Monday, October 17, 2011

பங்கு சந்தை ஊழலும் அமெரிக்க நீதிமன்ற பரபரப்பு தீர்ப்பும்.


உலக பணக்காரர்களில் ஒருவரும் ஹெக்டே பன்ட் நிறுவனருமான  இலங்கை தமிழர் திரு. ராஜரத்னத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் ஒன்று  பதினோரு ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து தீர்ப்பளித்திருக்கிறது.

விஷயம் இது தான். ஹெக்டே பன்ட் நிறுவனர் ராஜரத்தினம் insider trading எனப்படும் பங்கு வர்த்தக முறைகேடுகளில் ஈடுபட்டதற்காக  சமீபத்தில் அமெரிக்க நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டவர்.  இது பற்றிய சில சுவாரசிய தகவல்கள்.       

இதுவரை அமெரிக்க வரலாற்றில் இம்மாதிரி பங்கு வர்த்தக முறைகேடுகளுக்காக வழங்கப்பட்ட அதிகபச்ச தண்டனை இதுதான். இதற்கு முன் இதே போல் ஒருவருக்கு பத்து வருடங்கள்  வழங்கப்பட்டுள்ளது.  ராஜரத்தினத்துக்கு அதிக பச்சமாக இருபத்தி நான்கு வருடங்கள் சிறை தண்டனை வழங்குமாறு அரசுத்தரப்பு வக்கீல் கேட்டுக்கொண்ட போதும், நீதிபதி குறைவாகவே தண்டனை வழங்கி உள்ளார். அதற்க்கான காரணங்கள் இதோ.

திரு. ராஜரத்தினம் அவர்கள் பல்வேறு சமூக உதவிகள் செய்துவந்ததும், செப்டம்பர் 11 நியூயார்க் இரட்டை  கோபுர தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள்,  மற்றும் இயற்க்கை பேரழிவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பல்வேறு காலங்களில் பெரும் அளவில் இவர் உதவிக்கரம் நீட்டியதும் சமூக நன்மைக்காக இவர் தொடர்ந்து சேவை செய்து வந்ததும் தான். அத்தோடு, இவரின் உடல் கோளாறுகள் மற்றும் உடல் நலத்தை கருத்தில் கொண்டு இவருக்கு குறைந்த தண்டனை வழங்கப்பட்டதாக நீதிபதிகள் கூறியுள்ளார்கள்.

அதுமட்டுமில்லாமல், தண்டனை குறைத்ததற்காக சுமார்
10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதமும், முறைகேடுகளில்  ஈட்டிய சுமார் 53.8 டாலர்களையும் அரசுக்கு திருப்பி செலுத்த தீர்ப்பு அளித்துள்ளார்கள். 

குறைந்தபச்ச தண்டனையாக சுமார் ஆறு வருடங்கள் மட்டுமே  தண்டனையாக வழங்க இவருடைய வழக்குரைஞர்கள் கேட்டுக்கொண்ட போதும், அதை மறுத்து விட்ட நீதிபதிகள், நவம்பர் 28 ம் தேதி வரை  அவருடைய 10 மில்லியன் பங்களாவை விட்டு  எங்கும் போககூடாது 
எனவும் பிறகு  அவர் குறிப்பிட்ட ஜெயிலுக்கு சென்று தன்னை  ஒப்படைத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.  
IBM, Google போன்ற மிக பெரிய நிறுவனங்களில் தான் உருவாக்கி வைத்திருந்த தகவல் பெரும் நபர்கள், மற்றும் தன்னுடைய நண்பர்கள், மூலம் சுமார் 57 மில்லியன் டாலர்கள் பங்கு வர்த்தக முறைகேடு மூலம் சம்பாதித்திருக்கிறார். இவருடைய மொத்த சொத்து மதிப்பு சுமார் 1.3  பில்லியன் டாலர்கள்(ஆறாயிரம் கோடி ரூபாய்களுக்கு மேல்).
என்ன இருந்து என்ன பயன். கூடிய விரைவில் சிறையில் அதுவும் பத்து  வருடங்களுக்கு மேல்...ஆசைக்கு அளவில்லை என்றால் இப்படியெல்லாம்  அனுபவிக்க வேண்டியது தான்.   

share on:facebook

3 comments:

Madhavan Srinivasagopalan said...

// ஆசைக்கு அளவில்லை என்றால் இப்படியெல்லாம் அனுபவிக்க வேண்டியது தான். //

Rightly Said..

Anonymous said...

ஒரு குற்றவாளிக்கெதிரான தீர்ப்பில் எதற்காக இலங்கை தமிழருக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றம் என்ற தலைப்பு.

ஆதி மனிதன் said...

Anonymous said...
//ஒரு குற்றவாளிக்கெதிரான தீர்ப்பில் எதற்காக இலங்கை தமிழருக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றம் என்ற தலைப்பு//

பல தடவை யோசித்தும் தலைப்பு அப்படிதான் வந்தது எனக்கு. இருந்தும் தங்களின் கருத்துக்கு மதிப்பளித்து மாற்றிவிட்டேன்.

Post a Comment