Tuesday, January 29, 2013

அமெரிக்க டி.வியும், அதனால் ஏற்பட்ட அவஸ்தைகளும்...


ஒரு காலத்தில் VCR, கேமரா போன்றவைகள் வெளிநாடுகளில் இருந்து அதிகம் எடுத்து/வாங்கி வரப்பட்ட பொருட்கள். தற்போது அதெல்லாம் இங்கு சர்வ சாதரணமாக கிடைப்பதால் பெரிய பெரிய டி.விக்கள்  மற்றும் லேட்டஸ்ட் மாடல் செல் போன்கள் தான் தற்போது அதிகமாக கொண்டு வருவதாக தெரிகிறது.

என்னை பொருத்தவரையில் அமெரிக்காவிலிருந்து (விலை குறைவாக இருந்தால் கூட) சில பொருட்கள் கொண்டு வருவதை தவிர்ப்பது நல்லது. அனுபவத்தில் தான் பேசுகிறேன். அதிலும் குறிப்பாக எலெக்ட்ரிக்கல் ஐட்டம்ஸ் எடுத்து வராமல் இருப்பதே சிறந்தது. கடந்த 2011 ஆம் ஆண்டு நல்ல டீலில் கிடைத்ததே என்று ஒரு 40 இன்ச் சாம்சங் LED டி.வி. வாங்கினேன். அமெரிக்காவில் இருந்தவரை அதை நன்றாக பார்த்து என்ஜாய் செய்தோம். இந்தியாவிற்கு திரும்பி வரும்போது கையோடு டி.வியையும் கொண்டு வந்தோம். கடந்த ஆறு மாத காலமாக பிரிக்காமலே வைத்திருந்து சென்ற வாரம் தான் பாக்கிங்கில் இருந்து வெளியே எடுத்தோம்.

குழந்தைகள் அய்யா... இனி பெரிய டி.வியில் பார்க்கலாம் என சந்தோசமாக இருந்தார்கள். நானும் அப்படிதான் நினைத்தேன். அதன் பிறகு ஒவ்வொன்றாக ஆராயும் போது தான் அமெரிக்காவில் இருந்து கொண்டு வரும் டி.விக்களை இங்கு செட் செய்ய மேலும் என்னென்ன வாங்க வேண்டி இருக்கிறது என்று தெரிந்தது. அது மட்டுமா ஒவ்வொன்றின் விலையை கேட்டு, அது கிடைக்கும் இடம் தேடி அலைந்தது எல்லாம் தலையை சுற்றி பேசாமல் இங்கு வந்து ஒரு புது டி.வியை வாங்கி இருக்கலாமோ என என்னும்படி ஆயிற்று.

முதலில் அதற்கு ஸ்டெபிலைசர் வாங்க வேண்டும். 40 இன்ச் LED டி.விக்கென்றே V-Guard இல் விற்கிறார்கள். விலை அதிகம் இல்லை வெறும் 2000 சொச்சம் தான்! அடுத்ததாக 110V to 220/240V கன்வெர்ட்டர் வாங்கியாக வேண்டும். அது ஒரு ஆயிரம் ரூபாய்க்கும் மேல். சரி இதோடு விட்டால் போதும் என்று எல்லாவற்றையும் வாங்கி வந்து டி.வியை ஆன் செய்தால் ஒரே க்ரைன்ஸ்...அப்புறம் தான் நியாபகம் வந்தது அமெரிக்க டி.விக்கள் எல்லாம் NTSC format தான் சப்போர்ட் செய்யும் என்று. நம்மூரில் PAL சிஸ்டம். அப்புறம் என்ன? அதற்கு ஒரு கன்வெர்டர். இது தான் சற்று அல்ல மிகவும் விலை அதிகம். அதாவது சாதாரணமாக AV டைப் என்றால் ஆயிரத்து சொச்சம் ருபாய், அதுவே HDMI டைப் என்றால் நாலாயிரத்து சொச்சம். எல்லாம் செய்து அதை HD குவாலிட்டியில் பார்க்கவில்லை என்றால் எப்படி என்று அதற்க்கு ஒரு நாலாயிரம் செலவு. இந்த வீடியோ கன்வெர்டர் வேறு பல இடங்களில் கிடைக்கவே இல்லை.

ஒரு வழியாக எல்லாம் வாங்கி சேர்த்து டி.வி. தற்போது நன்றாக வேலை செய்கிறது. இதில் கூத்து என்னவென்றால் இது எல்லாம் டி.வியை வாங்கும் போதே தெரிந்த விஷயம் தான். புதிதாக வாங்கி ஒரு வருடத்திற்குள்ளாக அதை அங்கே விட்டு விட்டு வர மனமில்லாத காரணத்தால் இங்கு கொண்டு வரும்படியானது. எப்படி பார்த்தாலும் விலையும் இந்தியாவை விட கம்மிதான். ஆனால் அதற்கு தேவையான எல்லாவற்றையும் வாங்கி செட் செய்வது தான் பெரிய வேலையாக உள்ளது. இப்போ டி.வி. HD quality என்பதால் dish connection ம் HD பாக்கேஜ் வாங்கும்படி ஆயிற்று. அதற்கு மாதம் 100 ருபாய் எக்ஸ்ட்ரா. விதி வலியது. என்ன செய்ய!


        

share on:facebook

6 comments:

Avargal Unmaigal said...

எனது அமெரிக்க நணபர் ஒருவர் சென்னையில் வீடு கட்டி அங்கு தன் குடும்பத்தை மூவ் செய்துள்ளார். அவர் இங்கு இருந்து ஹேஸ் ஸ்டவ், ஃப்ரிஜ், டிஸ்வாசர், டிவு மற்றும் பல அப்ளையண்ஸ் இங்கிருந்து புதுசாக வாங்கி சென்றார் அவர் செய்து ஒரு காரியம் வீட்டில் 110 வோல்ட் லையனும் 210 லையனும் போட்டதுதான். எல்லாம் மிக நன்றாக வேளை செய்கிறது என்றும் சொன்னார். அவர் வாங்கியது எல்லாம் சாம்சங்க் அத்ற்கு இந்தியாவில் மிகவும் நன்றாக சர்வீஸ் கிடைக்கிறது என்றும் சொன்னார்

அமுதா கிருஷ்ணா said...

அட ராமா.அதுக்கு இங்கன வந்து 46”..55” வாங்கி இருக்கலாமோ.

Vadivelan said...

Good point......
new gadgets are not reducing money...

touch screen mobile without data plan is useless,, similarly LED without HD useless.

we been forced to buy gadgets, may be peer pressure or just for saying I have x inch LED tv.

கோவை2தில்லி said...

ஓ! இப்படியெல்லாம் வேற இருக்கா?

நம்பள்கி said...

multi-system support TV வாங்கினால் போதும். இந்த Hz சமாசாரம் 50 அல்லது 60 மாறுபடும். கவனம்.

வீடு முழுவதும் 110 volt இந்தியாவில் ஸ்டெப் டவுன் பண்ணி தரங்களா? ரொம்ப செலவு ஆகுமே?

you need twice the current (Amps) to step down from 220V to 110. if you use, say, 20 amps in in India with 220 V, when you step down to 110V you need 40 amps (a kind of inversely proportional) for the same.

Will the home support more current? I mean Amps.

It is quite risky to convert the entire home to 110 in India (because of Ams)---as opposed to just use a step down transformer for one appliance.


Avargal Unmaigal said...@நம்பள்கி

///வீடு முழுவதும் 110 volt இந்தியாவில் ஸ்டெப் டவுன் பண்ணி தரங்களா?///

ஆமாம் அவர் வீட்டில் ஸ்டெப் டவுன் பண்ணி இங்கிருந்து(அமெரிக்காவில்) வாங்கி போன அப்ளையன்சுக்கெல்லாம் இணைப்பு கொடுத்து இருக்கிறார்.

செலவு அதிகம்தான் காரணம் சென்னை அண்ணா நகரில் இடம் வாங்கி தனி வீடாகவும் வீட்டின் உள்ளே அமெரிக்கா ஸ்டைலில் கட்டியுள்ளதாக சொன்னார்

Post a Comment