எத்தனையோ மாநாடுகள் பார்த்திருக்கிறோம். அரசியல் கட்சி மாநாடுகள், ரசிகர் மன்ற மாநாடுகள், ஊழியர் சங்க மாநாடுகள். அங்கெல்லாம் என்ன நடக்கும்னு எல்லோருக்கும் தெரியும்.
ரசிகர் மன்றங்களுக்கு தன் தலைவனை புகழ் பாட மட்டுமே தீர்மானங்கள் இயற்றப்படிருக்கும். அரசியல் கட்சிகளுக்கு சொல்லவே வேண்டாம். எது எது அவர்களால் செய்ய முடியாதோ அதை எல்லாம் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் செய்து கிழிப்போம் என தீர்மானங்களாக தீட்டி இருப்பார்கள். ஊழியர் சங்கங்களோ, தங்களுக்கு தேவை என்றால் ஆளும் கட்சியை புகழ்ந்தும், தேவை இல்லாதபோது எதிர் கட்சிகளோடு சேர்ந்து கொண்டு கண்டன தீர்மானங்களும் போட்டுத் தாக்கும்.
ஆனால், பதிவர் மாநாடு அப்படி நடந்ததாக எனக்கு தெரியவில்லை. நமக்கு மற்றவர்களை போல் எந்த நிர்பந்தமும் இல்லை. இருந்தும் நம் மாநாட்டில் அப்படி ஏதும் தீர்மானங்கள் நிறைவேற்ற பட்டனவா என எனக்கு தெரியவில்லை. அப்படி ஏதும் இருந்தால், மாநாட்டின் தீர்மானங்களை பற்றி தெரிந்து கொள்ள உங்களைப் போலவே நானும் ஆவலாக உள்ளேன்.
அது மட்டும் அல்லாமல் குறிப்பாக மாநாட்டில் கலந்து கொள்ள முடியாதவர்களின் முதல் கேள்வியாக தற்போது இருப்பது, அடுத்த மாநாடு எப்போது என்பது தான் (ஆமா முதல் மாநாட்டுக்கே வர வழிய காணோம். அதுக்குள்ளே அடுத்த மாநாடு பத்தி கேள்வி கேக்குறாரு பாருன்னு யாரோ சொல்றது கேக்குது. என்ன பண்றது ஒரு நப்பாசைதான்).
இந்த கேள்விகளையெல்லாம் கேட்க எனக்கு தகுதி இருக்கானு தெரியல. ஏனென்றால் நான் மாநாட்டில் காலத்து கொள்ள (முடிய)வில்லை. இருப்பினும் முடிந்த வரை நிகழ்சிகளை நேரலையின் மூலம் கண்டுகளித்தேன். மதியத்திற்கும் மேல் என்னால் பார்க்க இயலவில்லை. ஒரு வேலை அந்த நேரத்தில் தீர்மானங்கள் ஏதும் படிக்கப்பட்டதா என தெரியவில்லை. அப்படியே இருந்திருந்தாலும் அதை என்னைப்போல பதிவர்களுக்காக ஒரு பதிவாக சம்மந்தப் பட்டவர்கள் போட்டால் நன்றா இருக்கும்.
பதிவர் மாநாட்டை சிறப்பாக நடத்திக் கொடுத்த அனைத்து பதிவர் நண்பர்களுக்கும் பதிவுலகம் சார்பாக என் நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். மேற்கண்ட கேள்விகள் என் ஆர்வ மிகுதியால் கேட்கப்பட்டவையே தவிர யாரையும் கேள்வி கேட்பதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். . அதே போல் எல்லோரும் மாநாடு முடிந்து மீண்டும் அவரவர் பணிகளில் மூழ்கி இருப்பீர்கள். சிலருக்கு அயர்ச்சியாக கூட இன்னும் இருக்கலாம். ஆகவே ஆற அமர இதை பற்றிய விபரங்களை தெரிவித்தால் போதுமானது. மீண்டும் மாநாட்டு நிர்வாகிகளுக்கு என் நன்றிகள்.
பதிவர் மாநாடு தொடர்புடைய மற்ற பதிவுகள்...
பதிவர் மாநாட்டு நிகழ்சிகள். சுடச் சுட Recorded videos...
பதிவுலக மாநாடு 1.00 PM update. பதிவுலகில் அதிகம் சம்பாதித்தவர் யார்...
பதிவர் மாநாடு12.27 PM update - சில சுவாரசியங்கள்...சில ஏமாற்றங்கள்...
share on:facebook