Sunday, October 17, 2010

கதை அல்ல நிஜம்...

இன்று காலை எழுந்ததும் அநேகமாக எல்லோரும் அவர்களின் குல தெய்வங்களை நிச்சயம் கும்பிட்டிருப்பார்கள். இந்தியாவின் தென் மாநிலமான ஆந்திர பிரதேசத்தில் சூலூர்பேட்டா என்கிற ஒரு சிறிய நகரத்திற்கு அருகில் இந்தியாவின் ஏவுகணை ஏவும் தளமான ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து முதல் முதலாக நிலவிற்கு மனிதரில்லாத ஒரு உயரினத்தை ஏவுகணையில் வைத்து  அனுப்ப எல்லாம் தயார் நிலையில் உள்ளது. சரியாக காலை 10:10 விண்ணில் சீறிப்பாய எல்லா ஏற்பாடுகளும் தயார். மற்ற எல்லோரைவிடவும் எனக்கு டென்ஷன் அதிகம் இருப்பதில் ஆச்சிர்யம் ஒன்றுமில்லை. ஏனெனில் நான் தான் அந்த பிராஜக்டின் தலைமை பொறியாளர்.


நேரம் 10:00 மணி. ஏவு தளத்தில் எல்லாவற்றையும் ஒரு முறை சுற்றி வந்து, தலைமை விஞ்சாநியிடம் என்ன சார் எல்லாம் ரெடி தானே 10:09 கவுன்ட் டவுன் ஸ்டார்ட் பண்ணிடலாம்ல என கேட்டேன். கண்டிப்பாக சார். எந்த பிரச்னையும் இல்ல. எல்லாம் சரியாய் போய்கிட்டு இருக்கு என்றார். வெரி குட் என்றபடியே எல்லா விஞ்சாநிகளும் அமர்திருந்த வட்ட வரிசையில் நாடு நாயமாக சென்று என்னுடைய இருக்கையில் அமர்ந்து எதிரே மிக பெரிய திரையில் வட்டமும் புள்ளியுமாய் தெரியும் பிரபஞ்சத்தின் வரைபடங்களை மேய்ந்து கொண்டிருந்தேன்.

அடுத்த ஓரிரு மணித்துளிகளில் தலைமை கண்காணிப்பாளரின் அறிவிப்பை தொடர்ந்து ஏவுகணை செலுத்துவதற்கான கவுன்ட் டவுன் ஸ்டார்ட் ஆகியது. 10.. 9.. 8.. 7.. 6.. 5.. 4.. 3.. 2.. 1.. 0 FIRE என்ற அடுத்த நிமிடம் எல்லோரும் சற்று அண்ணாந்து பார்க்க ஆரம்பித்தார்கள். ஏவுகணையின் அடியில் வெளியான நெருப்பிற்கும் அதனுடைய சூட்டிற்கும் சற்றும் எதிர்பார்க்காத அளவில் ஏவுகணை மேலே எழும்பவேயில்லை. ஒரு கணத்தில் அனைவரின் முகமும் சுண்டி ஒருவரை ஒருவர் ஒரு வித இலாமை பார்வையுடன் பார்த்துக்கொண்டனர். ஏன், எப்படி, என்ன ஆச்சு...எங்கும் கேள்விகள். சரியான பதில் தான் இல்லை.
 
கவலை தோய்ந்த முகத்துடன் எதிரில் தெரிந்த திரையையும், ஒருவருக்கொருவர் குழுமி குழுமி பேசிக்கொள்வதையும் பார்த்துக்கொண்டு செய்வதறியாது நின்றுகொண்டிருந்த பொழுதுதான் சற்று கார 
சாரமான சத்தமும் யாரோ யாரையோ அதட்டும் சத்தமும் கேட்டு அங்கு என்ன நடக்கிறது என அறியும் பொருட்டு எனது இருக்கையை விட்டு எழுந்து அங்கு சென்றேன். 
 
என்ன சார்? என்ன இங்கு சத்தம். என்ன நடக்கிறது இங்கே?
 
சார் நாம்ப எல்லோரும் உங்களையும் சேர்த்து ஏவுகணை கிளம்பாததற்கு என்ன காரணம்னு முழிச்சிக்கிட்டு இருக்கோம். ஒன்னுமே புரியலை. இவரு நம்ம டிபார்ட்மெண்ட சுத்தம் பண்றவரு. இவரு ஏவுகணை கிளம்ப ஐடியா சொல்றாராம். கேளுங்க சார் ஜோக்க என்று ஒரு பொறியாளர் கூறியவுடன் அங்கிருந்த நிலைமையையும் மறந்து எல்லோரும் சிரித்து விட்டார்கள். 
 
சார் எல்லோரும் சற்று அமைதியா இருக்கிங்களா? யாரையும் கொறச்சி எடை போட கூடாது. 
 
ஹல்லோ என்னோட என் ஆபிஸ்க்கு வாங்க என்றபடியே அவரை அழைத்துக்கொண்டு என் அறையில் நுழைந்து கதவை மூடிக் கொண்டேன்.     
 
இப்ப சொல்லுங்க மிஸ்டர் ...
 
சார் என் பேரு பெருமாள்,...
 
ஓகே பெருமாள். இப்ப நீங்க இங்க என்ன பண்றீங்க ஏதுன்லாம் கேக்க எனக்கு டயம் கிடையாது. சொல்லுங்க எப்படி அந்த ஏவுகணையை பறக்க வைக்கலாம்?
 
சார் அது வந்து....
-------------------------
-------------
------
 
என்ன இது சின்ன புள்ள தனமா இருக்கு? அப்படி செஞ்சா ராக்கெட் பரந்துடுமா?
 
கண்டிப்பா சார். ஒரு வாட்டி ட்ரை தான் பண்ணுங்களேன்.
 
இறுதியாக மிஸ்டர் பெருமாள் கூறியபடி ஒரு காரியத்தை செய்தவுடன் ராகெட் எல்லோரும் அண்ணாந்து பார்பதற்குள் வின்னிர்க்கே  சென்று மறைந்து விட்டது.
 
அப்படி என்ன தான் மிஸ்டர் பெருமாள் ஐடியா சொல்லி இருப்பார். முடிந்தால்/தெரிந்தால் பின்நூட்டத்தில் போடுங்களேன்.

                                               **************************

சொல்லுங்க மிஸ்டர் பெருமாள். எங்களால நம்பவே முடியல. நீங்க சொன்னபடியே ராகெட்ட கீழ கொஞ்சம் சாய்த்து  மேல தூக்கினவுடன் உடனே  மேலே கிளம்பிடுச்சே!

நாங்க எல்லோரும் என்ன செய்யறதுன்னு தெரியாம தவிச்சிக்கிட்டு இருந்தப்ப உங்களுக்கு மட்டும் எப்படி இந்த ஐடியா வந்துச்சு?

சார். எங்க கிராமத்துல எங்க ஸ்கூல் வாத்தியார் கிட்ட மட்டும் தான் ஸ்கூட்டர் ஒண்ணு இருந்துச்சு. அத அவர் எப்ப ஸ்டார்ட் செஞ்சாலும் ஸ்டார்ட் ஆகாது. உடனே அத கீழ ஒருபுறமா சாய்த்து  பிறகு நிமிர்த்தி ஒரு உதை விட்டார்னா உடனே வண்டி கிளம்பிடும். அதே டெக்னிக்க  தான் நான் இங்கயும் உங்ககிட்ட சொன்னேன். அது வொர்க் அவுட் ஆயிடுச்சு. அவ்வளவுதான்.

                                                   **************************ஐயோ... அடிக்க வரீங்களா. உடு ஜூட். 

அப்புறம் இது நிஜம் அல்ல கதைதான். மிகச் சரியா கணிச்ச Anonymous க்கு வாழ்த்துக்கள். 

//Anonymous said... ஒரு 45 டிகிரி சாய்த்து கொஞ்ச நேரம் கழித்து அப்பாலிக்கா கெளப்பு சாமி.....ஜோரா கெளம்பும்...//
share on:facebook

13 comments:

Chitra said...

இத்தனை பில்ட்-அப் கொடுத்துட்டு, நாங்களே பதில் சொல்லணுமா? அவ்வ்வ்.....

சைவகொத்துப்பரோட்டா said...

என்ன சொன்னார், விடைக்காக காத்திருக்கிறேன்.

Madhavan said...

தெரியலையே..? நீங்களே சொல்லுங்க..

வால்பையன் said...

டரியலையே தல!

baba said...

ராக்கெட்ல ஸ்டேண்டு எடுத்து விட சொல்லி இருப்பார்.

Anonymous said...

ஒரு 45 டிகிரி சாய்த்து கொஞ்ச நேரம் கழித்து அப்பாலிக்கா கெளப்பு சாமி.....ஜோரா கெளம்பும்...

Farhath said...

அப்பு எங்களுக்கு அந்தளவுக்கு அறிவு பத்தாது ...
நீங்களே சொல்லுங்க தல

ஆதி மனிதன் said...

வருகைக்கு நன்றி Farath & baba.

ஆதி மனிதன் said...

ஐயோ. நிஜமாலுமே என்ன நம்பிட்டீங்கள? நான் நீங்க யாராவது சொல்லுவீங்கன்னு பார்த்தா...இப்படி டீல்ல வுட்டுட்டீங்களே !

இன்னைக்கு நிச்சயம் அந்த ரகசியத்த சொல்லிடறன்.

ஆதி மனிதன் said...

வழக்கம் போல் உங்கள் அனைவரின் வருகைக்கும் நன்றி;

@சித்ரா
@சை. கோ. ப.
@மாதவன்
@வால்பையன்
last but not the least ... Anonymous

ஆதி மனிதன் said...

அப்பாடா ஒரு வழியா ஒரு கதை எழுதி, அதில் ஒரு கேள்வியும் கேட்டு அடுத்தவங்க பதில் தெரியாம முழிச்சு பின்னாடி (Anonymous - ஐ சேர்த்துக்கல) அதுக்கான விடையையும் சொல்லியாச்சு.

சைவகொத்துப்பரோட்டா said...

இப்படி கவுத்துட்டீங்களே!!
அவ்வ்வ்வ்..............

Madhavan said...

ஓஹோ.. அப்படியா..
எனக்குத்தான் அப்பவே தெரியுமே.. (நடிகர். வி. கே. ராமசாமி ஸ்டைலுல படிக்கவும்)

Post a Comment