Wednesday, October 10, 2012

தீபாவளிக்கு ரயில், பஸ்ஸில் டிக்கெட் கிடைக்கவில்லையா? இதோ இருக்கு மாற்று வழி.

வருடத்திற்கு இரண்டு தீபாவளி வந்தால் முதலில் சந்தோசப் படுபவர்கள் ஆம்னி பஸ் காரர்களாகத்தான் இருப்பார்கள். பின்ன என்னங்க? சென்னை டூ தஞ்சாவூர் ஒரு டிக்கெட் இன்றைய நிலவரப்படி ரூபாய் 1100  ஐ தாண்டிவிட்டது (பொதுவாக 350-400 ருபாய் தான் இருக்கும்).

ரெயில் கதை நமக்கு தெரிந்ததுதான். மூன்று மாதங்களுக்கு முன்பே விண்டோ ஓபன் ஆன பத்து பதினைந்து நிமிடங்களில் அனைத்து டிக்கெட்களும் தீர்ந்து போய் விட்டன. அதே நிலைமை தான் அரசு விரைவு போக்குவரத்து கழகத்திலும். பல்வேறு காரணங்களால் இந்த இரண்டையும் கோட்டை விட்டு விட்டு தற்போது எப்படி தீபாவளிக்கு போவதென்று தலையை முட்டிக் கொண்டபோது தான் நமக்கு பொறி தட்டியது.

அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் சென்னையிலிருந்து கிளம்பி நம்ம ஊருக்கு டிக்கெட் போடாமல் பக்கத்தில் உள்ள சின்ன சின்ன ஊர்கள் ஒவ்வொன்றாக தேடி பார்த்தேன். அதிலும் சிறிது ஏமாற்றம் தான். அதையும் விடுத்து அதிக போக்குவரத்து அல்லாத நடுத்தர ஊர்களை ஒவ்வொன்றாக போட்டு பார்த்ததில். அய்யா, சென்னை டூ அரியலூர் வரை டிக்கெட் கிடைத்தது. அதுவும் கூட முன் பக்க இருக்கைகள் கிடைத்தன.

அரியலூரிலிருந்து தஞ்சை சுமார் நாற்பது கிலோ மீட்டர்கள்தான். அடுத்த லோக்கல் பஸ் பிடித்தால் ஒரு மணி நேரத்தில் ஊர் போய் விடலாம். நால்வருக்கும் சேர்த்து எண்ணூறு ரூபாய்தான் டிக்கெட் செலவு ஆனது. செமி டீலக்ஸ் பஸ். எப்படியாக இருந்தாலும் ஆம்னி பஸ் நிலைமையும்  அன்று அப்படிதான் இருக்கும். கண்ட கண்ட பஸ்களை கொண்டு வந்து ட்ரிப் அடிப்பார்கள். அது மட்டும் இல்லாமல் ஊர் போகும் வரை எவ்வளவு பேரை ஏற்ற முடியுமோ அவ்வளவு பேரை ஏற்றிக் கொ(ல்)ள்வார்கள். அதற்க்கு இது எவ்வளவோ தேவலை.

என்ன மக்களே. உங்களுக்கும் டிக்கெட் பிரச்னை இருந்தால் இது மாதிரி முயற்சித்து பாருங்களேன். All the best.

share on:facebook

10 comments:

sury siva said...

சும்மா சொல்லக்கூடாது.
சூபர் ஐடியா !!

ஆனா இந்த மாதிரி லோகல் வண்டி எல்லாமே
அம்பது கிலோ மீட்டர் போறதுக்கே
ஆறு மணி நேரம் புடிக்குதே !!

பரவாயில்லை. !!
தூங்கிப்போய்டலாம்.
தீபாவளியை பஸ்ஸிலேயே
கொண்டாடிலாம்.

சுப்பு தாத்தா.

...αηαη∂.... said...

அட தஞ்சாவூருங்களா :) :)

தீபாவளிக்கு முதல் நாள் கோயம்பேடு போனா எப்டியும்பஸ் கிடைச்சுடும் சோ எப்பவுமே ரிட்டன் மட்டும் நான் புக் பண்ணுவேன்...

CS. Mohan Kumar said...

அடேங்கப்ப்பா ஐடியா சூப்பர். அதை விட தலைப்பு செம சூப்பர்.

ஆதி மனிதன் said...

@sury Siva said...

//ஆனா இந்த மாதிரி லோகல் வண்டி எல்லாமே
அம்பது கிலோ மீட்டர் போறதுக்கே
ஆறு மணி நேரம் புடிக்குதே !!//

நான் சொல்லுவது லோக்கல் வண்டி இல்லீங்கோ. சென்னை டூ புள்ளம்பாடி SETC செமி டீலக்ஸ். அரசு விரைவு போக்குவரத்து கழக சொகுசு பஸ். பிரயாண நேரம் வெறும் 7 hrs தான்.

ஆதி மனிதன் said...

@...αηαη∂.... said...

//அட தஞ்சாவூருங்களா :) :)//

அம்மாங்க. ஆனால் புள்ள குட்டிங்களோடு போனால் அப்படி போக முடியாதுங்களே?


ஆதி மனிதன் said...

நன்றி மோகன்.

அமுதா கிருஷ்ணா said...

அருமையான ஐடியா.ட்ரையினில் கரூர் போகணும்னா குளித்தலை கோட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம்.நாம் போக நினைக்கும் பெரிய ஊரின் முந்தைய ஸ்டேஷனோ அல்லது அடுத்த ஸ்டேஷனோ இருக்கும் சில டிக்கெட்களை வாங்கலாம்.ஆனால் இது எல்லா ஊர்களுக்கும் சரி படாது.

ப.கந்தசாமி said...

நல்ல வழியாத்தெரியுதே.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல ஐடியா...

குழந்தைகளுக்கு கொஞ்சம் சிரமம் இருக்கும்... விவரத்தை சொல்லி சமாளிக்க வேண்டும்... (அது தான் பெரிய விசயமே...!)

சாய்ராம் கோபாலன் said...

ஐடியா சூப்பர்....

Post a Comment