Wednesday, January 30, 2013

விஸ்வரூபம் பற்றி இனி பதிவுகள் கிடையாது...


அப்புறம் என்னங்க? நேத்திக்கு முந்தாநாள் நீங்களே உங்கள் பிரச்சனைகளை பேசி தீத்துக்குங்க அப்படின்னு ஒரு அறிவுரை(தீர்ப்பு!). நேற்று இரவு அரசின் தடைக்கு நீதிமன்றம் தடை என்று ஒரே கொண்டாட்டம். சரி ஒரு வழியா படம் வந்தா ஒரு பத்து நாள் பொருத்திருந்தா பாத்துடலாம் என்று பார்த்தால், இன்று மீண்டும் அரசின் தடை ஆணை தொடரும் என்று ஒரு இடைக்கால தீர்ப்பு.

அட போங்கப்பா நீங்களும் உங்கள் பிரச்சனைகளும். ஒரு சினிமாவுக்கு இவ்வளவு கூத்தா? புடிச்சா பழகுவோம் இல்லனா விட்டுடுவோம்னு நம்ம தலைவர் சொன்ன மாதிரி புடிச்சா படத்த பாருங்க இல்லனா விட்டுட வேண்டியதுதானே? நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கு. சென்னையில் போடப்பட்ட மேம்பாலங்கள் சில அப்படியே கிடப்பில் கிடக்கு. சாலைகள் மாட்டு வண்டி ஓட்டுவதற்கு கூட லாயக்கில்லாமல் இருக்கிறது. இதை எல்லாம் யாரும் கண்டு கொள்ளவில்லை. ஒரு ஐம்பது நாள் அல்லது நூறு நாள் ஓடிவிட்டு பழசாகி போக போகிற படத்துக்கு இவ்வளவு பிரச்னை.

இதில் தலைமை நீதிபதியை நடு சாமத்தில் சந்தித்து அரசு சார்பில் மீண்டும் தடை கோரப்பட்டதாம். இப்படி ஒரு சுறுசுறுப்பு மற்ற விசயங்களிலும் காட்டப்பட்டால் நாடு எப்பவோ முன்னேறி இருக்கும்.

ஆங், சொல்ல மறந்துட்டேனே! இப்ப கடைசி நியூஸ். கமல் இசுலாமிய பிரதிநிதிகளுடன் கூட்டாக அறிக்கை விட்டுள்ளார். அவர்கள் கூறும் ஆட்சேபகரமான காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்படும். எங்களுக்கும் அவர்களுக்கும் இனி எந்த பிரச்னையும் இல்லை என்று மீண்டும் மீண்டும் டி.வியில் பேசுகிறார்.

என்னமோ போங்க....இனி விஸ்வரூபம் பற்றி நான் பதிவு எழுத போவதில்லை(யாரு கேட்டா அப்படீங்கிறீங்களா? அது சரி). 



share on:facebook

No comments:

Post a Comment