கணவன் மனைவி மட்டும் தனியாக இருந்த ஒரு வீட்டில் நள்ளிரவில் உள்ளே புகுந்த திருடன் மனைவியின் கழுத்தில் கத்தியை வைத்து கணவனை மிரட்டுகிறான். மரியாதையாக பீரோவை திறந்து அதிலுள்ள நகை பணம் எல்லாவற்றையும் எடுத்து கொடு. இல்லைனா உன் மனைவியின் சங்கை அறுத்து விடுவேன் என பயமுறுத்துகிறான். கணவனுக்கு வேறு வழி தெரியவில்லை. சரி நான் எல்லாத்தையும் எடுத்து கொடுத்துடுறேன். பீரோவோட சாவி மாடியில இருக்கு. நான் போய் அத எடுத்துட்டு வந்துடுறேன். அதுவரைக்கும் என் மனைவிய ஒண்ணும் பண்ணிடாதனு கெஞ்சிக் கொண்டே மாடிப்படிகளை நோக்கி ஓடினார்.
சற்று நேரத்தில் திரும்பி வந்தவரை பார்த்த திருடனுக்கு தேள் கொட்டியதை விட அதிகமாக உடல் உதறியது. ஐயோ சாமி. என்ன விட்டுடுங்க. எனக்கு ஒண்ணும் வேணாம். நா ஓடிடுறேன் என கத்திக்கொண்டே திரும்பி பார்க்காமல் ஓடினான்.
கைல கத்தி வச்சுக்கிட்டு மிரட்டியவன் ஓடியதற்கு காரணம், திரும்பி வந்தவரின் கையில் இருந்த A.K. 47 தான் காரணம். அதெப்படி சாதாரணமான ஒருத்தவரிடம் A.K. 47 இருக்கும்னு நீங்க கேக்கறது காதுல விழுது. நான் சொன்ன சம்பவம் ரசியாவில நடந்தது. அங்க நடந்திருந்தா கூட அந்த வீட்டுகாரர் வச்சிருந்தது நிஜ A.K. 47 அல்ல. அது ஒரு inflatable fake A.K. 47. கையில் வைத்து மூடிக்கொள்ளும் அளவிற்கு உள்ள ஒரு சிறிய பலூன் போன்ற பொருளில் காற்றை நிரப்பினால் நிஜ A.K. 47 போலவே அது inflate ஆகி தோற்றமளிக்கும்.
மேலே நீங்கள் படித்தது inflatable weaponary பற்றி நானே உருவாக்கிய கதை. இனி வருவது அனைத்தும் உண்மை. சந்தேகமிருந்தால் கீழே உள்ள u-tube லின்க்கை கிளிக் செய்யுங்கள்.
ரசியாவில் உள்ள ஒரு கம்பெனி artificial/fake inflatable weaponary அதாவது நிஜ ஆயுதங்கள் போலவே தோற்றமளிக்கும் டம்மி ஆயுதங்களை அதுவும் ஒரு பையில் வைத்து அடக்கி கொள்ளும் அளவிற்கு ஆன பிளாஸ்டிக் பேக்கை காற்றடித்தால் ஒரு மிக பெரிய பீரங்கி வண்டியாக மாறும்படி வடிவமைத்திருக்கிறார்கள். இது என்ன பெரிய விஷயமான்னு நீங்க நினைக்கலாம். அனால் நீங்கள் நான் மட்டுமல்ல எதிரி நாட்டு உளவு விமானங்கள் மற்றும் ரேடார்கள் ஸ்கேன் பண்ணும்போது கூட இது ஒரிஜினல் பீரங்கி டாங்கர்கள் போல தோற்றமளிக்கும் வகையில் அதனுடைய நிறம் மற்றும் குணத்தை அமைத்திருக்கிறார்கள். எதிரி நாட்டு ரேடார்கள் லேசர் ஸ்கேன் செய்து உளவு பார்க்கும் போது கூட ஒரிஜினல் பீஸ் போலவே ரிப்போர்ட் வரவழைக்கும் வகையில் எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்திருக்கிறார்கள்.
இதனால் என்ன பலன் என்று நீங்கள் கேக்கலாம். ஒரு பீரங்கி வாங்கும் காசிற்கு ஓராயிரம் inflatable fake பேரங்கிகளை வாங்கி பாகிஸ்தான் பார்டரில் நிறுத்தினால் எட்டி பார்க்க கூட அவர்கள் பயப்பிடுவார்கள மாட்டார்களா? சரி இது மாதிரி தொழில் நுட்பம் சீக்கிரத்தில் எல்லா நாட்டிற்கும் வந்துவிடுமே என்றால் யாராலும் எது நிஜம் எது பொம்மை பீரங்கி என கண்டு பிடிக்க முடியாத போது அது பொய்னு தைரியமா சண்டைக்கு போய் அது உண்மையான பீரங்கியா போயடுச்சுனா அப்புறம் நஷ்டம் யாருக்கு?
பொய்யான பீரங்கிகள் மட்டுமல்ல, பொய்யான கண்காணிப்பு டவர்கள், ரேடார்கள் பீரங்கி மற்றும் பீரங்கி வண்டிகள் என எல்லாத்தையும் தயாரித்து இருக்கிறார்கள். உண்மையில் அது எப்படி இருக்கும் என பார்க்கவேண்டுமா? இங்கே சொடுக்குங்கள்.
நன்றி YouTube.
share on:facebook
3 comments:
எப்படியெல்லாம் யோசிக்கிராங்கையா!
i see.. nice informations
அது சரி..
இது சும்மா.. தமாசு :-)
அந்த மாதிரியா?
Post a Comment