Saturday, December 12, 2009

மும்பை திரையுலகமே திரண்டு வந்து...



இன்று மாலை 4 மணிக்கு….காணத் தவறாதீர்கள். மும்பை திரையுலகமே திரண்டு வந்து...கிரிகெட் நாயகன் சச்சின் டெண்டுல்கர் அவர்களுக்கு நடத்தும் பாராட்டு விழா... இணைந்து வழங்குவோர்...

இப்படியெலாம் நான் சொல்வேன் என்று நீங்கள் நினைத்தால் சந்தேகமே இல்லை. நீங்கள் நிச்சயம் பச்சை தமிழன் தான்.

ஆம் இந்தி திரையுலக நட்சத்திரங்கள் சார்பில் சில நாட்களுக்கு முன் சச்சினுக்கு மும்பையில் பாராட்டு விழா நடந்தது. அவர் விளையாட வந்து 20 வருடங்கள் ஆனதை கொண்டாடும் வகையில் இந்த பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்தது இந்திய தொழில் ஜாம்பாவான் முகேஷ் அம்பானி தம்பதியினர். அதுவும் அவர்கள் வீட்டிலேயே.

ஆனால் நீங்கள் நினைப்பது போல் ஞாயிறு மாலை 4 மணிக்கு ….காணத் தவறாதீர்கள். தமிழ் திரையுலகமே திரண்டு வந்து ….இப்படி ஓயாமல் வரும் அறிவிப்புகளும் அதை தொடர்ந்து சின்னத் திரையில் நாம் பார்த்து பார்த்து சலித்து போன ஆட்டம் பாட்டங்களுக்கு இடையே நடந்த பாராட்டு விழா அல்ல அது.

எந்த ஒரு பந்தாவோ பகட்டோ இல்லாமல் மிகவும் எளிமையாக இருந்தது அந்த விழா.

இத்தனைக்கும் மும்பை திரைப்பட உலகின் முன்னணி நட்சத்திரங்களும், கிரிகெட் உலகின் முன்னாள் இந்நாள் முண்ணனி வீரர்களும் பங்குகொண்டு சிறப்பித்து இருந்தார்கள் .

நடிக்க வந்து 25 வருடங்கள் … நடிக்க ஆரம்பித்து 10 வருடங்கள் என எல்லாத்துக்கும் விருது கொடுக்கும், பாராட்டு விழா நடத்தும் காலமிது.

அனால் சச்சினுக்கு நடந்த இந்த பாராட்டு விழா நிச்சயம் வித்தியாசமானது. விழாவில் கலந்து கொண்ட அனைவரும் சச்சினின் ஆட்டத்திறைமை பற்றியும் அவரின் சாதனைகள் பற்றியும் அளவோடு பாராட்டியதை நாம் மட்டுமல்ல சச்சினும் அதை ரசிக்ககூடிய அளவுதான் இருந்ததே தவிர அவரை நெளிய வைக்கவில்லை.

திரையுலக நட்சத்திரங்கள் கூடி இருந்தாலும் அங்கு குத்து பாட்டோ ஆட்டமோ இல்லை. மிகவும் ப்ரோபஷனலாக விழா நடை பெற்றது . நிகழ்ச்சியை ஒளிபரப்பிய CNN-IBN தொலைக்காட்சியும் நிகழ்ச்சி ஒளிபரப்புக்கு இடையிடையே நிகழ்ச்சியை வழங்குவோர், இணைந்து வழங்குவோர், துணிந்து வழங்குவோர் என்று மூன்று நான்கு மணி நேரம் இழுத்து வெறுப்பு ஏற்றாமல் தொடர்ந்து ரசிக்கும்படி செய்தார்கள்.

அதேபோல் இந்தியோ ஆங்கிலமோ அதை கொலை செய்வதற்கென்றே உள்ள தொகுப்பாளரோ/தொகுப்பாளினியோ இல்லாமல் அவரவர் மைக் பிடித்து தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்தார்கள்.

சச்சின் செஞ்சுரி அடிப்பதற்கு காரணம் பந்தா அல்லது அவரின் மட்டையா என்று பட்டி மன்றமும் அவர்கள் நடத்தவில்லை.

நம்ம ஊரில் பாராட்டு பெரும் நாயகனை விட அவரை பாராட்ட நடக்கும் விழாவின் முன்னிலை, பின்னிலை, தலைமை, சிறப்புரை ஆற்றுபவர்களின் பேச்சிலேயே நமக்கு தூக்கம் வந்து விடும். ஆனால், அன்றைய விழாவை நடத்தியது முகேஷ் அம்பானி என்றாலும் கூட  அவரை புகழ்ந்து ஒருவர் கூட ஒரு வார்த்தை பேசவில்லை. எல்லோரும் சச்சினை பற்றி மட்டுமே பேசினார்கள்.

முகேஷ் அம்பானி பேசும்போது, "இது உங்கள் பிறந்தநாள் இல்லை ஆகவே நான் நீங்கள் நூறு வருடம் இருநூறு வருடம் வாழவேண்டும் என்று நான் தற்போது வாழ்த்த வரவில்லை. நீங்கள் 100 செஞ்சூரி 200 செஞ்சூரி எடுத்து எங்கள் எல்லோரையும் மகிழ்விக்க வேண்டும்" என வாழ்த்தினார்.

ஏற்புரை ஆற்றிய சச்சின் கூட மிகவும் சுருக்கமாக அதே நேரத்தில் அடக்கமாக தந்து நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

சச்சின் பேசும்போது தனது தந்தை அவரிடம் கூறிய அறிவுரை ஒன்றை எடுத்துக்கூறினார். "நீ சிறந்த வீரனாக இருந்தால் உனக்கு எல்லா புகழும் கிடைக்கும். அனால் அது நீ சிறப்பாக விளையாண்டு கொண்டிருக்கும் வரை மட்டுமே. ஆனால் நீ ஒரு சிறந்த மனிதனாக வாழ்ந்தால் உனது புகழ் எப்போதும் இருக்கும்" என்று. கடைசியில் நிச்சயமாக கண்ணை பொத்திக் கொண்டு அவர் அழவில்லை.

என்னது? ஹலோ... ஒரு நிமிஷம்... சன் டிவியில் FEFSI திரைப்பட விழா போடா போறாங்களாம். நா அப்புறமா உங்கள பார்க்கிறேன்.
share on:facebook

7 comments:

ஸ்ரீராம். said...

வித்யாசமான நிகழ்ச்சியை Miss செய்து விட்டேன் போல....அந்தக் குறை தெரியாமல் நிகழ்ச்சியை Cover செய்து விட்டீர்கள்...

ஆதி மனிதன் said...

நன்றி ஸ்ரீராம்.

ஸ்ரீராம். said...

நான்தான் ஆதி, வந்து வோட் போட்டுட்டு போனேன்...நேத்து பார்த்த ஞாபகம் இல்லை...

ஆதி மனிதன் said...

மிக்க நன்றி ஸ்ரீராம். நேற்றுதான் முதல் முறையாக தமிழிஷில் இணைத்தேன். வழக்கம்போல் உங்களுடையது முதல் வோட். ஊக்கத்திற்கு நன்றி.

P.S. இந்த Reactions இன்று ஒரு பட்டை இருக்கிறதே உங்கள் இடுகைகளில். அது தமிழிஷ் இணைப்பால் வருவதா அல்லது அது தனி ட்ராக்கா?

கிரி said...

நல்லா நறுக்குன்னு கூறி இருக்கீங்க :-)

ஆதி மனிதன் said...

வருகை மற்றும் பாராட்டுக்கு நன்றி கிரி அவர்களே. மீண்டும் வருக.

கலையரசன் said...

லேட்டா வந்துட்டனோ?????

Post a Comment