என்ன ஆச்சு, ரொம்ப நாளா காணோம்.

Chitra said...

Welcome Back! :-)

(corporate punishment) - Corporal Punishment.

தப்பி தவறி ஒரு மிளகை இந்திய உணவில் சாப்பிட்டு விட்டால் கூட இவர்கள் பத்து கோக் குடித்து விடுவார்கள்.
(not everyone. Part of Texas - New Orleans and New Mexico - people can handle spicier food than us. )

Chitra said...

nice post. :-)

ஆதி மனிதன் said...

நன்றி அமுதா.

ஆதி மனிதன் said...

நன்றி அமுதா. ஆமா இன்னும் நிறைய "ஆ" க்கள் இருக்கு. அப்ப அப்ப எடுத்து விடறேன்.

ஆதி மனிதன் said...

வருகைக்கு நன்றி சை. கொ. பரோட்டா. வேலை பளு அதான் கொஞ்ச நாட்களுக்கு எழுத முடியல. இனிமை கண்டிப்பா நீங்க பார்க்கலாம்.

ஆதி மனிதன் said...

கூடுதல் தகவலுக்கு நன்றி சித்ரா. நானும் கேள்விப்பட்டிருக்கேன் New Mexico பற்றி.

CS. Mohan Kumar said...

பதிவை ரசித்து வாசித்தேன். கடைசியில் என் பெயர் பார்த்து இன்ப அதிர்ச்சி. தற்போது அமெரிக்காவிலா உள்ளீர்கள் ?

Udhaya Rao said...

udhaya rao

Very nice post..

Post a Comment