Friday, February 26, 2010

அஜீத் ஒரு தும்பை மலர் - கருணாநிதி புகழாரம்.

திரைத்துறையினருக்கு கருணாநிதி வேண்டுகோள் -   கட்டுப்பாடு காக்க வேண்டும்.

இதுகுறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை.

..............அழகான குழந்தையை மேலும் அலங்கரித்து பள்ளிக்கு அனுப்பும் தாய், அதன் கன்னத்தில் ஒரு சிறிய கறுப்பு பொட்டு வைத்து அனுப்புவதைப் பார்க்கிறோமே, அதைப் போன்றதொரு பொட்டு, அந்த விழாவில் வைக்கப்பட்டதைப் பெரிதுபடுத்தி, அந்தப் பொட்டின் வண்ணத்தை முகம் முழுவதும் பூசிக்கொள்ளும், புரியாத குழந்தையைப் போல ஒரு நிகழ்ச்சி அமைந்துவிட்டது உண்மை தான்.


எல்லாரும் வாழ்த்துரைத்து அள்ளித் தெளித்த அன்பு மலர்களுக்கிடையே, அஜித் எனும் தும்பை மலரும் என் மேல் விழுந்து, அது மாசற்ற மலர் எனினும், எனக்கு நடந்த விழாவுக்கு எதிராக விழுந்த மலரோ என்ற சந்தேகத்தை எழுப்பியது. "இது தான் சமயம்' என சிலர், எனக்கு நடந்த விழாவை திசை திருப்ப முயன்றனர். இருக்கவே இருக்கின்றனவே சில பத்திரிகைகள், அவை அதைப் பூதாகரமாக உருவாக்க முனைந்தபோது, அதை மேடையேற விடாமல், ஒத்திகையிலேயே ஒரு வழி செய்து, முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியாக, தம்பி அஜித் என் னைச் சந்தித்து விளக்கமளித்தார். கடைசியில், பெரிதாக வெடிக்கப் போகிறது என எதிர்பார்த்தவர்களுக்கு புஸ்வாணமாகி விட்ட கதையாயிற்று. தாம் கண்ட கனவு கலைந்ததே என கைபிசைந்து நிற்கின்றனர். இனி எவர் ஒருவரும் கலையுலகில் சிறு கலகம் விளைவிக்கவும் முடியாது என, கட்டுப்பாடு காப்பார்களேயானால், அது, அவர்கள் நடத்திய விழா தந்த மகிழ்ச்சியை விட பெருமகிழ்ச்சியாக அமையும். இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இவர்  என்னதான்  சொல்ல  வருகிறார்? வஞ்ச புகழ்ச்சி அணி கேள்வி பட்டிருக்கிறேன். இது எந்த அணியை சாரும் என யாரும் கூறினால் அவர்களுக்கு என் நன்றி.
share on:facebook

8 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

எனக்கு லைட்டா தல சுத்துது.

பட்டாபட்டி.. said...

இந்த வயசிலும்.. அப்பா...
லொள்லு தாங்கல சார்..

'தும்பைப்பூ - என்னா சொல்ல வராரு?'.. அஜீத் முடி நரைத்ததை...

கொடுமையடா சாமி...

Chitra said...

புரிந்த மாதிரி இருந்துச்சு...... ஆனால் புரியலை. ........ கிர்ர்ர்ர்ர்ர் .......

ஸ்ரீராம். said...

இதெல்லாம் ராஜா தந்திரம்ங்க .நமக்கு புரியாது..

அகல்விளக்கு said...

//சைவகொத்துப்பரோட்டா said...

எனக்கு லைட்டா தல சுத்துது.
//

அதேதான் எனக்கும் தல...

அமுதா கிருஷ்ணா said...

வயசாகி போச்சுப்பா....

ஆதி மனிதன் said...

யாராவது ஒரு நல்ல விளக்கம் சொல்லுவீங்கன்னு நினைச்சேன். ஹூ ஹூம்..

சரி வந்து படிச்சு பின்னூட்டமிட்டதுக்கு நன்றி தும்பை மலர்களே.

சாய்ராம் கோபாலன் said...

//யாராவது ஒரு நல்ல விளக்கம் சொல்லுவீங்கன்னு நினைச்சேன். ஹூ ஹூம்.. //

Why expose our ignorance !!

Post a Comment