தலைப்பை பார்த்து நீங்க வேற ஏதாவது கற்பனை பண்ணிக்கிட்டா அதுக்கு நான் பொறுப்பில்லை.
எனது நண்பரும் தஞ்சை பாம்பே ஸ்வீட் ஸ்டால் உரிமையாளருமான திரு. மணி அவர்கள் வருடந்தோறும் தன் தந்தையின் நினைவாக அவரின் பெயரில் செயல்படும் அறக்கட்டளை சார்பாக 'இலவச கண் சிகிர்ச்சை' முகாமை கடந்த பல வருடங்களாக நடத்தி வருகிறார். அதை பற்றிய விளம்பரம் தான் கீழே உள்ளது.
தஞ்சையை சுற்றியுள்ள கிராமபுறங்களில் வீடு வீடாக சென்று ஏழை எளியவர்களை இலவச கண் பரிசோதனைக்கும், அதன் பிறகு தேவை எனில் மருத்துவர்கள் ஆலோசனை பேரில் கண் அறுவை சிகிர்சையும் செய்து கொள்ள அவரின் அறக்கட்டளை இந்த வார இறுதியில் ஏற்பாடு செய்துள்ளது.
இது பற்றி ஒரு முறை நண்பரிடம் பேசிக்கொண்டிருந்த போது, பொதுவாக கிராமத்தில் நீங்கள் இருதய பரிசோதனை, பீபி, சுகர் எல்லாம் செக் பண்றீங்களா? அப்படின்னு கேட்டா, அட போப்பா, அதெல்லாம் நமக்கு வராது என சர்வ சாதரணமாக சொல்லி விடுவார்கள். அதே, ஐயா, உங்க கண்ணா டெஸ்ட் பண்ணி கொள்கிறீர்களா? இல்லைனா பிறகு பிரச்னை ஆச்சுனா பாக்க கொள்ள சிரமமா போய்டும்னு சொன்னா போதும். உடனே கவலைப்பட்டு ஆமாப்பா கண்ணு கொஞ்ச நாளா பிரச்னை பண்ணுது. அத பாக்கணும்னு உடனே கிளம்பி விடுவார்கள். அந்த அளவிற்கு அவர்கள் கண்களுக்கு முக்கியவுத்துவம் கொடுகிறார்கள். அதுவே எங்கள் முகாமுக்கு பெரிய வரவேற்ப்பும், ஆர்வத்தையும் கொடுப்பதாக கூறினார்.
நமக்கு தெரிந்து நம் வீட்டில் வேலை செய்வோர், நமக்கு தெரிந்த எளியோர் எத்தனையோ பேர் இருப்பார்கள். அவர்களுக்கு எல்லாம் நம்மால் உதவ முடியாவிட்டாலும் இது போன்ற செய்திகளை அவர்களுக்கு தெரிவித்தால் போதும். அதுவே நாம் அவர்களுக்கு செய்யும் உதவி. எங்கள் வீட்டில் வேலை செய்யும் ஒரு அம்மாவிற்கு இந்த தகவலை நாங்கள் சொல்லி விட்டோம்.
நீங்களும் சொல்வீர்கள் தானே? நன்றி.

share on:facebook