Monday, April 30, 2012

பள்ளிகளை இழுத்து மூடும் உரிமை பெற்ற பெற்றோர்கள் - அமெரிக்காவின் அசத்தல் சட்டம்.


"Parent Trigger Law" - அமெரிக்காவில் சில மாகாணங்களில் மட்டும் இச் சட்டம் நடை முறையில் உள்ளது. இதனால் என்ன பயன் என்கிறீர்களா? இச் சட்டத்தின் மூலம் ஒரு பள்ளி சரிவர இயங்கவில்லை என அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் நினைத்தால் அப் பள்ளியையே இழுத்து மூடி விட முடியும். அது மட்டுமல்ல. ஒரு குறிப்பிட்ட ஆசிரியர், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் என யாரை வேண்டுமானாலும் பெற்றோர்கள் முடிவு செய்தால் வோட்டெடுப்பின் மூலம் அவர்களை மாற்றலாம். அது மட்டுமில்லை. அப்பள்ளி எப்படி இயங்க வேண்டும் எனவும் பெற்றோர்கள் நினைத்தால் அதையும் அவர்கள் அவர்கள் மாற்றலாம்.


அமெரிக்காவை பொறுத்தவரை பெரும்பாலானோர் அரசு (பப்ளிக்) பள்ளிகளில் தான் படிப்பார்கள். தனியார் பள்ளிகள் மிகவும் குறைவு. அது தவிர தனியார் பள்ளியில் படிக்க வைக்க வேண்டுமானால் பெருமளவு பணம் செலவு செய்ய வேண்டும். ஆனால் அரசு பள்ளிகள் அப்படி இல்லை. கிண்டர் கார்டன் முதல் உயர்நிலை பள்ளி வரை, அதாவது கல்லூரி செல்லும் வரை ஒரு பைசா (சென்ட்) கட்டனமாகவோ, புத்தகம், ஸ்பெஷல் பீஸ் அந்த பீஸ் இந்த பீஸ் என எந்த ஒரு கட்டணமும் கிடையாது. புத்தகங்கள் கூட பள்ளியிலேயே கொடுத்து விடுவார்கள். இது எல்லாம் எப்படி சத்தியம் என நீங்கள் கேட்கலாம்.

அதற்க்கு காரணம், நம்மூர்ரில் ஒரு நகராட்சி பள்ளி இருந்தால் அதில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் ஏதோ அவர்கள் ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக சொல்லி கொடுப்பதாகவே நினைப்பு. அரசாங்கம் தானே நமக்கு சம்பளம் கொடுக்கிறது? மாணவர்களா கொடுகிறார்கள் என்ற அவர்களின் எண்ணம். அதே போல், பொது மக்களும் அது ஏழை மாணவர்கள் படிக்கும் பள்ளி. அங்கு தரமான கல்வி கிடைக்காது என்று பல காரணங்கள்.

இவை எல்லாவற்றையும் விட முக்கிய காரணம், நம் வரி காசில் தான் ஒரு நகராட்சி நடக்கிறது என்பதை நாம் மறந்து விடுகிறோம். அதே போல் நகராட்சி உறுபினர்கள் அதன் தலைவர் என எல்லோரும் அவரவர் சார்ந்த கட்சியின் பலத்தாலேயே பதவிக்கு வருகிறார்கள். இதற்க்கு ஒரே தீர்வு குறைந்த பட்சம் உள்ளாட்சியிலாவது மக்கள் சுயேச்சையாக போட்டி இடும் நல்லவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

அது மட்டுமில்லாமல், இங்கு எல்லோரும் பப்ளிக் பள்ளியிலேயே படித்து வருவதால் ஒவ்வொரு குழந்தையின் பெற்றோரும் இது நான் படித்த பள்ளி. இங்கு என் குழந்தையும் நன்றாக படித்து முன்னேறும் என்ற நம்பிக்கை வைத்துள்ளார்கள். சமீபத்தில் தமிழகத்தில் (மதுரையில் என நினைக்கிறேன்) ஒரு மாவட்ட கலெக்டர் தன குழந்தையை நகராட்சி பள்ளியில் சேர்த்ததாக படித்தேன். என்ன ஒரு ஆழமான, பரந்த நோக்கம். தன குழந்தை ஒரு அரசு பள்ளியில் படித்தால் அப்பள்ளியில் பணியாற்றும் அனைவரும் ஒழுங்காக வேலை பார்ப்பார்கள். மற்ற பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை அங்கு சேர்ப்பார்கள் என நினைத்து தான் அந்த முடிவிற்கு வந்திருப்பார் என நினைக்கிறேன்.

அந்த மாதிரியான ஒரு சூழல் தான் அமெரிக்காவில் பெரும்பாலான பள்ளிகளில் உள்ளது. அதனால் தான் அனைத்து அரசு பள்ளிகளும் இங்கு நன்கு இயங்குகின்றன.

அதே போல் ஒரு நிலைமை நம் நாட்டிலும் ஏற்படுமா? நிச்சயம் ஏற்படும். எப்போது? அரசாங்கத்தில் வேலை பார்ப்பவர்கள் எல்லாம் அவர்கள் வாங்கும் சம்பளம் மக்கள் கொடுக்கும் வரிப் பணம் என்பதை உணரும்போது. நல்லவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கும் போது. நல்லவர்கள் அரசியலுக்கு வரும் போது. வந்தபின்பும், வெற்றி பெற்ற பின்பும் நல்லவர்களாகவே இருக்கும் போது.

share on:facebook

5 comments:

Unknown said...

அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் கட்டாயம் அவர்கள் குழந்தைகளை அரசு பள்ளியிலேயே சேர்க்க வேண்டும் என அரசு சட்டம் கொண்டுவந்தால், நிச்சயம் அரசு பள்ளிகள் தரம் உயரும்.

CS. Mohan Kumar said...

ம்ம் பெருமூச்சு விடவதை தவிர வேறேதும் செய்ய முடியலை

இப்படிக்கு
பள்ளியால் மிக பாதிக்கப்பட்டோர் சங்க உறுப்பினர்

இராஜராஜேஸ்வரி said...

இது நான் படித்த பள்ளி. இங்கு என் குழந்தையும் நன்றாக படித்து முன்னேறும் என்ற நம்பிக்கை வைத்துள்ளார்கள்.

நம்பிக்கை வரிகள் வியக்கவைக்கின்றன்..

ப.கந்தசாமி said...

//மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கும் போது. நல்லவர்கள் அரசியலுக்கு வரும் போது. வந்தபின்பும், வெற்றி பெற்ற பின்பும் நல்லவர்களாகவே இருக்கும் போது.//

உங்கள் நம்பிக்கையைப் பாராட்டுகிறேன்.

அமுதா கிருஷ்ணா said...

ஒன்றும் சொல்றதக்கு இல்லை..

Post a Comment