"சரியான நாய் பொழப்புடா". மிக மோசமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் இப்படி தான் தங்களை தானே கூறிக்கொள்வார்கள். அனால் இதெல்லாம் அமேரிக்கா போன்ற மேலை நாடுகளுக்கு பொருந்தாது. ஏனெனில், அங்கு வளர்க்கப்படும் வளர்ப்பு பிராணிகள் அவ்வளவு சொகுசு வாழ்க்கை வாழ்கின்றன.
வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு தனி நாய் வீடுகள் கட்டியது போக இப்போது நாய்களுக்கு காப்பீடு எடுப்பது முதல், அதன் உரிமையாளர் இறந்து விட்டால் அதற்கு மீதி காலம் வரை உணவிடவும் பராமரிக்கவும் உயில் எழுதுவது வரை நடந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், மேலை நாடுகளில் உள்ள வாழ்க்கை முறை மற்றும் கலாசாரம். தான் பெற்ற பிள்ளைகளானாலும்/தன்னை பெற்ற பெற்றோர் ஆனாலும் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு அடுத்தவரை அண்டி வாழாத வாழ்க்கை முறையினால் பெரும்பாலும் ஒரு கட்டத்தில் அவர்கள் தனிமையில் விடப்படுகிறார்கள்.
அவ்வாறு தனிமையில் வாழும்போது அவர்களுக்கு உள்ள ஒரே துணை இம்மாதிரி செல்லப் பிராணிகள் தான். அது மட்டுமில்லை. இங்கு உள்ள குழந்தைகளை கூட நாய்களுடன் சர்வ சாதாரணமாக கொஞ்ச விடுவார்கள். நாயின் வாயிலிருந்து வரும் எச்சில் குழந்தைகளின் மீது படுவதை கூட அவர்கள் தடுப்பதில்லை. அதற்கு காரணம், இங்குள்ள எல்லா செல்ல பிராணிகளுக்கும் முறையாக தடுப்பூசிகள் போடப்படுகின்றன. அது மட்டுமில்லாமல் பொதுவாக எல்லா பிராணிகளுக்கும் முறையாக பயிற்சி கொடுக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன. எனது பக்கத்து வீட்டு பாட்டியின் பூனைக்கு இருதய ஆப்பரேஷன் கூட செய்துள்ளார்கள்.
முறையாக பயிற்சி கொடுத்து வளர்க்கப்படுவதால் தேவை இல்லாமல் குறைப்பதும், பார்பவர்களை எல்லாம் கடிப்பது என்பதெல்ல்லாம் இங்கு அதிகமாக காண முடியாது. சில வீடுகளில் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட நாய்களும் வளர்க்கப்படும். அதே போல் பூனைகளும். வளர்ந்த குழந்தைகள் கூட சில சமயங்களில் சொல்வதை கேக்க மாட்டார்கள். அனால் இந்த நாய்களும் பூனைகளும் பள்ளி குழந்தைகளை போல் சொல்வதை எல்லாம் கேட்கும். காருக்குள் அமைதியாக உட்கார்ந்து கொண்டு தலையை மட்டும் வெளியில் நீட்டிக்கொண்டே வேடிக்கை பார்த்துக்கொண்டு போவதாகட்டும், பூனைகள் அமைதியாக வீட்டின் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து கொண்டு போவோர் வருவோரை வேடிக்கை பார்ப்பதாகட்டும் பார்பதற்கு மிகவும் வேடிக்கையாக இருக்கும்(இங்கு லோக்கல் விமானங்களில் மூடிய கூடைகளில் வைத்து தங்கள் செல்ல பிராணிகளை(நாய்களை கூட) தங்கள் கூடவே எடுத்துச்செல்வதையும் நான் பார்த்திருக்கிறேன்).
என்ன தான் அமெரிக்கர்களாக இருந்தாலும், தங்கள் நாய்களை வாக்கிங் அழைத்துச்செல்லும் போது கையிலேயே ஒரு பிளாஸ்டிக் பையையும் எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும். ஆம், நாய் ஆய் போனால் அதை உடனே சாலைகளிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும். அதற்குத்தான் பிளாஸ்டிக் பைகள். இல்லையெனில் அபராதமோ/தண்டனையோ நிச்சயம். நாய் ஆய் அவ்வளவு கெடுதலாம்.
பூனைக்குட்டி சைஸ் முதல் மெகா சைஸ் புல்டாக், டாபர்மன் வரை அத்தனை வகை நாய்களையும் இங்கு பார்க்கலாம். சுருக்கமாக சொல்லப்போனால் பெற்ற பிள்ளைகள் போல நாய்களை இங்கு பார்த்துக்கொள்வார்கள்.

share on:facebook
5 comments:
நாயிற்கு வந்த யோகத்தை பாருங்க
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்...
நாயிற்கும் சரி, பூனைக்கும் சரி...
ஆமாம், கீ போர்டுல தண்ணி ஊத்தினா, கீ போர்டு வீணாப் போயிடும்..
---- சம்பந்தமில்லாமல் பேசுவோர் சங்கம்..
உங்கள் பதிவில் சம்பந்தமில்லாமல் கமெண்டு போட்டதற்கான காரணம் எனது இந்தப்(சுட்டி) பதிவில்
மாதவன். உங்களைப்பத்தி எங்களுக்கு தெரியாதா? இருந்தும் என்னால் பதில் இட முடியவில்லை. வித்தியாசமான thinking. சூப்பர்.
Post a Comment