Wednesday, July 20, 2011

பூபோர்ட்(USA) நகரின் மக்கள் தொகை-1. சென்னை நகர மக்கள் தொகை - 7,21,38,958

அமெரிக்காவின் வையோமிங் மாநிலத்தில் பூபோர்ட் என்னும் நகரத்தில் ஒரே ஒருவர் தான் வசிக்கிறார். அதாவது அந்நகரத்தின் மொத்த மக்கள் தொகையே அந்த ஒருவர் தான். இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 8000 அடி உயரத்தில் அமைந்து உள்ளது.


பூபோர்ட் நகரத்தின் ஒரே வாசியான "டான்" தான் அந்நகரத்தின் மேயரும் கூட. அட ஆமாங்க, அவர் ஒரே வோட்டில் தான் வெற்றியும் பெற்றுள்ளார். மொத்தம் பதிவான வாக்கும் ஒன்று தான். நியூயார்க் சான் பிரான்சிஸ்கோ இடையே உள்ள இன்டர்ஸ்டேட் 80 வழித்தடத்தில் பூபோர்ட் நகரத்தில் "பூபோர்ட் ட்ரேடிங் போஸ்ட்" என ஒரு கடையும் அவர் நடத்துகிறார். பூபோர்ட் நகரத்தில் உள்ள ஒரே கடையும் அதுதான். அந்த ஒரு கடை மூலம் தான் டான் அவ்வழியே கடந்து செல்பவர்களுக்கு பெட்ரோல், மளிகை, லிக்கர், ATM என அனைத்து சேவைகளையும் வழங்குகிறார். அவ்வூரில் உள்ள ஒரே பணி நீக்கும் (Snow removal) எந்திரமும் அவரிடம் தான் உள்ளது.

ஊரில் இருக்கும் ஒரே ரோடும் அவர் வீட்டிலிருந்து அவரின் கடையை தான் சென்றடைகிறது. மேலும் விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும்.

இன்று வந்த செய்தி: சென்னை நகரம் இந்தியாவிலேயே அதிக நெரிசல் மிகுந்த இரண்டாவது நகரம் என்ற பெருமையை பெற்று இருக்கிறது. சமீபத்தில் நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 27 ஆயிரம் பேர் வசிக்கும் நகரம் என்ற பெருமையை பெற்று இருக்கிறது. சென்னையின் மக்கள் தொகை ஏழு கோடியை தாண்டி விட்டதாம். மக்கள் தொகை இப்போது நகரம், கிராமம் என இரண்டிலும் சரி சமமாக பரவி இருக்கிறதாம்.
share on:facebook

4 comments:

Madhavan Srinivasagopalan said...

//இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 8000 அடி உயரத்தில் அமைந்து உள்ளது. //

அதான.. ஒசந்த எடத்துக்கு போறது ஈசி இல்லை..
எல்லாராலையும் முடியாது..

அமுதா கிருஷ்ணா said...

ஆச்சரியமான தகவல்.

ஆதி மனிதன் said...

நன்றி மாதவன். ஆனால் நீங்கள் நினைப்பதுபோல் சரேலென்று 8000 அடி உயரம் இருக்காது. மலைப்பாங்கான இடமாக இருக்கும் என எண்ணுகிறேன்.

நன்றி அமுதா. இன்னும் பல ஆச்சிரியமான தகவல்கள் இருக்கு அவ்வப்போது வந்து பாருங்கள்.

yasaru said...

நண்பரே, தமிழகத்தின் மக்கள் தொகைதான் ஏழு கோடி தாண்டி இருக்கலாம்..சென்னை மக்கள்தொகையே ஏழு கோடினு எங்க படிச்சிங்கனு தெரியல...தம்பி திருத்திகோங்க..நன்றி

Post a Comment