Wednesday, September 19, 2012

எனக்கு பிடித்த (வித்தியாசமான) பதிவர்.

இவரின் பதிவுகள் பெரும்பாலும் கிண்டல், கோவம், சமூக அக்கறை, சுய புராணம் நிறைந்ததாக இருக்கும். தவிர சில சமயங்களில் 'கில்மா' பதிவுகளும் அடக்கம். எல்லாம் பாக்கியராஜ் வகை தான். விருப்பமிருந்தால் அனுபவித்து ரசித்து படிக்கலாம். கெட்ட வார்த்தைகள் கொஞ்சம் (சில நேரங்களில் நிறைய) இருக்கும்.

நான் அவ்வப்போது பேசிக்கொண்டு  தொடர்பில் இருக்கும் விரல் விட்டு எண்ணக்கூடிய பதிவர்களில் சாயும் ஒருவர். இவருக்கு என்னை தவிர சில பிரபல பதிவர்களும் நெருங்கிய பழக்கம் என்பது இவரது ஒன்றிரண்டு பதிவுகள் மூலம் அறிந்து கொண்டேன். இவரின் பிளாக்கில் கெட்ட வார்த்தைகள் கொஞ்சம் (சில நேரங்களில் நிறைய) இருக்கும். ஆனால், பதிவுகள் அப்படியில்லை. பல நேரங்களில் சாயின் சமூக அக்கறையும், ஆதங்கமுமே அவரின் கோவத்திற்கு காரணம்.

உள்ளதை (உள்ளத்தை) சொல்கிறேன் !! - மனதில் தோன்றுவதை கிறுக்க என்னுடைய கரும்பலகை.

இது தான் சாய் பிளாக்கின் பெயரும் (காரணப்பெயரும்). அதை அப்படியே பின்பற்றுகிறார். இவர் யாருக்காகவும் எழுதுவதில்லை. ஹிட்டுக்கோ, பின் பற்றுபவர்களுக்கோ அதிகம் முக்கியத்துவமோ, ஆர்வமோ இவர் காட்டுவதில்லை. நினைத்தால் எழுதுவார். நீங்கள் பின்னூட்டம் இட்டால் அவரும் மறக்காமல் பதில் பின்னூட்டமிடுவார். அவ்வளவுதான்.

தன் குடும்பம், வேலை, மகனின் படிப்பு, இந்தியாவை பற்றிய சலிப்பு, எரிச்சல் என பலதரப்பட்டவை இவரது பதிவுகள். கலிபோர்னியாவில் இருந்த போது அவரே ஓரிரு முறை என்னை சந்திக்க விருப்பப்பட்டு அலை பேசியில் கூப்பிட்டு இருந்தார். ஒரு முறை கூட என்னால் அவரை சந்திக்க இயலாமல் போய்விட்டது. பரவயில்லை சாய். அடுத்த முறை ஊருக்கு வரும் போது தெரிவியுங்கள். அவசியம் நாம் சந்திப்போம்.

பல ஆண்டுகள் வெளி நாடுகளில் வாழ்ந்து வந்தாலும் தாய் தமிழகம், இந்தியாவின் மீது பாசமும், கடைசி காலத்தில் தாய் நாட்டுக்கு வந்து செட்டில் ஆக வேண்டும் என்பதே இவரது உறுதியான முடிவு, ஆசை. தங்கள் ஆசை நிறைவேற என்னுடைய வாழ்த்துக்கள் சாய்.

அவ்வப்போது சென்னை வரும் இவரும் பொலம்பித் தள்ளி விடுவார். சில பொலம்பல்கள் இங்கே. இன்னொமொரு பொலம்பல் இங்கே. ஒரு முறை சென்னை வந்திருந்த போது தன் வீட்டின் எதிரே ரோட்டிலேயே எல்லோரும் குப்பையை கொட்டுகிறார்கள் என்று ஒரு நாற்காலியை எடுத்து போட்டுக் கொண்டு, குப்பை போட வருபவர் அனைவரையும் 'குப்பையை  குப்பை தொட்டியில் போடு. ஏன் ரோட்டில் போடுற' என ஒரு நாள் முழுதும் சவுண்டு விட்டு களைத்து போய் விட்டார்.

நம்ம ஊரு அப்படி தான் சாய். என்ன பண்றது. இப்படி எல்லாம் இருப்பது தெரிந்தும், 'இதற்காகத்தானே ஆசை பட்டாய்' என நம் தாய் நாட்டின் மீதுள்ள பாசத்தால் மீண்டும் இங்கு வந்து சேரத்தானே செய்கிறோம்.

தீவிர நாகேஷ் ரசிகரான சாய் ஒவ்வொரு ஆண்டும் மறக்காமல் நாகேஷின் பிறந்த நாள் நினைவு நாளில் மறக்காமல் ஒரு பதிவு போட்டு விடுவார். எங்கே செல்லும் என் பாதை என ஒரு தொடர் பதிவு. தான் சந்தித்த அனுபவங்களையும் தன் கொள்கைகளையும் அப்படியே போட்டு உடைத்து இருப்பார். விருப்பமிருந்தால் இங்கே படித்துக் கொள்ளுங்கள்.

உலகம் முழுதும் சுத்தினாலும், அவ்வப்போது இந்தியா/சென்னை வந்து  தான் படித்த பள்ளி கல்லூரிகளுக்கு தன்னால் முடிந்த அளவு உதவிகளை செய்வது இவரது பழக்கம். சென்னை பச்சையப்பனில் படித்ததையும் அதன் நாட்களையும் மறக்காமல் தன் பதிவுகளில் பதிவு செய்ய தவற மாட்டார்.

கெட்ட வார்த்தை என்பது ஒரு கோபத்தின் வெளிப்பாடுதான். நிறைய பேர் கோவப்படும் போது வெளியில் திட்டவில்லைஎன்றாலும் உள்ளுக்குள் திட்டிக்கொண்டு தான் இருப்போம். இன்னமும் எங்கள் ஊர்களில் அதிக பாசமாக/உரிமையாக கூப்பிடும்போது 'ஒக்கால ...' (இது சரியான வார்த்தை உபயோகமா  என்று எனக்கு தெரியவில்லை) என ஒருவரை பார்த்து கூப்பிடுவதுண்டு. பல ஊர்களில் இதை மிக மோசமான கெட்ட வார்த்தையாக சொல்லுவார்கள். உண்மையிலேயே இது மோசமான கெட்ட வார்த்தைதான்.

என்னைப் பொறுத்த வரையில் சாய் பதிவுகளில் அவ்வப்போது வரும் கெட்ட வார்த்தைகளும், ஒரு மாதிரியான பதிவுகளையும்   எங்கள் ஊரில் பேசப்படும் 'ஒக்கால...' ஆகத்தான் நான் எடுத்துக் கொள்கிறேன்.

சாய், உங்கள் அனுமதி இல்லாமலேயே இந்த பதிவை நான் வெளி இட்டு உள்ளேன். தங்களுக்கு ஆட்சேபனை ஏதும் இருக்காது என்ற நம்பிக்கையில்.
   

share on:facebook

7 comments:

CS. Mohan Kumar said...

//உலகம் முழுதும் சுத்தினாலும், அவ்வப்போது இந்தியா/சென்னை வந்து தான் படித்த பள்ளி கல்லூரிகளுக்கு தன்னால் முடிந்த அளவு உதவிகளை செய்வது இவரது பழக்கம். //

Happy to know this. Let him continue this. Congrats and best wishes to him.

சாய்ராம் கோபாலன் said...

//சாய், உங்கள் அனுமதி இல்லாமலேயே இந்த பதிவை நான் வெளி இட்டு உள்ளேன். தங்களுக்கு ஆட்சேபனை ஏதும் இருக்காது என்ற நம்பிக்கையில்.//

அன்புள்ள ஆதி மனிதன்,

என்ன கேள்வி இது, எனக்கே என் பதிவுகளை ரீவைண்ட் செய்து படிக்கவைத்தமைக்கு நன்றி. நான் பட்ட அனுபவத்தை குடும்பத்துடன் நீங்கள் அனுபவித்து கொண்டு இருப்பீர்கள் !!

நேற்று இரவு நீங்கள் எண்ணை அலைபேசியில் கூப்பிடும் நேரத்துக்கு கொஞ்சம் முன் தான் நான் படுத்தேன். உங்கள் அலைபேசியை குறித்து வைத்துள்ளேன். கட்டாயம் அழைக்கின்றேன். ஒரு சில மாதங்களுக்கு முன் உங்களில் அமெரிக்க அலைபேசி எண்ணை அழைத்தபோது தான் நீங்கள் இந்தியா சென்றுவிட்டதை உணர்ந்தேன்.

முன் அளவு எழுத சரக்கும் இல்லை நேரமும் இல்லை. இந்த வருடத்தில் நிறைய golf ஆட (மறுபடியும்) ஆரம்பித்து விட்டேன் அதனால் இன்னும் கஷ்டம்.

நன்றி என் இடுகைகளையும் எண்ணை பற்றியும் புரிந்துக்கொண்டமைக்கு. என் மனைவியும் / மகனும் ஏன் பெற்றோரும் / அக்கா / அண்ணன் / தம்பிகளே கைவிட்ட சமாசாரம் அது !!

- நன்றியுடன் சாய்

சாய்ராம் கோபாலன் said...

Sorry for the typo on "எண்ணை" - Blame it on Google Indic !1

ஆதி மனிதன் said...

நன்றி மோகன். நல்ல உள்ளம் படைத்தவர் சாய். அதனால் தான் ஒரு தனி பதிவே போட்டேன்.

ஆதி மனிதன் said...

நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி சாய்.

அவ்வப்போது பதிவுலகிலும் கொஞ்சம் கால்ப் ஆடுங்கள் சாய். நாங்களும் ரசிக்கலாம். Especially உங்கள் 'கில்மா' மற்றும் அரசியல் நையாண்டி பதிவுகள்/போட்டோக்கள்...

//என் மனைவியும் / மகனும் ஏன் பெற்றோரும் / அக்கா / அண்ணன் / தம்பிகளே கைவிட்ட சமாசாரம் அது !!//

நிறைய பேர் ஒத்துக்கொள்ளாத விஷயம் இது. நீங்கள் எல்லாத்திலுமே 'ஓபன்' தான்.

ராஜ நடராஜன் said...

ஆதி! சாய் மெயின் பிலிம் காட்ட வேண்டிய ஆளு.இப்படி ட்ரெயலர் காட்டிகிட்டிருக்கிறாரே!

கூடவே யாருமே அறியாத படி இரண்டு பேர் பின்னூட்ட தனி ஆவர்த்தனை வேற:)

Thanks for your intro.

சாய்ராம் கோபாலன் said...

//ராஜ நடராஜன் said... ஆதி! சாய் மெயின் பிலிம் காட்ட வேண்டிய ஆளு.இப்படி ட்ரெயலர் காட்டிகிட்டிருக்கிறாரே!//

ஐயோ, அப்படி எல்லாம் பில்ட் அப் எதுக்கு ! சரக்கு இல்ல சடை நான் !!

Post a Comment