பல லேட்டஸ்ட் மாடல் மின்னணு பொருட்கள் தற்போது இந்தியாவிலேயே குறைந்த விலைக்கு கிடைத்தாலும் ஒரு சில பொருட்கள் அமெரிக்காவில் இன்னமும் சீப் தான். அந்த வகையில் LED மற்றும் Smart டிவிக்கள் அமெரிக்காவில் விலை மிக குறைவு. அத்துடன் அங்கு நாம் பயன்படுத்தி இருப்போம். அதை இங்கு கொண்டுவருவதால் நமக்கு இரட்டை லாபம்.
அதிலும் 40 இன்ச் வரை எடுத்து வரப்படும் டிவிக்களுக்கு கஸ்டம்ஸ் ஒன்றும் டியூட்டி கட்ட சொல்லுவதில்லை (சமீபத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்ததால் டியூட்டி போடுவதாக கேள்வி. இருந்தும் கூட இந்திய விலையை ஒப்பிட்டால் லாபம் தான்). ஆனால் இங்கு வந்த பிறகு அதற்க்கு சில வேலைகளை செய்தால் தான் படம் பார்க்க முடியும்.
முதல் வேலையாக 110 டு 220 வோல்டேஜ் கன்வெர்டர் வாங்கி விடுங்கள். அதோடு சேர்த்து நீங்கள் எத்தனை இன்ச் டிவி கொண்டு வருகிறீர்களோ அதற்கென உள்ள ஸ்டெபிலைசர் வாங்கி விடுங்கள். இது எல்லாம் இருந்தால் கூட அமெரிக்க டிவி இங்கு வேலை செய்யாது. காரணம் அமெரிக்க டிவிக்கள் NTSC சிஸ்டத்திலும் இந்திய டிவிக்கள் PAL என்ற வேறொரு தொழில் நுட்பத்தில் வேலை செய்யக்கூடியவை. அமெரிக்க டிவியை இங்கு வெறுமனே கனெக்க்ஷன் கொடுத்தால் இருபது வருடத்திற்கு முன் கருப்பு வெள்ளை டிவியில் புள்ளி புள்ளியாக படம் தெரியுமே, அது போல் தான் பார்க்க முடியும்.
அப்ப என்ன செய்யறதுன்னு கேக்குறீங்களா? இரண்டு வழிகள் உண்டு. ஒன்று நீங்கள் இன்னும் ஒரு கன்வெர்டர் வாங்க வேண்டும். அதாவது NTSC டு PAL கன்வெர்டர். அல்லது HD வசதியுடன் உள்ள டிஷ் கனெக்க்ஷன் எடுக்க வேண்டும். இங்கு தான் மீண்டும் ஒரு பிரச்சனை. அதாவது அமெரிக்க டிவிக்கள் 60 Hz இல் வடிவமைக்கப் பட்டது. இந்திய டிவிக்களோ 50 Hz கொண்டவை. சோ, நீங்கள் HD கனெக்க்ஷன் வாங்கும் போது உங்களது HD பாக்ஸில் இந்த செட்டிங்கை மாற்ற வேண்டும். அது என்ன அவ்ளோ பெரிய மேட்டரான்னு கேட்டீங்கனா. இல்லீங்க, அது உங்கள் HD பாக்ஸை செட்டப் செய்ய வரும் டெக்னீஷியனை பொறுத்து தான்.
இதில் வீடியோகானின் D2H கனெக்க்ஷன் எடுத்தால் மட்டும் தானாக Hz செட் ஆகி விடுமாம். ஆனால் நான் TATASKY HD எடுத்து விட்டு படாத பாடு பட்டுவிட்டேன். முதலில் TATASKY யில் 60 Hz வசதியே இல்லை. சமீபத்தில் தான் இந்த வசதியை கொண்டு வந்துள்ளார்கள். 60 Hz செட்டப் எப்படி செய்வது என்பது அவர்களின் technician எவருக்கும் தெரியவில்லை. கனெக்க்ஷன் கொடுத்த பிறகு 'mode not supported' என்று மட்டும் தான் டிவியில் தெரிகிறது. வேறு ஒன்றும் தெரியவில்லை. பின் technician ஐ அனுப்பி விட்டு google முழுதும் மேய்ந்து மேலும் நண்பர்களிடம் அவர்களின் அனுபவங்களை கேட்ட பிறகு தான் 60 Hz எப்படி செட்டப் செய்வது என தெரிந்தது.
மறு நாள் மீண்டும் அதே technician ஐ வரவழைத்து நான் ஒவ்வொன்றாக சொல்ல சொல்ல அவர் செய்து முடித்தார். TATASKY போன்ற பெரிய நிறுவனங்கள் ஒரு வசதியை கொண்டு வந்த பின் அதை எப்படி install செய்வது என்று கூட அவர்களின் technician களுக்கு சொல்லி கொடுக்கவில்லை. இவர்களுக்காக நான் இரண்டு மூன்று மணி நேரம் இணையத்தில் தேடி எப்படி செய்வது என சொல்ல வேண்டி உள்ளது.
சரி அப்ப நீங்க எப்ப அமெரிக்காவிலிருந்து டிவி எடுத்து வர போறீங்க?
share on:facebook
6 comments:
அறியாத தகவல்
தங்கள் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன்
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
மிகச்சரியான நேரத்தில் எனக்கு கிடைத்த இந்த தகவலுக்கு முதலில் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன் நேற்று தான் என்னுடைய பெண் தொலைபேசியில் அமெரிக்காவிலிருந்து டிவி கொண்டு வரப்போவதாக சொன்னாள். நீங்கள் தெரிவித்த தகவலை அப்படியே தெரிவித்து விட்டேன். மீண்டும் நன்றி.
இதற்கு அப்பறமும் அந்த நினைப்பே வராது... உறவினர்களிடம் தகவலை சொல்ல வேண்டும்... நன்றி...
//TATASKY போன்ற பெரிய நிறுவனங்கள் ஒரு வசதியை கொண்டு வந்த பின் அதை எப்படி install செய்வது என்று கூட அவர்களின் technician களுக்கு சொல்லி கொடுக்கவில்லை//
True, but there is no necessity for it isnt?? How many set top boxes would require this change.. If a large number of people bring tv from USA, then probably technicians would have been trained.
//அதிலும் 40 இன்ச் வரை எடுத்து வரப்படும் டிவிக்களுக்கு கஸ்டம்ஸ் ஒன்றும் டியூட்டி கட்ட சொல்லுவதில்லை (சமீபத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்ததால் டியூட்டி போடுவதாக கேள்வி. இருந்தும் கூட இந்திய விலையை ஒப்பிட்டால் லாபம் தான்)//
I think it "WAS" 32 inches, and now it is also not allowed as per the link below.
http://www.thehindu.com/todays-paper/dutyfree-import-of-flat-tvs-banned/article5040187.ece
Remember a rule, where if you use the product for 2 years (or some duration) you can bring it back to india without any duty.
--Saturn730
இந்தா இருக்கும் சிங்கப்பூரை விட்டுட்டு டிவிக்காக அமெரிக்கா யாராச்சும் போவாங்களா?
இந்த பிரிச்சனை வேண்டாம் என்று தான், நான் ஆசை ஆசையாக வாங்கிய 50 இன்ச் பானசோனிக் பிளாஸ்மா டிவியை அங்கயே உடைத்து விட்டேன் !!!
Post a Comment