Sunday, March 18, 2012

அமெரிக்க டிரைவிங் லைசன்ஸ் அவ(வி)திகள்: பாகம் - 1


உங்களிடம் ஒருவர் வந்து நம்மூர் வட்டார போக்கு வரத்து அலுவலகத்தில் எதற்கும் லஞ்சம் வாங்குவதில்லை என்றால் உங்களால் நம்ப முடியுமா? ஆனால் நம்பத்தான் வேண்டும் நீங்கள். ஆம், ஆனால் ஒரே ஒரே வித்யாசம். நம்மூர் என்று நான் சொன்னது அமெரிக்காவில் உள்ள எந்த ஒரு நகரத்தின் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை (DMV).

அமெரிக்காவில் DMV என்று சொல்லப் படுகின்ற நம்மூர் வட்டார போக்குவரத்து அலுவலக செயல்பாடுகள் பற்றி ஒரு பதிவு போட வேண்டும் என்பது என் நீண்ட நாளைய ஆசை. அதை பற்றி எழுதுவதால் உடனே இந்தியாவை பற்றி குறை கூறுவதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். ஒரு ஆதங்கத்தில் தான் இதை எழுதுகிறேன். 

அமெரிக்காவில் டிரைவிங் லைசன்ஸ் என்பது நம்மூர் ரேஷன் அட்டையை போன்ற மிக முக்கியமான ஒரு ஆவணம். வண்டி ஓட்டும் உரிமையை தருவதை விட ஓட்டுனர் அடையாள அட்டை இங்கு ஒரு முக்கியமான அடையாள அட்டையாக (identity card) கையாளப் படுகிறது. பாங்கில் அக்கவுன்ட் ஓபன் பண்ணுவது முதல், ஹோட்டலில் ரூம் போடுவது வரை இங்கு ஓட்டுனர் உரிமையையை தான் அடையாள அட்டையாக உபயோகிக்கிறார்கள். அதுவும் இல்லாமல் கார் ஓட்ட முடியாது என்பது இங்கு ஒரு கால் இல்லாதவன் போல் ஆகும். ஆகவே ஓட்டுனர் உரிமை பெறுவது என்பது இங்கு நம்மூர் எஸ். எஸ். எல். சி. தேர்வு எழுதி பாஸாவது போல.

அப்படி பட்ட முக்கியவத்துவம் வாய்ந்த ஓட்டுனர் உரிமையை பெறுவதற்கு இங்கு ஒரு பைசா லஞ்சமாக கொடுக்க வேண்டியதில்லை. பெரும்பாலானோர் முதலில் எழுத்து தேர்வு எழுத வேண்டும். ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒரு விதிமுறை இருந்தாலும் பொதுவாக நாற்பது கேள்விகள் இருக்கும். அதில் குறைந்த பட்சம் முப்பத்தி நாலு கேள்விகளுக்கு சரியான பதில் அளித்தால் தான் 'பயிற்சி' ஓட்டுனர் உரிமை தருவார்கள்.

எழுத்து தேர்விற்கு ஏதோ பப்ளிக் எக்ஸ்சாமுக்கு தயாராவது போல் போக்கு வரத்து விதிகள் அனைத்தையும் ஒன்று விடாமல் படித்து மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும். பத்து வருடம் அமெரிக்காவில் கார் ஒட்டி இருந்தாலும் இன்னொரு மாகாணத்திற்கு செல்லும் போது அங்கு எழுத்து தேர்வு எழுத வேண்டிய கட்டாயம் இருப்பதால் அதை பாசாகாமல் நமக்கு ரெகுலர் லைசன்ஸ் கிடைக்காது. ஆன்லைன், பழைய வினாத்தாள்கள் என எல்லாவற்றையும் படித்து பார்க்க வேண்டும்.

எழுத்து தேர்வில் தேர்வாகி விட்டால் அவர்களுக்கு பயிற்சி ஓட்டுனர் உரிமை தருவார்கள். பயிற்சி ஓட்டுனர் உரிமை வைத்திருப்பவர்கள் 'L' போர்ட் எல்லாம் போட்டுக் கொண்டு காரை ஓட்ட வேண்டியதில்லை. அதே நேரம் உரிய லைசன்ஸ் வைத்திருக்கும் ஒருவர் வண்டி ஓட்டுபவரின் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருக்க வேண்டும்.

அமெரிக்காவில் பொதுவாக மக்கள் அதிகம் காணப்படும் இடங்களில் 'DMV' அலுவலகமும் ஒன்று. ஆனால், நம்மூர் மாதிரி உள்ளே நுழைவதற்கு அரை கிலோ மீட்டார் முன்பே புரோக்கர்களையும், தரகர்களையும் பார்க்க முடியாது. உரிய பயிற்சி ஓட்டுனர் லைசன்ஸ், வாகனத்திற்கான காப்பீடு, பதிவு அட்டை ஆகியவற்றுடன் லைசன்ஸ் வைத்திருக்கும் ஒருவருடன் சென்றால் தான் 'ரோடு டெஸ்ட்' எடுத்துக் கொள்ள முடியும். டெஸ்ட் எடுக்கும் முன், காரின் முக்கியமான கருவிகள், செயல்பாடுகளை காண்பிக்க, செயல்படுத்த சொல்லி கேட்பார்கள். அதற்கும் மதிப்பெண் உண்டு. அதன் பிறகே கண்காணிப்பாளர் உங்களுடன் அமர்ந்து வண்டியை ஓட்டச் சொல்லி கேட்பார்.

அதன் பிறகு ரோடு டெஸ்ட் எப்படி இருக்கும். அது அடுத்த பதிவில்...

அமெரிக்க போலீஸ் பற்றி கொள்ளை கொள்ளும் அமெரிக்க போலீஸ்.

அமெரிக்க அரசு பள்ளிகள் பற்றி அமெரிக்க அரசு பள்ளிகள் சிறந்தவையா?

share on:facebook

7 comments:

பழனி.கந்தசாமி said...

தொடரட்டும் உங்கள் வயிற்றெரிச்சல் பணி!!!!!!!

Kovai Neram said...

சீக்கிரம் சொல்லுங்க...

Sankar Gurusamy said...

இந்தியாவில் இருப்பவர்களின் வயிற்றெரிச்சல் அமெரிக்காவரை வீசும் என நினைக்கிறேன்.

பகிர்வுக்கு மிக்க நன்றி..

http://anubhudhi.blogspot.in/

Madhavan Srinivasagopalan said...

Systematic way..

I appreciate. I feel sorry for the status here. Here you pay and get license even without knowing 'abc...' of traffic rules.

ஆதி மனிதன் said...

பழனி.கந்தசாமி said...

//தொடரட்டும் உங்கள் வயிற்றெரிச்சல் பணி!!!!!!! //

புரியவில்லை சார்?

ஆதி மனிதன் said...

@ Kovai Neram said...
//சீக்கிரம் சொல்லுங்க... //

நன்றி கோவை நேரம்: கண்டிப்பாக.

@Sankar Gurusamy said...
//இந்தியாவில் இருப்பவர்களின் வயிற்றெரிச்சல் அமெரிக்காவரை வீசும் என நினைக்கிறேன்.//

நன்றி சங்கர். வயிற்றெரிச்சல் படுவதற்காக இதை நான் எழுதவில்லை. ஒரு ஆதங்கத்தில் தான் எழுதினேன்.

ஆதி மனிதன் said...

@ Madhavan Srinivasagopalan said...
//Systematic way..//

Yes. Moreover no bribes. That is the unbelievable factor.

Post a Comment