Thursday, December 20, 2012

பெண்களும் அண்ணாவும்...


பேரறிஞர் அண்ணா அரசியலில் மட்டுமன்றி அறிவாற்றலிலும் மாமேதை என்பதை எல்லோரும் அறிவர். அமெரிக்க உள்துறை மற்றும் யேல் பல்கலை கழகத்தின் விருந்தினராக 1968 ஆம் ஆண்டு அமெரிக்கா சென்ற அறிஞர் அண்ணாவுக்கு யேல் பல்கலைகழகம் chubb fellowship கொடுத்து கவுரவித்தது. அமெரிக்கர் அல்லாதவர் ஒருவர் chubb fellowship ஆனது அதுவே முதல் முறை. தினமும் படுக்க போகும் முன் இரு புதிய ஆங்கில வார்த்தைகளை அறிந்து கொள்வது அறிஞர் அண்ணாவின் வழக்கமாக இருந்தது.

இனி வருவது நம் லோக்கல் அண்ணாக்களை பற்றியது .

எங்கள் நிறுவனத்தில் வெளி மாநிலங்களில் இருந்து (பெரும்பாலும் மும்பையிலிருந்து) வந்து பயிற்சி எடுத்துக்கொள்ளும் trainees பலரும் அருகே உள்ள கம்பெனி கெஸ்ட் ஹவுசில் தங்கி உள்ளார்கள். இவர்களும் எங்கள் கம்பெனி பஸ்ஸில் தான் போய் வருவார்கள். பெரும்பாலான பஸ்கள் காண்ட்ராக்ட் முறையில் ஓடுவதால் ஓட்டுனர்கள் குறிப்பிட்ட இடத்தில் தான் ஊழியர்களை ஏற்றி இறக்குவார்கள். இருந்தாலும் இந்த (வட இந்திய) பெண்கள் அழகாக கொஞ்சும் தமிழில் 'அண்ணா...பிளீஸ் ஸ்டாப்' என்று டிரைவரிடம் கேட்டால் போதும், வண்டி எங்கே போய் கொண்டிருந்தாலும் உடனே அங்கேயே நிறுத்தி விடுவார். சார், டிரைவர் என்று சொல்வதை விட 'அண்ணா' என்று சொல்லும் போது அதற்குள் ஒரு பாசம் ஏற்பட்டு விடுகிறது போலும்.

அதே போல் அவ்வப்போது ஷேர் ஆட்டோக்களில் பயணிக்கும் போதும் பார்த்திருக்கிறேன். பெண்கள் பெரும்பாலும் 'அண்ணா' என்ற சொல்லை தான் உபயோகிக்கிறார்கள். அது ஆட்டோ டிரைவர்களுக்கு மரியாதையையும், அண்ணன் என்று உறவுக்குள்ளும் வருவதால் பெரும்பாலும் ரெஸ்பான்ஸ் நன்றாகவே இருக்கிறது. தற்போது நடந்து வரும் பெண்களுக்கு எதிரான சம்பவங்களை பார்க்கும் போது பெண்கள் இவ்வாறு 'அண்ணன்' முறை வைத்து அழைப்பதே நன்று என்று தெரிகிறது.

மும்பையில் இருந்த போது எங்கள் அபார்ட்மெண்ட் அலுவலகத்தில் வேலை செய்த பெண் ஒருவர் ரெண்டல் காண்ட்ராக்ட் சம்பந்தமாக என்னை ஒவ்வொரு முறை அழைக்கும் போது 'பையா(baiya), பையா' என்பார். ஆரம்பத்தில் என்னடா இவ்வளவு சின்ன பொண்ணு நம்மை பார்த்து பையா என்று அழைக்கிறதே என்று எனக்கு எரிச்சலாக இருந்தது. பின் வட இந்திய நண்பர் ஒருவரிடம் இது பற்றி விசாரித்த போது, பையா(baiya) என்றால் சகோதரா என்று அர்த்தம். உங்களை சகோதரா என்று தான் அந்த பெண் அழைத்திருக்கிறாள் என்று கூறினார்.

ஹ்ம்ம்...அண்ணா என்றாலே பாசமும் மரியாதையும் தான். உங்களுக்கு ஏதாவது அனுபவம் இருக்கா இது மாதிரி?




share on:facebook

1 comment:

அமுதா கிருஷ்ணா said...

ஆஹா,நான் கூட வயதானவர்கள் என்றால் அண்ணா என்றும்,சிறியவர்களை தம்பி என்றும் தான் கூப்பிடுவேன். அதுவே என் மகனுக்கும் தொத்தி கொண்டது. பெட்ரோல் போடுபவர்களை, வீட்டிற்கு கேஸ் போடுபவரை,ஆட்டோ ட்ரைவர்களை,வண்டியில் செல்லும் போது வழியில் யாரிடமாவது வழி கேட்டால்,துணிக்கடையில் இருக்கும் சேல்ஸ்மேன்களை இப்படி சொல்லி கொண்டே போகலாம்.

வட மாநிலங்களுக்கு போகும் போது bhaiya-சகோதரன் என்ற நினைப்பில் சின்ன பையன்களை கூப்பிட என் மகன் அம்மா அது அண்ணாவிற்கு ஹிந்தியில் சொல்லும் வார்த்தை என்றானே.பாருங்கள் அந்த பெண் உங்களை தம்பி என்று தான் கூப்பிட்டு உள்ளது.

Post a Comment