Tuesday, October 16, 2012

இவர் எல்லாம் ஒரு பதிவரா?


ரொம்ப நாளா இவர் கிட்ட நறுக்குன்னு நாலு கேள்வி கேட்கனும்னு காத்துக்கிட்டு இருந்தேன். இப்போ 'பவர் ஸ்டார்' வேற கோர்ட்டு கேசுன்னு ஆள் சிக்க மாட்டேன்குறாரா. அதான் இவர் மாட்டிக்கிட்டார்.

ஆதி. ம: நீங்க பிரபல பதிவரா? பிரபலமாகிக் கொண்டிருக்கும் பதிவரா?

மொக்க பதிவர்: ரெண்டுமே இல்லீங்க. நான் ஒரு பதிவர். நாலு பேராவது என் பதிவுகளை படிகிறார்கள். அது மட்டும் நிச்சயம்.

ஆதி. ம: பதிவு எழுத ஆரம்பிச்சு எத்தன வருசமாச்சு? எத்தன பதிவுகள் இது வரைக்கும் எழுதி இருக்கீங்க?

மொ. ப: மூணு வருஷம் முடிஞ்சிடுச்சு. இது வரைக்கும் இருநூத்தி ஐம்பதுக்கும் மேல்.பதிவுகள் போட்டாச்சு.

ஆதி. ம: நீங்கள் எழுதியதில் உங்களுக்கு மிகவும் பிடித்த பதிவு எது?

மொ. ப: வாகன விபத்துக்கள் பற்றிய இந்த பதிவும், இதய நலன் பற்றிய இந்த பதிவும் எனக்கு மிகவும் பிடித்ததாகும். வாகன விபத்து பற்றிய பதிவு நான் பதிவெழுத வந்த காலத்தில் எழுதியது. இருந்தும் அதற்க்கு நல்ல வரவேற்பும் பாராட்டுதல்களும் கிடைத்தது எனக்கு நல்ல ஊக்கத்தை தந்தது.

அதே போல் இதய நலன் பற்றிய பதிவும் நானே ரசித்து ரசித்து படித்திருக்கிறேன். அது தவிர ஒரு பிரபல பதிவர் இப்பதிவை பற்றி வலைச்சரத்திலும் குறிப்பிட்டுள்ளார்.

ஆதி. ம: நீங்க ஹிட்டுக்காக பதிவு எழுதுறீங்களா? இல்ல உங்களுக்கு பிடிச்சத எழுதுறீங்களா?

மொ. ப: இரண்டுமே. எல்லா பதிவர்களுக்கும் உள்ள பிரச்சனைதான் எனக்கும். நல்ல பதிவை போட்டாலும் அதன் தலைப்பு வசீகரமாக இல்லாவிட்டால் சீந்துவாரில்லை(பிரபல பதிவர்களின் பதிவுகள் இதற்க்கு விதிவிலக்கு). அதனால் நல்லதையும் எனக்கு பிடித்ததையும் எழுதினாலும் தலைப்புக்காக நான் அதிக நேரம் செலவு செய்ய வேண்டியதாகிறது.

ஆதி. ம: அமா, நீங்க வேற யாருடைய பதிவுகளுக்கும் பின்னூட்டம் வழக்கமா போடறதில்லையாமே? நீங்க அப்படி என்ன பெரிய பதிவரா?

மொ. ப: அட, நீங்க வேறங்க. நான் எனக்கு வர பின்னூட்டத்திற்கே பதில் பின்னூட்டம் சில சமயங்களில் என்னால் போட முடிவதில்லை. இப்படி சொல்வதால் நீங்க தப்பா நினைக்க கூடாது. என்னுடைய அலுவல் பொறுப்பு, வீட்டு வேலைகள் காரணமாக எனக்கு பதிவுகள் எழுதவே நேரம் கிடைப்பதில்லை. காலை 9 முதல் மாலை 6.30 வரை அலுவலக பனியில் சில நேரம் எழுந்து போய் தண்ணீர் குடிக்க கூட முடிவதில்லை. இது தவிர போக்குவரத்தில் மட்டும் 4 மணி நேரம் போய் விடுகிறது. இதன் பின் வீட்டுக்கு வந்து குழந்தைகள், வீட்டு வேலைகள் என்று. அப்பப்பா...இப்ப சொல்லுங்க நான் ரொம்ப பிஸியா இல்லையானு... 

இருந்தும் என்னுடைய பதிவுகளை படித்து தொடர்ந்து பின்னோட்டம் இடும் பல பதிவர்களுக்கு இந்த நேரத்தில் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆதி. ம: உங்களுடைய பதிவுகளில் அதிகம் அமெரிக்காவை பற்றி தான் இருப்பதாகவும், அதிலும் சில, இந்தியர்களையும், இந்தியாவையும் குறைத்து மதிப்பிடுவதாகும் ஒரு சிலர் கருதுகிறார்கள். இதை பற்றி உங்கள் விளக்கம் என்ன?

மொ. ப: உங்களுக்கு தெரிந்ததைதானே எழுத முடியும். நான் கடந்த 8-10 வருடங்களாக அயல் நாடுகளில் அதிகம் வசித்திருக்கிறேன் அங்கு நான் பார்த்த நல்ல விசயங்களை (பெரும்பாலும்) தான் எழுதி இருக்கிறேன். நல்லது எங்கே யார்கிட்டே இருந்தாலும் அதை பாராட்டுவதிலும் பின் பற்றுவதிலும் ஒன்னும் தப்பு இல்லையே? நம்ம கிட்ட தெரிந்தோ, தெரியாமலோ   ஒட்டிக்கொண்ட தவறான பழக்க வழக்கங்களை ஒத்துக் கொள்வதில் ஒன்று தவறில்லையே?

அதே போல் அமெரிக்காவை பற்றியும் IT ஐ பற்றியும் எழுதும் போது அதற்க்கு நல்ல வரவேற்ப்பு கிடைப்பதும், அமெரிக்கா பற்றி அதிகம் எழுதுவதற்கு காரணம். மற்ற படி, சினிமா தவிர நாட்டு நடப்பு, அரசியல் என்று எழுதிக்கொண்டு தான் இருக்கிறேன்.

ஆதி. ம: நீங்கள் எழுதிய ஒரு பதிவு தவறானது என்றோ அல்லது அதற்க்கு கண்டனங்கள் வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?

மொ. ப: அப்படி ஒன்றும் எனக்கு பெரிதாக ஏற்பட்டதில்லை. ஒரு முறை சரியாக 'ஹோம் வொர்க்' செய்யாமல் அமெரிக்க வீட்டுக் கடன் பற்றி ஒரு பதிவு போட்டு விட்டேன். சக பதிவர் ஆதாரங்களுடன் அதை தவறென்று சுட்டிக் காட்டிய பிறகு அதை உடனே நீக்கி விட்டேன். தமிழ் மேல் எனக்கு அதிகம் ஆர்வம் இருந்தாலும், தமிழில் அவ்வளவு சுத்தம் கிடையாது. சில நேரங்களில் அம்மாதிரி தவறுகளை சிலர் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள். அவ்வளவு தான்.

ஆதி. ம: இந்த தமிழ்மணம் ரேன்க், வோட்டு, நட்சத்திர பதிவர் இது பற்றியெல்லாம்...

மொ. ப: நீங்க வேறங்க. ரேசில் கலந்து கொள்பவர்களுக்கு தான் முதல், இரண்டாவது இடத்தை பற்றி எல்லாம் கவலை வேண்டும். நாமலாம் ஒதுங்கி நின்னு வேடிக்கை பாக்குறவங்க. யார்ட்ட போய் என்ன கேள்வி கேக்குறீங்க. அப்புறம் இந்த தமிழ்மண வோட்டு. யாரும் எனக்கு வழக்கமா போடறதும் இல்ல. நானும் கேட்டுக்கிட்டது இல்ல. இது மூலமா வேணா அந்த கோரிக்கையை வைக்கிறேன். பதிவு நல்லா இருந்தா முடிஞ்சா வோட்டு போடுங்க.

ஆதி. ம: சாரி சார். நீங்களே 'ரொம்ப பிசியான' ஆளு. அதனால கடைசியா ஒரு கேள்வி. நீங்க ஏன் இன்னும் உங்க அடையாளத்தை (முகத்தை) காண்பிக்க மாட்டேன்குறீங்க?

மொ. ப: ஓபனா சொல்லப் போனால், வெட்கம் தான் சார். ஏதோ ஒரு காரணத்துக்காக முதலில் அடையாளத்தை காண்பிக்கவில்லை. அதன் பிறகு தற்போது அதே பழகி போனதால் புதுசா முகத்த காண்பிப்பதற்கு என்னவோ போல இருக்கு. இன்னும் சொல்லப்போனால் பத்திரிக்கைகளில் கூட ஒவ்வொரு கட்டுரையோ, செய்திகளோ வந்தால் அதை யார் எழுதினார் என்று போட்டோ போட்டா போடுகிறார்கள். நமக்கு தேவை விஷயம். அவ்வளவுதான் அப்படி எடுத்துக் கொளுங்களேன்.

ஆதி. ம: ரொம்ப நன்றி சார். கடைசியா பதிவுலகத்துக்கு ஏதாவது சொல்ல விரும்புறீங்களா?

மொ. ப: ஹி ஹி ஹி ...அந்த அளவுக்கு நான் இன்னும் வளரலீங்க. அதே நேரத்தில் இந்த மூன்று வருடங்களாக என் பதிவுகளை எப்போதும், அவ்வப்போதும், எப்பவோ ஒரு முறையும் படிக்கும், படித்து வரும் பதிவர்களுக்கும் வசககர்களுக்கும் ஒரே வேண்டுகோள்.

ஆதிமனிதனை பற்றி தங்களின் கருத்துக்களையும் விமர்சனங்களையும் மிகவும் வரவேற்கிறேன். நிச்சயம் அது எனக்கு ஒரு ஊக்கத்தையும் குறைகள் இருந்தால் திருத்திக் கொள்ளவும் ஒரு வாய்ப்பாக அமையும்.

இப்படிக்கு, இதுவரை ஆதிமனிதனின் மனசாட்சியா பேசிக் கொண்டிருந்த மொக்க பதிவர். நன்றி நன்றி நன்றி....


share on:facebook

7 comments:

sury siva said...



அன்புள்ள
ஆதி மனிதன் அவர்களே !!
அந்த ஆதி மனிதன் ஆதாமோ
அதற்கும் முன்னால் இருந்த ஓர்
அறிவுக் கடலோ !!

தான் செய்ததெல்லாம் மற்றவர்கள்
பார்க்கிறார்களா ! கேட்கிறீர்களா ! உணர்கறார்களா !!
என்றா நினைத்திருப்பான் ?

அகத்தியரோ, திருமூலரோ, திருவள்ளுவரோ
ஒரு தொல்காப்பியரோ, ஒரு கம்பரோ, ஒரு திருவள்ளுவரோ
ஒட்டக்கூத்தனோ , ஔவையோ
எழுதியதெல்லாம்
உலகத்தோர் நன்மைக்காகவே .
அல்லது அவர்களுக்கு நன்மை பயக்குமென எழுதினார்கள்.

துளசிதாசர் ராம சரித மானஸ் எனும் ராம காவியத்தை
பதினாயிரம் பாசுரங்கள் எழுதியபின் அவரை யாரோ கேட்டார்களாம்.
இதெல்லாம் யார் படிக்கப்போகிறார்கள் என ?
அவர் சொன்னார்: நான் யாருக்காகவும் எழுதவில்லை.
இராமன் பால் எனக்குள்ள பக்தியின் பிரதிபலிப்பாக, என்னுடைய காணிக்கையாக,
அதற்கும் மேலே, எனது மனம் இன்புடன் அமைதியாக இருப்பதற்காக
எனச்சொன்னாராம்.

இலக்கியங்களையே எடுத்துக்கொள்ளுங்கள்.
இலக்கு என்று ஒன்று இருப்பவைகளை யாரும்
இலட்சியம் செய்கிறார்களா ?

கவலையை விடுங்கள்.
கருமத்தில் கண்ணாக இருங்கள்.

வாழ்த்துக்கள்.

சுப்பு தாத்தா.

Anonymous said...

ஹிஹி நல்ல பதிவு சகோ . :)

Anonymous said...

ஹிஹி நல்ல பதிவு சகோ . :)

Yaathoramani.blogspot.com said...

தங்களையும் பதிவுலகு குறித்தும்
தங்கள் கருத்தை மிக அழகாகவும்
புதுமையாகவும் பதிவு செய்துள்ளது
மனம் கவர்ந்தது
வாழ்த்துக்கள்

CS. Mohan Kumar said...

:))

திண்டுக்கல் தனபாலன் said...

சரிங்க... தெரிந்து கொண்டேன்...

krish said...

அருமை,நன்றி.

Post a Comment