Thursday, February 18, 2010

"எங்க வாத்தியார்"

"முகத்துல மட்டும் காயம் படாம பாத்துக்குங்க. மத்தபடி உசுரு ஒன்ன மட்டும் விட்டுட்டு என்ன வேணாலும் பண்ணிக்குங்க சார் இவன", இப்படி சொன்னது வேறு யாரும் இல்ல. சாட்சாத் எங்க அப்பாதான். சொன்னது என்னோட பள்ளி வகுப்பாசிரியர் கிட்ட. அதுக்காக எங்க அப்பாவ பத்தி உடன நீங்க தப்பா நினைச்சிடாதீங்க. இன்னிக்கு நான் நல்லா இருக்கிறேனா அதுக்கு அவர்தான் காரணம்.

இப்ப காலம் ரொம்ப மாறிடுச்சு. மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்குமான இடைவெளி ரொம்ப கொறஞ்சிடுச்சு. என் பொண்ணோட டீச்சர் கேள்வி கேட்டுட்டு பசங்க பதில் சொல்லும் முன் டீலா நோ டீலானு கேக்குறாங்களாம். LKG படிக்கிற புள்ளையோட வீட்டு பாட விபரத்தை பெற்றோருக்கு SMS பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. மதிய இடைவேளையில் மாணவர்களின் சாப்பாட்டை பகிர்ந்து கொள்ளும் ஆசிரியர்கள், "உங்க அம்மா இத எப்படி பண்றாங்கன்னு கேட்டுட்டு வரியான்னு" ங்கற அளவிற்கு அவர்களிடையே நெருக்கம் உள்ளது.

அப்பலாம் குறிப்பிட்ட சில வாத்தியார் கிளாசுக்கு வறாருணா சில பசங்களுக்கு ஜன்னியே வந்துடும். ஒவ்வொரு வாத்தியாரும் ஒரு டிபரன்ட் ஸ்டைல் ஆப் பணிஷ்மன்ட் வச்சிருப்பாங்க. கொடுத்து கொடுத்து சிவந்த கரங்கள் மாதிரி அடி வாங்கி வாங்கி எங்கள் கரங்கள் சிவந்து போயிருக்கும்.

எங்களுக்கு வரலாறு எடுத்த ஆசிரியர்  அந்த மாதிரியெல்லாம் அடித்து அவர் கையை புண்ணாக்கி கொள்ள மாட்டார். யாராவது தப்பு பண்ணினால் அவனுக்கு பக்கத்தில் உள்ளவனை அவனுக்கு ஓங்கி ஒரு குட்டு வைக்க சொல்லுவார். அவன் பக்கத்தில் உள்ளவன்  நண்பனாச்சேனு பஸ்ட்டு மொதுவாதான் குட்டுவான். இதை கவனிக்கும்  ஆசிரியர் "ஏய், எண்ணா குட்டுற? இன்னும் பலமா வைன்னு" கத்துவார். அடுத்த தடவை சற்று வேகமாகவே குட்டு வைப்பான் அவன். அதிலும் சமாதனமாகாத ஆசிரியர் இப்போ தவறு செய்த மாணவனை அழைத்து உனக்கு எப்படி குட்டுநானோ அதே மாதிரி அவன குட்டுனு  சொல்வார். இவன் குட்டியதுதான் தாமதம். தவறு செய்யாத மாணவனுக்கு சும்மா B.P. எகிறிடும். இவன் தப்பு செய்யாததற்கு   நாம ஏன் குட்டு வாங்கனும்னு செம கடுப்புல இருப்பான். இப்போ மீண்டும் தவறு செய்த மாணவனுக்கு பலமா குட்ட வைக்க சொல்லுவார். இவன் எல்லா கடுப்பையும் சேர்த்து சும்மா "நங்குன்னு" குட்டுவான் பாருங்க. அப்பா, குட்டு வாங்கியவன் அலறும் அலறரில் பில்டிங்கே சும்மா அதிரும்.

இன்னொரு தமிழ் புலவருக்கு சட்டையின் மேல் பட்டன் போடாவிட்டால் அவன் உடம்புல துணியே போடாத மாதிரி டென்சன் ஆகிடுவாரு. அவருக்கு 9 பெண் பிள்ளைகள்(நம்புங்கள்). அதனால் எல்லோரையும் வாடி போடின்னு தான் பேசுவார். கூடவே எங்கள் ஊரின் அனுமதிக்கப்பட்ட கெட்ட  வார்த்தை "கம் ...ட்டி" ஒன்றையும் சேர்த்துக் கொள்வார். மணிமேகலை பாடம் நடத்திக்கொண்டிருக்கும் போதே "பட்டன போட்றி  கம்...ட்டி" ஒரு சவுண்டு உடுவாரு.

நான் ரொம்ப நாள் வாட்ச் கட்டாததிற்கு ஒரு காரணம் எங்களின் 9 வகுப்பாசிரியர். அவருக்கு கோவம் வந்தால் முதலில் அவர் வாட்சை கழட்டி மேஜை மீது வைத்து விட்டு தான் கச்சேரியே ஆரம்பிப்பார். அவரின் ஸ்டைல் அடித்து ஓய்ந்து விட்டு மீண்டும் ஒரு இடைவெளி விட்டு திரும்பவும் வந்து அடிப்பது (இப்பவும் வாட்ச் கழட்டப்படும்). இவர் வகுப்பாசிரியரா வரகூடாதுன்னு மொதோ வருசமே எல்லோரும் மாரியாத்தாளுக்கும், மேரிக்கும் வேண்டிக்குவாங்க(எங்கள் பள்ளி ஒரு கிருஸ்தவ பள்ளி).

ஆனா இவ்ளோ அடி வாங்கியும் நாங்க திருந்துவோம்றீங்க. ஹூ ஹூம். மீண்டும் அதே சண்டித்தனம். மீண்டும் அடிவாங்குதல். அதல்லாம் ஒரு காலம். அப்படியெல்லாம் கண்டிப்பான ஆசிரியர்கள் இருந்து அவர்களிடத்தில் படித்ததினால் தானோ என்னவோ இப்ப நாங்க எல்லோரும் நல்ல நிலமையில இருக்கோம். இப்பவும் மேலே கூறிய ஒரு சில ஆசிரியர்களை சந்தித்து அவர்களிடம் நான் ஆசி வாங்கும்  பழக்கம் உண்டு.

"அடித்து வளக்காத புள்ளையும் முறுக்கி வளக்காத மீசையும் நல்லா வராது" எங்கேயோ கேட்ட பழமொழி.

நீங்க யாரும் இப்படி அடி வாங்கி இருக்கீங்களா? வாங்கலனாலும் பறவையில்லை. பதிவு புடிச்சிருந்தா வோட்ட போட்டுடுங்க. நன்றி.

படம் உதவி: srimgr.com
share on:facebook

10 comments:

மோகன் குமார் said...

மலரும் நினைவுகள் ...

சைவகொத்துப்பரோட்டா said...

இப்ப "அந்த" மாதிரியெல்லாம் எடுபடாது, கை ரொம்ப சிவந்து இருக்கும் போல :))

சாய்ராம் கோபாலன் said...

ஆதி

கலகிட்டீங்க. வயிறு விட்டு சிரித்தேன். மலரும் நினைவுகள் நிஜமாகவே என் வாத்திகளை எல்லாம் மனதில் வந்து நிறுத்தினீர்கள். பலர் உயிருடன் இல்லை இப்போது. (எனக்கு வயசு ஆகிடுச்சு இல்லே !)

என் பெரிய மகன் (பதினான்கு வயது) அவன் அடிக்கடி சொல்லுவான், "அப்பா நீங்க கண்டிப்பாக இருப்பதால் தான் நாங்கள் அமெரிக்க குழந்தைகள் போலே உருப்படாமல் போவதில்லை என்று" - பத்து நிமிடம் முன்பு இன்று காலை கூட பள்ளிக்கு போகும் முன் அதை சொல்லிவிட்டு போனான்.

நிறைய இதற்கு போடவேண்டும். இப்போதான் வேலை ஆரம்பித்திருக்கின்றேன். அதனால் அப்பாலிக்க போடறேன்.

சாய்

ஆதி மனிதன் said...

//சாய்ராம் கோபாலன் said...ஆதி...கலகிட்டீங்க. வயிறு விட்டு சிரித்தேன்.//

நன்றி சாய்ராம். உங்கள் பாராட்டுக்கள் எனக்கு டானிக் சாப்பிட்டது போல். இன்னும் சரக்கு நிறைய இருக்கு. எடுத்து விட்டா போச்சு.

ஆதி மனிதன் said...

//சைவகொத்துப்பரோட்டா said... இப்ப "அந்த" மாதிரியெல்லாம் எடுபடாது, கை ரொம்ப சிவந்து இருக்கும் போல :))//

நன்றி சைவகொத்துப்பரோட்டா. உண்மையில் கை கருத்துதான் போகும். அடி வாங்கி வாங்கி :(

Chitra said...

உங்கள் வரலாற்று ஆசிரியர் approach படிச்சிட்டு ............... அன்று உங்களுக்கு வலித்தாலும், இன்றும் மனதில் ஆழமாய் நல்ல நினைவுகள்.
பதிவு நல்லா இருக்கு.

ஸ்ரீராம். said...

நீங்கள் சொல்லும் ஆசிரியர்கள் பெயர்கள் சூசை,K. பிலமின்ராஜ், A B துரைராஜ்....??

ஆதி மனிதன் said...

//ஸ்ரீராம். said...
நீங்கள் சொல்லும் ஆசிரியர்கள் பெயர்கள்
//

ஆஹா. கப்புன்னு புடிச்சிட்டீங்களே! நீங்க சொன்ன அனைத்து ஆசிரியர்களின் பெரும் நினைவில் உள்ளது. அதில் ஒருவர் மட்டும் "எங்க வாத்தியாரில்" நான் குறிப்பிட்டுள்ள ஆசிரியர்களில் ஒருவர்.

மங்குனி அமைச்சர் said...

அட நம்ம ஆதிமனிதன் மூஞ்சில என்னா பெரும பாருங்க .இதுக்குதான் நாங்க ஸ்கூல் - க்கெலாம் போகம நேரா காலேஜ் போயிட்டோம் . (ஏய் அங்கயும் அடிகிறாங்கப்பா)

ஆதி மனிதன் said...

வருகைக்கு நன்றி மங்குனி அமைச்சர் அவர்களே. அவைக்கு அடிக்கடி வாருங்கள். வெளியிலிருந்து கையெழுத்து இடாமல்.

Post a Comment