Thursday, March 8, 2012

பெண்கள் பற்றி சில வரிகள் - ஆண்கள் பற்றிய கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன...


சமீபத்தில் ஒரு பிரபலமான ஆங்கில (இந்தியாவில் இருந்து வெளியாகும்) நாளிதழில் பெண்களை பற்றி வந்திருந்த கருத்துக்கள். இதை போட்டதற்காக என்னை பெண்ணின விரோதி அப்படியெல்லாம் எழுதிடாதீங்க...அப்படி கோவம் ஏதும் இருந்தா சொல்லுங்க. அந்த பத்திரிக்கை எதுன்னு பின்னூட்டத்தில் போட்டு விடுகிறேன்.

பெண்களை பற்றிய வினோதமான அதே நேரத்தில் நகைசுவையான விஷயங்கள் என்ற தலைப்பில்...இதோ...

# பெண்கள் எப்போதும் தங்கள் கைபையை எடுக்காமல் வெளியே போவதில்லை. அதில் என்ன இருக்கும் என யாருக்கும் தெரியாது (ஏன், சில நேரங்களில் அவர்களுக்கே கூட தெரியாது). இருந்தும் அது இல்லாமல் அவர்களால் வெளியே செல்ல முடியாது. ஏதும் கையில் இல்லாமல் இருப்பது அவர்களால் முடியாது.

# எவ்வளவு பணம் கொடுத்தாலும் அதை ஐந்தே நிமிடத்தில் செலவு செய்ய தெரிந்த பெண்களிடம் எப்போதும் உள்ள குறை. அணிந்துகொள்ள அவர்களிடம் உருபுடியான எந்த துணியும் இல்லை என்பது தான். அதே நேரத்தில் அவர்களுடைய அலமாரிகளில் உள்ள பல செட் உடைகளை ஒரு தடவைக்கு மேல் உடுத்தி இருக்க மாட்டார்கள்.

# பெண்களால் தான் இன்று பெருமளவு டி.வி. சீரியல்கள் கல்லா கட்டுகின்றன. நமக்கெல்லாம் முட்டாள் தனமாக தெரியும் இந்த சீரியல்கள் அவர்களுக்கு மிகவும் பிடிக்கிறது. அதற்க்கு காரணம், நம்மை விட மோசமானவர்கள் இந்த உலகத்தில் உள்ளார்கள் என்ற மன திருப்தியை அவர்களுக்கு தருவது தான்.

# பெண்கள் பேரம் பேசுவதில் கில்லாடிகள் என அனைவருக்கும் தெரியும். அதிலும் ஒரு பொருளை வாங்க வேண்டாம் என அவர்கள் முடிவு செய்து விட்டால், அவர்களால் அப்பொருளுக்கு பேரம் பேசாமல் அவர்களால் இருக்க முடியாது.

# பெண்கள் தாங்கள் அணியும் எந்த உடையையும் மற்ற பெண்கள் அணிந்திருந்தால் அது அவர்களுக்கு பிடிக்காது.

# ஆண்களை விட பெண்கள் வேகமாக விபரம் ஆனவர்களாக ஆகிவிடுவார்கள்.

# பெண்களால் ஒரு நாள் முழுதும் அழகு பார்க்கும் கண்ணாடி முன் செலவு செய்ய முடியும்.

***** மேலும் சில விசயங்களை இங்கு நான் சேர்க்க வில்லை. அப்புறம் என் பெண் வாசகர்கள் (யாரும் இருந்தால்) அவர்களை நான் இழக்க நேரிடும் என்ற பயத்தினால் தான்.

பெண்களுக்கான வேறொரு பதிவு...
கவர்ச்சி மறைத்து அழகை (மட்டும்) காட்டுவது எப்படி? - பெண்களுக்கு மட்டும்.

share on:facebook

4 comments:

கோவை நேரம் said...

ஹி..ஹி..ஹி..உங்க வீட்டுல இன்னிக்கு விசேஷம்தான்

SURYAJEEVA said...

ஹ ஹா... நடத்துங்க

sury siva said...

"பெண்களால் தான் இன்று பெருமளவு டி.வி. சீரியல்கள் கல்லா கட்டுகின்றன. நமக்கெல்லாம் முட்டாள் தனமாக தெரியும்,,"

"இந்த முட்டாள்தனமான இல்லாஜிகல் சீரியல் எல்லாமே பாக்கற உன்னை நான்
முட்டாள் என்று சொல்லாட்டா நான் ஒரு முட்டாள் .."

" ஏங்க... நான் ஒரு முட்டாள் என்கிறதை நீங்க சொல்லித்தான் நான் தெரிஞ்சக்கணுமா என்ன? "

" அட !! நீயெ உணர்ந்துகிட்டயா !! எப்ப ? "

" உங்களைக் கலியாணம் செய்துகிட்ட் அன்னிக்கே எனக்கு புரிஞ்சு போச்சுங்க.. "


சுப்பு தாத்தா.
மீனாட்சி பாட்டி.

இராஜராஜேஸ்வரி said...

சுப்பு தாத்தா.
மீனாட்சி பாட்டி.

அனுபவம் பேசுகிறது..

Post a Comment