Wednesday, November 3, 2010
போடுங்கம்மா ஒட்டு...
தமிழக தேர்தல் திருவிழாவின் போது ஒரு பத்திரிகை நிருபருக்கும் வாக்காளர்களுக்கும் இடையே நடந்த உரையாடல்.
நிருபர்: நீங்க யாருக்கு பாட்டி இந்த தேர்தல்ல வோட்டு போட போறீங்க?
பாட்டி: நான் ரெட்டை எல கட்சி. எம். ஜி. ஆருக்கு தான் வோட்டு போடுவேன்.
நிருபர்: ஐயா நீங்க எந்த கட்சிக்கு வோட்டு போட போறீங்க?
ஐயா: நான் பரம்பரை காங்கிரஸ்காரன். எங்க பரம்பரையே காங்கிரசுக்கு தான் வோட்டு போடும்.
நிருபர்: என்ன சார்? நீங்க இந்த எலெக்சன்ல எந்த கட்சிக்கு வோட்டு போட போறீங்க?
வாக்காளர்: முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் ஆறாவது முறையா முதல்வர் ஆகணும். அதனால அவருக்கு தான் என் வோட்டு.
அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த இடை தேர்தல்களின் போது கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கான பதில்களும். இதோ...
Reporter: Hello madame, To whom you are going to vote in this election?
Madame: I am going to vote for the republicans because the unemployment rate is rising and the democrats didn't do anything on that.
Reporter: Hi, Why do you want to vote democrats?
Mr. Voter: Because I don't want our government to spend too much in wars which is affecting our economy in a very bad way.
Reporter: Hi, You said that you are 87 now? Which party you are going to vote in this election.
Old lady: I use to vote for democrats before but now in this election, I am going to elect an republican because I don't want to have any more cuts in Medicare.
ஆக பரம்பரை பரம்பரையா, எனக்கு எம். ஜி. ஆரை பிடிக்கும். நான் எப்பவுமே உதய சூரியன் தான் என்று சொல்லிக் கொண்டிராமல் நாட்டு நலன்களை மையமாக வைத்து என்று நாம் சிந்தித்து வோட்டு போட போகிறோமோ அன்றே நம் நாடு உருப்பட வழி கிடைத்தது போல்தான்.
இனி சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க இடை தேர்தல்கள் பற்றி சில குறிப்புகள்...
பரபரப்பான அமெரிக்க இடை தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளது. தேர்தல் முடிவுகள் பலரும் எதிர்பார்த்தபடியே குடியரசு கட்சிக்கு சாதகமாகவும் ஜனநாயக கட்சிக்கு சரிவாகவும் அமைந்துள்ளது.
பாபி ஜிந்தாலுக்கு பிறகு மீண்டும் ஒரு இந்திய வம்சாவளி பெண்மணி (Nimrata Randhawa) நிம்ரதா ரன்டவா என்பவர் தெற்கு கரோலினா மாநிலத்திற்கு கவர்னராக (நம் நாட்டில் முதல்மந்திரிக்கு சமம்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் தெற்கு கரோலினா மாநிலத்தின் முதல் பெண் கவர்னர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
அரை டஜனுக்கு மேல் இந்திய வம்சாவளியினர் இந்த தேர்தல்களில் போட்டியிட்டனர். பெரும்பாலானவர்கள் ஜனநாயக கட்சியின் சார்பாக போட்டியிட்டதால் குடியரசுக் கட்சிக்கு சார்பாக அடித்த சூறாவளி காற்றில் காணாமல் போய்விட்டார்கள்.
அமெரிக்க வரலாற்றில் இதுவரை இரு இந்திய வம்சாவளியினர் (Dalip Singh Saund in 1956, and Bobby Jindal before he become as Governor in 2004) சட்டம் இயற்றும் (US House of Representatives ) பதவியில் இருந்துள்ளனர்.
இதனால் எல்லாம் இந்தியாவிற்கோ அல்லது அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கோ ஏதும் நன்மை ஏற்பட போவதாய் எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் ஒரு நல்ல ஆரம்பம். வாழ்க இந்தியர்கள் - வெளி நாடுகளில்.
- ஆதிமனிதன்.
share on:facebook
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment