Sunday, March 24, 2013

ரஜினியும், சொகுசு கார்களும்...


சூப்பர் ஸ்டார்  ரஜினி ராசி அப்படி. அவர் எதை பற்றியாவது பேசினாலும் பிரைச்சனை தான். பேசாவிட்டாலும் பிரச்சனைதான். சமீபத்தில் நாளிதழ்களில் வெளியான இரண்டு விஷயங்கள் மனதை சஞ்சலப்படுத்தியது. ஒன்று ரஜினி விட்ட அறிக்கை.

சமீபத்தில் ஹிந்தி நடிகர் சஞ்சய் தத்திற்கு விதிக்கப்பட்ட தண்டனை குறித்து ரஜினி பெயரில் வெளியான அறிக்கை பலரையும் புருவம் உயர்த்த செய்திருக்கிறது. ரஜினியின் நெருங்கிய நண்பராகவே இருந்தாலும் அது அவருக்கும் அவர் நண்பருக்கும் இடையே உள்ள பாசம். சஞ்சய் தத்துக்காக இறைவனிடம் வேண்டும் அவர், அதை அவரிடம் நேரிடையாக தெரிவித்து இருக்கலாம். ஏன், அதை ஒரு 'press statement' ஆக வெளியிட வேண்டும் என தெரியவில்லை.

சஞ்சய் தத்துக்கும் மும்பை படுகொலைகளுக்கும் நேரடி தொடர்பு இல்லை என்றாலும் அவர் ஆயுதங்கள் கொள்முதல் செய்ததும், வைத்திருந்ததும் சட்டப்படி குற்றம், அதை அவரும் ஒத்துக்கொண்டுள்ளார். நீதி மன்றத்திலும் அவர் மீதான குற்றம் நிரூபணம் ஆகி இருக்கிறது. அப்படி இருக்கையில் 'என் நண்பர், மீதமுள்ள தன் வாழ்நாளை நிம்மதியுடன் கழிக்க ஆண்டவனை வேண்டுகிறேன்' என்று ரஜினி அவர்கள் அறிக்கை விட்டிருப்பது சற்று ஆச்சர்யத்தை அளிக்கிறது.

உங்களுக்கு நெருங்கியவர்களுக்காக வருத்தபடுவதில் ஒன்றும் தப்பில்லை. ஆனால் பொது வாழ்வில் உள்ளவர், தமிழக மக்களால் பெரிதும் மதிக்கப்படுபவர் அதை அவர் வாழும் சமுதாயத்து மக்களின் பிரச்சனைகளுக்காகவும் ஏன் வருத்தப் படுவதில்லை என்பது தான் இப்போதைய கேள்வியே.

ஒன்று மட்டும் தெரிகிறது. சஞ்சய் தத்துக்காக தான் வருத்தப்படுவது யாருக்கோ அல்லது எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்பது மட்டும் அவர் எண்ணம் என்று. என்னமோ தலைவா. நாங்கல்லாம் உங்கள் ரசிகனாக தான் இன்னமும் இருக்கிறோம். நீங்களும் திரை உலகில் சூப்பர் ஸ்டாராகவே இருந்து விட்டு போங்கள். அப்படி 'குரல்' கொடுக்க நினைத்தால் தமிழகத்திலும், தமிழர்களுக்கும் நிறையவே இதை விட பெரிய பிரச்சனைகள் இருக்கிறது. அதற்கும் ஏதாவது 'குரல்' கொடுங்கள்.

அடுத்ததாக சமீபத்தில் CBI நடத்திய ரைடும் அதில் பெரும் பணக்காரர்களிடம் சிக்கிய வெளிநாட்டு சொகுசு கார்களும். தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள், பணக்காரர்கள் அவர்களிடம் பணம் இருக்கிறது. எந்த கார் வேண்டுமானாலும் வாங்கி கொள்ளட்டும். அதை முறைப்படி வரி செலுத்தி வாங்க வேண்டியது தானே? ஓரிரு கோடிகள் கொடுத்து 'ஹம்மர்' வண்டி வாங்கும் அவர்கள் அதோடு சேர்த்து இன்னொமொரு கோடி வரியையும் செலுத்தினால் என்ன குறைந்தா போய் விடுவீர்கள்?

இது வரை வரி ஏய்த்து வாங்கப்பட்டிருக்கும் 33 வெளிநாட்டு சொகுசு கார்களை அடையலாம் கண்டுள்ளது CBI. இந்தியா சிமெண்ட்ஸ் உரிமையாளரும், BCCI தலைவருமான ஸ்ரீனிவாசனிடம் இருந்து 11 காரும், ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி தாளாளரிடம் இருந்து 7 கார்களும், MGM க்ரூப்பில் இருந்து 2 கார்களும் இதில் அடக்கம்.

இதில் வேதனையான விசயம் என்னவென்றால்,  இன்சூரன்ஸ் இல்லை, ரோட் டாக்ஸ் கட்டவில்லை  என்று டூ வீலரில் போபவர்களிடம் ஸ்பாட் பைன் போடும் காவல் துறையினர், இல்லை என்றால் வண்டியை ஸ்டேசனுக்கு விடு, இல்லைனா நாளைக்கு வந்து கோர்ட்டுல வண்டிய எடுத்துக்க என மிரட்டுகிறார்கள். ஆனால், இந்த வரி ஏய்ப்பு செய்து வாங்கிய வெளிநாட்டு சொகுசு கார்களின் உரிமையாளர்களுக்கு மட்டும், வண்டியை அவர்கள் தொடர்ந்து உபயோகப்படுத்தலாம், அவர்களே வைத்து கொள்ளலாம். தேவை பட்டால் மட்டும் எங்களிடம் காண்பிக்க வேண்டும் என அவர்களிடமே வண்டியை விட்டு விட்டார்கள். ஹ்ம்ம்..எளியோர் என்றால் ஒரு சட்டம். வலியோர் என்றால்...




  

share on:facebook

7 comments:

Prem S said...

தலைவர் அப்படியா பேசினார் வருத்தம் தான்

Avargal Unmaigal said...

//ஒன்று மட்டும் தெரிகிறது. சஞ்சய் தத்துக்காக தான் வருத்தப்படுவது யாருக்கோ அல்லது எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்பது மட்டும் அவர் எண்ணம்///

மிக மிக உண்மை

VOICE OF INDIAN said...

பொது வாழ்வில் உள்ளவர்????????

திண்டுக்கல் தனபாலன் said...

/// தமிழகத்திலும், தமிழர்களுக்கும் நிறையவே இதை விட பெரிய பிரச்சனைகள் இருக்கிறது. அதற்கும் ஏதாவது 'குரல்' கொடுங்கள். ///

அதற்கெல்லாம் மனசு இருக்கணும்... இல்லாததை பேசுவது வீண்வேலை...

வரும் நாட்களில் குரல் கொடுத்தால்... நல்ல நடிப்பை பாராட்டலாம்...

Anonymous said...

தனி ஈழம் அமைய ரஜினி குரல் கொடுப்பாரா?
அப்படி குரல் கொடுத்தால் என் மீசையை எடுத்து விடுகிறேன்.

Vadivelan said...

Hi,

I may be wrong. My point is,

I think it is a trend in media(paper,channels) and now blogs. Asking that why Rajini is not giving voice for this social issue,
like Cauvery issue, Mullai periyar, tsunami/sivakas accidents and now eelam.

I really do not understand, why he has to give voice.......

same people is using pirated dvds and rich/educated people using online videos to watch the tamil films..

Yesterday, i read a comment about kamal, he has donated 50lakhs to trust for aids and cancer. same people is asking if it is his money, whether he will give.. (without knowing that win prize 50lakhs is his money)...

So, if I have headache, i have to take tablet and water, not Rajini/kamal has to come and say..

indrayavanam.blogspot.com said...

அப்படி 'குரல்' கொடுக்க நினைத்தால் தமிழகத்திலும், தமிழர்களுக்கும் நிறையவே இதை விட பெரிய பிரச்சனைகள் இருக்கிறது. அதற்கும் ஏதாவது 'குரல்' கொடுங்கள்.மிக நியாயமான வரிகள்

Post a Comment