Saturday, December 19, 2009

தெலுங் - ஆனா?



ஆந்திரா மீல்ஸ் மிகவும் காரசாரமானது. அதுபோலவே தனி தெலுங்கானா பிரச்சனையும் இப்போது காரசாரமான விவாதத்துக்குள்ளாகி வருகிறது. தமிழ் நாட்டில் ஆந்திரா மீல்ஸ் என்று சில இடங்களில் போர்டு பார்க்கலாம். ஆனால் நீங்கள் ஹைதராபாத் சென்றால் அங்கும் பல ஹோட்டல்களில் Andhra meals available என்று போர்டு பார்க்கலாம். ஒரே மொழி பேசுபவர்களாக இருந்தாலும் கூட அந்த அளவிற்கு ஆந்திராவின் தெலுங்கானா, கடற்கரை ஆந்திரா மற்றும் ராய சீமா என மூன்று பகுதிகளும் தனித்தன்மை வாய்ந்ததாகவே அறியப்படுகின்றன.

தனி தெலுங்கானா என்பது ஒன்றும் புதிய கோரிக்கை அல்ல. தெலுங்கானா பகுதி முன்பு Hyderabad state உடன் இணைந்த தனி மாநிலமாக இருந்ததும் பிறகு ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்ட பின்பு தான் (சுதந்திரத்திற்கு பிறகு) அது அதனுடன் இன்னைக்கப்பட்டு இப்போதுள்ள ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலமாக உருபெற்றது என்பதெல்லாம் நம்மில் சிலருக்கு தெரியுமா என்பது சந்தேகமே.

எனக்கு தெரிந்த, நான் அறிந்தவற்றை இங்கு பதிகிறேன். தவறுகள் இருப்பின் அதை தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் திருத்தவும்.

அதற்கு முன் சுருக்கமாக சில வரலாற்று நிகழ்வுகளை பார்ப்போம். இந்தியாவில் முதல் மொழிவாரி மாநிலமாக உருவாக்கப்பட்டது ஆந்திர மாநிலம் தான். சுதந்திரத்துக்கு முன்னதாக இருந்த மெட்ராஸ் மாகாணத்திலிருந்து தெலுங்கு பேசும் மக்கள் உடைய மாவட்டங்கள் மற்றும் ராயலசீமா, கடலோர ஆந்திரா பகுதிகளை  ஒன்றிணைத்து தனி மாநிலம் வேண்டும் என்று பொட்டி ஸ்ரீராமுலு என்பவர் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து இறந்தார்.

இதை தொடர்ந்து உடனடியாக மதராஸ் பிரசிடென்சியில் இருந்து தெலுங்கு பேசும் மக்கள் கொண்ட பகுதிகளை பிரித்து புதிய மாநிலமாக ஆந்திரா மாநிலத்தை உருவாக்க அப்போதைய பிரதமர் நேரு உத்தரவிட்டார்.

தனி தெலுங்கான வேண்டும் என்று இப்போது போராடுகிறார்களே, அந்த தெலுங்கானா பகுதி முன்பு Hyderabad state-இல் தான் இருந்து வந்தது. 1956 இல் தான் அது ஆந்திர மாநிலத்துடன் இணைக்கப்பட்டு தற்போதுள்ள ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலமாக உருவெடுத்தது. ஹைதராபாத் எங்களுக்கு தான் என இப்போது எல்லோரும் கேட்கிறார்களே, அந்த நகரம் தான் பழைய Hyderabad State-ன் தலை நகரமாக இருந்து வந்தது.

உண்மையை கூறப்போனால் ஒருங்கிணைந்த ஆந்திராவிற்கு அன்றே பல எதிர்ப்புகள் இருந்தது. குறிப்பாக தெலுங்கானா மக்கள் தாங்கள் ஆந்திராவுடன் இணைந்தால் தங்களுக்கு வாய்ப்புகளும் வருமானமும் குறைந்து போய்விடுமென அஞ்சினார்கள். இதன் காரணமாக, அவர்களை சமாதான படுத்துவதற்க்காக ஒரு சில சலுகைகளை தெலுங்கனா மக்களுக்கு வழங்குவதாக அறிவித்து அதற்காக அப்போது ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்தினார்கள். அனால் அது எதுவுமே பிற்காலத்தில் நிறைவேற்ற படவில்லை என்பதற்கு ஒரே ஒரு உதாரணமே போதும்.

அதாவது ஆந்திராவின் முதல்வர் ஆந்திரா பகுதியை சேர்ந்தவராக இருந்தால் துணை முதல்வர் பதவி தெலுங்கான பகுதியை சேர்ந்தவருக்கு அளிக்க வேண்டும் (vice versa). ஆனால் அதனால்  இன்று வரை துணை முதல்வர் என்ற பதவியே ஆந்திராவில் எற்படுத்தபடவில்லை.

இதெல்லாம் இருக்கட்டும், சாப்பாட்டு மற்றும் கலாச்சாரங்களில் கூட இரு பகுதி மக்கள்ளுக்குள் சில வேறுபாடுகள் உண்டு. தெலுங்கான பகுதியில் நாம் வட இந்திய கலாசாரத்தை அதிகமாக காணலாம். தெலுங்கான பல காலமாக நிஜாம் ஆட்சியில் இருந்ததும் அதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.

அனால் ஒன்று. முன்பு எந்த காரணத்திற்காக தெலுங்கானாவை ஆந்திராவுடன் இனைக்க கூடாது என கூறினார்களோ நிச்சயமாக அதே காரணங்கள் இப்போதுள்ள அரசியல் தலைவர்களுக்கு இருக்க முடியாது. இல்லையென்றால் தனி தெலுங்கானாவை ஆதரித்த எல்லோரும் இப்போது திடீரென்று அந்தர் பல்டி அடிப்பதற்கு நிச்சயமாக அவர்களின் அரசியல் நோக்கங்களே காரணம் என்பது பாமரர்க்கு கூட புரியும்.

தெலுங்கான பிரிந்தாலும் ஆந்திராவுடன் இனைந்திருந்தாலும் அரசியலும் அரசியல்வாதிகளும் திருந்தாத வரை முன்னேற்றம் என்பது அவர்களுக்கு பகல் கனவுதான்.
share on:facebook

5 comments:

ஸ்ரீராம். said...

பிரிவினை பற்றி எதிர் , ஆதரவு கருத்துக்கள் இருந்தாலும் நீங்கள் சொல்வது போல நடக்க வாய்ப்பில்லை...எல்லாமே பழகிய ஒன்றுதான்....

கிருபாநந்தினி said...

நல்லா நிர்மா வாஷிங் பவுடர் போட்டு அலசியிருக்கீங்க! தலைப்பு தெலுங்-ஆனா? அர்த்தம் வரலை. பட், ஐ லைக் இட்!

ஆதி மனிதன் said...

வருகைக்கு நன்றி.

//தெலுங்-ஆனா? அர்த்தம் வரலை. பட், ஐ லைக் இட்!தெலுங்-ஆனா? அர்த்தம் வரலை. பட், ஐ லைக் இட்!//

ஆந்திராவில் அனைவரும் தெலுங்கு பேசும் மக்கள் தான். ஆனால் அவர்களுக்குள் இப்போது இந்த தெலுங்கானா பிரச்சினை தலை விரித்து ஆடுகிறது. அதை தான் நான் அவர்கள் அனைவரும் தெலுங்கு-ஆனால் அவர்களே தெலுங்கானா (தெலுங்-ஆனா) என்ற தனி மாநிலம் வேண்டும் என்று ஒரு போராட்டம் நடத்துகிறார்கள் என்பதை குறிக்கும் விதமாக தலைப்பை வைத்தேன்.

சரியா ரீச் ஆகலைன்னு நினைக்கிறேன். ரொம்ப சொதப்பிட்டேனோ?

Madhavan Srinivasagopalan said...

//"ஸ்ரீராமுலு என்பவர் சாகும் வரை இருந்து இறந்தார்."//

Real example for 'சாகும் வரை உண்ணாவிரதம்' by ஸ்ரீராமுலு.

//தெலுங்-ஆனா?// I understood without ur explanation (on comment section). It reached atleast me..

Good article.

ஆதி மனிதன் said...

நன்றி Maddy.

Post a Comment