Thursday, March 22, 2012

இலங்கை தமிழர் பிரச்னை: ஆங்கில நாளிதழ்களின் குள்ள நரித்தனம்.


'Genocide' என்ற வார்த்தைக்கு ஆங்கிலத்தில் அர்த்தம் தேடினால் ஆப்பரிக்க நாடுகளுக்கு அடுத்தபடியாக இலங்கை அரசு தான் பொருத்தமான உதாரணமாக இருக்கும். ஆனால், இலங்கை தமிழர்கள் ஆப்ரிக்க நாட்டவர்களை போல் காட்டு வாசிகள் இல்லை. படிப்பு, வியாபாரம், அரசியல் என்று பல துறைகளிலும் இலங்கையில் கோலோச்சினார்கள். ஆனால், அதுவே அவர்களுக்கு ஆபத்தாக கடைசியில் முடிந்தது.

ஆரம்பம் முதல் இலங்கை தமிழர் பிரச்னை இந்த அளவிற்கு வளர காரணம்  தமிழக அரசியல் வாதிகளும் இந்திய அரசாங்கமும் தான் என்பது விபரம்  அறிந்தவர்களுக்கு தெரியும். தமிழக அரசியல் வாதிகள் தங்கள் அரசியல் லாபத்திற்காக பிரச்சனையை ஊதி பெருக்கினார்கள் என்றால் இந்திய அரசு முற்றிலும் சுயநல போக்குடன் இந்தியாவின் பூலோக நலனுக்காக ஒரு இனத்திற்கு எதிராக ஆரம்பம் முதல் செயல் பட்டது.

இப்போது இந்த அரசியல் தலைவர்களை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு இந்தியாவில் உள்ள ஆங்கில நாளிதழ்கள் நடந்து கொள்கின்றன. அதற்க்கு காரணம் சுயநலமும், வியாபார நோக்கமுமும் தான்.

ஒரு காலத்தில் 'தி ஹிந்து' நாளிதழும், அதன் ஆசிரியர் திரு. ராமும் எல்லோராலும் மதிக்கப் பட்டவர்கள். குறிப்பாக திரு. ராம் அவர்கள் தன்னை ஒரு கம்யூனிஸ்ட்டாகவும், பொது நல வாதியாகவும் அடிக்கடி காட்டிக் கொள்வார். ஆனால், ஊர் உலகத்தை பற்றி எல்லாம் எழுதும் அவர் மீதே நில மோசடி வழக்கு உள்ளது. இலங்கையில் நடந்த போரை பற்றி எல்லோரும் எழுதிக் கொண்டிருந்த நேரத்தில் இவர் பக்கம் பக்கமாக தனது நாளிதழில், புகைப் படத்துடன் இலங்கை அரசு எவ்வாறு தமிழ் அகதிகளை சிறப்பாக 'கேம்ப்' புகளில் கவனித்துக் கொள்கிறது என்று ஊருக்கு ஒப்பாரி வைத்தார். முள் வேலிக்குள், டெண்டிர்க்குள் அப்பாவி மக்களை அடைத்து வைத்திருப்பதற்கு ஒரு பாராட்டுப் பத்திரம்.


இலங்கை அரசின் விருந்தினராகவே கவனிக்கப் பட்ட திரு. ராமிற்கு இலங்கை அரசை பற்றி புகழ்ந்து எழுதுவதும், அதன் அதிபர் ராஜபக்சேவை நேர்காணல் செய்வதுமையே தனது தலையாய கடமையாக கொண்டிருந்தார். இவை எல்லாவற்றுக்கும் காரணம், அவருக்கு இலங்கை அரசு கொடுத்த விருதும், அவரின் பத்திரிக்கையை இலங்கையில் அச்சடித்து விநியோகம் செய்ய அனுமதி அளித்ததும் தான் என்பது பரவலான குற்றச்சாட்டு.

இது எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு கட்டத்தில் இந்தியாவின் ஒரு அங்கமான அருணாச்சல பிரதேசத்தில் சீனாவின் போக்குக்கு அதரவாக நடக்க ஆரம்பித்தார். கேரள மீனவர் ஒருவர் சுடப்பட்டு இறந்தார் என்பதற்காக இத்தாலிய கப்பலை கையகப் படுத்தி கப்பல் ஊழியர்களை கைது செய்து இரு நாட்டு உறவு பாழாய் போகும் அளவிற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்க்கு காரணம், இந்த ஆங்கில பத்திரிக்கைகளின் ஊளை தான். ஆனால், தினம் தினம் இலங்கை ராணுவம் இந்திய மீனவர்களை தாக்கிக் கொண்டு இருக்கிறது. அது பற்றி எந்த ஒரு ஆங்கில பத்திரிக்கையும் மருந்துக்கு கூட செய்தி வெளியிடுவதில்லை.


தி.ஹிந்துவிற்கு அடுத்த படியாக, தற்போது இலங்கை தமிழர் நலனுக்கு எதிராக நரித்தனம் செய்ய ஆரம்பித்திருக்கும் அடுத்த பத்திரிகை ...அது பற்றி அடுத்த பதிவில்...

இலங்கை பிரச்னை பற்றிய வேறு சில பதிவுகள்...

ஒரு ராஜீவ் காந்தி, இரு ராஜபக்க்ஷே = ?

போர் குற்றம்: தூக்கு தண்டனையை முன்னிறுத்தும் அமெரிக்கா.


share on:facebook

4 comments:

Sankar Gurusamy said...

//தினம் தினம் இலங்கை ராணுவம் இந்திய மீனவர்களை தாக்கிக் கொண்டு இருக்கிறது. அது பற்றி எந்த ஒரு ஆங்கில பத்திரிக்கையும் மருந்துக்கு கூட செய்தி வெளியிடுவதில்லை.//

நம்மை இந்தியாவில் இருந்து விலக்கி வைத்திருக்கிறார்கள்.. வருமானம் மட்டும் இங்கிருந்து வராமல் இருந்திருந்தால் நம் தமிழகமும் ஒரு மணிப்பூரைபோல் சிக்கிம் போல ஆக்கப்பட்டிருக்கும்.

ஆங்கிலப் பத்திரிக்கைகளைவிட இங்கிருக்கும் தினமலர் செய்வதுதான் கோரக் கூத்து. அதையும் சற்று கவனியுங்கள்.

பகிர்வுக்கு மிக்க நன்றி..

http://anubhudhi.blogspot.in/

Anonymous said...

These Indian Newspaper Editors and some reporters get Economical support from the Sri Lanka Government through the Consular offices in India.( You can see them coming out in four legs after midnight party given by the consulates.) Also they get free vacation in Sri Lanka hotels with transport, Entertainment,rooms and food with their families.

ரைட்டர் நட்சத்திரா said...

New revolution in this article .. I am respect your anger.

Anonymous said...

True Adhimanithan. I used to have high regards for this man (N. Ram). Not any more.

I presume you will mention about Times of India in your next blog.

Post a Comment