Friday, December 25, 2009

புத்தாண்டு பிறப்பது எப்போது?



இதோ அடுத்தவாரம் இந்நேரம் புது வருடம் பிறந்திருக்கும். இன்னைக்கு உலகம் பூராவும் ஜாதி இன மொழி வேறுபாடு இல்லாம கொண்டாடுற ஒரே பண்டிகைனா அது புத்தாண்டு தினமாகத்தான் இருக்கும்.

எல்லாம் சரிதான். எப்போதுமே பழசு போயி புதுசு வந்தா எல்லாருக்கும் சந்தோசம் தான். ஆனா அந்த சந்தோசம் சில சமயம் சில பேருக்கு சோகமாவும் ஆயிடுது. அதுக்கு ஒரே காரணம் நாம தேவைல்லாம அன்றைக்கு கொடுக்கற முக்கியத்துவமும் ஏதோ அன்றைக்கு மட்டும் தான் நாம சந்தோசமா இருக்க முடியும் என்பது போலவும் சிலர் நினைத்துக்கொள்வதும் தான்.

அன்னைக்கு சந்தோசமா இருந்தா அந்த வருடம் முழுசும் சந்தோசமா இருக்கலாம்னு ஒரு சிலர் அசட்டு தனமான ஒரு விளக்கத்தையும் கொடுப்பார்கள்.

"ஒவ்வொரு நாளும் புதிய நாளே", "இன்று நாம் புதிதாய் பிறந்தோம்" என சொல்லக் கேட்டிருக்கிறோம். அந்த வகையில் புத்தாண்டு தினத்தன்று நாம் ஏற்படுத்திக்கொள்ளும் உற்சாகத்தையும், அன்பு பாராட்டுதலையும் சுறுசுறுப்பையும் நாம் ஏன் எல்லா நாட்களும் ஏற்படுத்திக்கொள்ளக் கூடாது?

இன்னைக்கு பிப்ரவரி-4 அதனால சந்தோசமா இருக்கக் கூடாதுன்னு யாராச்சும் சொன்னாங்களா?

அதோட இந்த நியூ இயர் அன்னைக்கு நம்ம மக்கள் பண்ற ரகளை இருக்கே. அப்பப்பா... என்னமோ அன்னைக்கு மட்டும்தான் சாமி கண்ண தொறந்து பாக்கறது போல எல்லோரும் நடு சாமத்திலே எழுந்து குளிச்சு முடிச்சு கோயிலுக்கு கிளம்பிடுறாங்க.

பெருசுங்க நடுத்தர வயசுகாரங்க இப்படினா இந்த இளவட்டங்க இருக்கே, அதுங்க இந்த பீச் ரோட்ல அடிக்கிற லூட்டி தாங்க முடியாது. அன்னக்கி மட்டும் ரோட்ல போறவங்க எல்லாம் அவங்களுக்கு சொந்தகாரங்க ஆயிடுவாங்க போல. பாக்றவன் போறவன் வரவன் எல்லோர் கையையும் பிடிச்சு பிடிச்சு ஹாப்பி நியூ இயர் சொல்வாங்க.

அதை விட கொடுமை அன்னைக்கு குடித்து விட்டு கண்ணு மண்ணு தெரியாம வண்டி ஒட்டி கடைசியில ஆஸ்பத்திரியில அட்மிட் ஆவுற சில கேசுங்களும் இருக்கு. இது இங்க மட்டும் இல்ல உலகம் பூராவும் அன்னைக்கு நடக்கிற விஷயம் தான்.

ஏன் சில வருடங்களுக்கு முன் சென்னையில் ஒரு ஹோட்டலில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஸ்விம்மிங் பூல் மீது கட்டப்பட்ட மேடை இடிந்து ஒருவர் இறந்து கூட போனார்.

இதை எல்லாம் நான் உங்களை பயமுறுத்துவதற்காக சொல்லவில்லை. மாறாக எல்லா நாளுமே நமக்கு புதிய நாளாக எண்ணி அதை வரவேற்போம். புத்தாண்டு தினத்தை போலவே ஒவ்வொரு நாளும் நாம் சுறுசுறுப்புடனும் புதிய உற்சாகத்துடனும் இருப்போம் என்று தான் கேட்டுக்கொள்கிறேன்.

எல்லோருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இனி வரும் எல்லா நாளும் உங்களுக்கு இனிய நாளாகவும் என் வாழ்த்துக்கள்.
share on:facebook

6 comments:

ஸ்ரீராம். said...

உங்களுக்கும் 'எங்கள்' வாழ்த்துக்கள்...

ஆதி மனிதன் said...

நன்றி ஸ்ரீராம்.

"'எங்கள்'" வாழ்த்துக்கள். 2 in 1 அசத்துறிங்க போங்க.

Paleo God said...

நல்லா சொன்னீங்க ஆதி.. எனக்கென்னமோ ஒவ்வொரு நொடியும் புதுசா கொண்டாடனம்னு தோணுது...::) நல்ல கருத்து.

ஆதி மனிதன் said...

வருகை மற்றும் கருத்துக்கு நன்றி ப. ப.

கிருபாநந்தினி said...

//எல்லோருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.// ஆதியண்ணாச்சி! இவ்ளோ சொன்ன நீங்க இத்தனை நாள் வாழ்த்து சொன்னீங்களா? புத்தாண்டுக்குதானே வாழ்த்து சொன்னீங்க? ஏன், மத்த நாள்ல சொன்னா வேணாங்குதா? :))

ஆதி மனிதன் said...

வருகைக்கு நன்றி(கிருபாநந்தினி)யக்கா. 365 நாளும் வாழ்த்து சொல்றது கஷ்டம்தான். ஆனா எல்லா நாளும் புது (புத்தாண்டா) நாளா நினைச்சு சந்தோசமா இருக்கலாமே!

Post a Comment