Monday, June 27, 2011

இந்த வார (அரசியல்) காமெடி.


காமெடி # 1 : குப்புற தள்ளிய குதிரை மண்ணையும் அள்ளி போட்டதாம். அது  போல் தான்  தற்போது அமெரிக்கா கூறுவது. ஈராக்கு மீது படை எடுத்து  அதனால் அந்த நாடே  தற்போது சிதறி சின்னா பின்னமானபின், அமெரிக்க  செனட்டர் ஒருவர் இராக்  போரினால் அமெரிக்காவிற்கு பல கோடி ருபாய்  செலவாகி போனதால், எண்ணெய்  வளமிக்க நாடான ஈராக், அமெரிக்கா  போருக்கு செலவழித்த அனைத்து  பணத்தையும் இராக் தற்போது திரும்பி தர  வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.  இதை எங்கு போய் முட்டி  கொள்வது.   

காமெடி # 2 : தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்ற பின் பள்ளிகளின்  கட்டண உயர்வை கட்டுபடுத்துவது தொடர்பாக கேள்வி எழுந்த போது,  இதுவரை பெற்றோர்கள் தரப்பிலிருந்து அரசுக்கு எந்த ஒரு கோரிக்கையும்  முறையாக வரவில்லை. அப்படி யாராவது முறையாக கம்ப்ளைன்ட்  கொடுத்தால் அதை அரசு பரிசீலிக்கும் என்கிறார். ஆமா, தி.மு.க. அரசின் பல நல்ல திட்டங்களை எல்லாம் தற்போது தூக்கி வருகிறீர்களே.  இதற்க்கெல்லாம் யாராவது முறையாக கம்ளைன்ட் குடுத்தார்களா என்ன?       

காமெடி # 3 : புதிய தலைமை செயலத்தை புறக்கணிக்கும் முதல்வர் ஜெயலலிதா தி.மு.க. அரசு கட்டி உள்ள மேம்பாலங்கள் வழியாக போவதை  தவிர்க்க வேண்டும் என திரு. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இப்படியே  ஒவ்வொரு ஆட்சி மாறும் போதும் மற்றவர்கள் செய்ததை அடுத்து வருபவர்  புறக்கணிக்கும் நிலை வந்தால் அடுத்து மக்கள் உங்கள் இருவரையும் சேர்த்தே  புறக்கணிக்கும் காலம் நிச்சயம் வரும். ஆமா சொல்லிப்புட்டேன். 

காமெடி # 4 : கருப்பு பணத்திற்காக போராடி வரும் அண்ணா ஹசாரே  அவர்கள் அரசுக்கு வைத்த கோரிக்கை பற்றி கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ்  கட்சி,  பொதுநல வாதிகளின்  கோரிக்கைகளுக்கெல்லாம் மத்திய அரசு செவி கொடுக்க வேண்டாம் என அருள் மொழி பாவித்திருக்கிறது.  அட பாவிகளா! அப்ப சுயநல வாதிகளின் கோரிக்கைகளைத்தான்  நிறைவேத்துவீர்களோ?    

காமெடி # 5 : ஆங், கருப்பு பணம்னு சொன்னவுடன் தான் இன்னொன்னு  ஜாபகத்துக்கு  வருது. இது மஞ்சள் இல்ல காவி பணம்னு வச்சுக்குங்களேன்.  ஆந்திராவில் சாய்பாபா காலமானபின் அவரின் டிரஸ்ட்டில் இருந்து கோடிக்கணக்கான  ருபாய்  கடத்தப்பட, டிரஸ்ட்டை  சேர்ந்தவர்கள் தற்போது அரசிடம் இதை பற்றி முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் ஆனால் அதே சமயம் இந்த விவகாரத்தில் டிரஸ்ட்டை  சேர்ந்தவர்களை பலிகடாவாக ஆக்கிவிட கூடாது எனவும் கருத்து  தெரிவித்துள்ளார்கள். பணம் கடத்தப்பட்டதே டிரஸ்ட்டிலிருந்து தான். ஆனால்  இதில் டிரஸ்ட்டை சேர்ந்தவர்களை பலிகடா ஆக்க கூடாதாம்.  என்ன  கொடுமை சரவணா இது?



share on:facebook

1 comment:

சாய்ராம் கோபாலன் said...

செம கலக்கல் ஆதி. உங்கள் ப்ளாக் வந்து நிரம்ப நாள் ஆகிவிட்டது.

சாய்பாபா பணம் மேட்டர் பார்த்தால், அவராலேயே அவர் பணத்தை காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை !!

பிற்காலத்தில் தமிழ்நாடு குழந்தைகள் மண்டுகளாய் இருக்கு எல்லா அரசியல்வாதிகளும் ரொம்பவே பிரயத்தனம் படுகின்றார்கள்

Post a Comment