Wednesday, November 28, 2012

சென்னையில் L.K.G. அட்மிஷனுக்கு ரூ. 17 லட்சம்.


தங்கள் பிள்ளைகள் நல்ல பள்ளிகளில் சேர்ந்து படிக்க வேண்டும் என ஒவ்வொரு பெற்றோரும் விரும்புவது இயற்கையே. ஆனால் அதற்கும் ஒரு எல்லை வேண்டாமா?

நேற்று ஒரு ஆங்கில நாளிதழில் வெளியான செய்தி இது தான். தன் குழந்தைக்கு இடம் வாங்க மைலாப்பூரில் இருக்கும் ஒரு பள்ளிக்கு அக்குழந்தையின் தந்தை அப்பள்ளிக்கு கூடை பந்தாட்ட மைதானம் ஒன்றை தன் சொந்த செலவில் கட்டி தருவதாக கூறி உள்ளாராம். சும்மா இல்லீங்க. அதற்கு ஆகும் செலவு ஜஸ்ட் 17 லட்ச ருபாய் தான்.

இன்னொரு குழந்தையின் தந்தை கீழ்பக்கத்தில் உள்ள ஒரு பள்ளியில் தன் குழந்தையை சேர்பதற்காக அப்பள்ளிக்கு தன் சொந்த செலவில் கணிப்பொறி மையம் ஒன்றை கட்டி தருவதாக விருப்பம் தெரிவித்துள்ளார். தற்போது 'நன்கொடைகள்' தடை செய்யப்பட்டுள்ளதால் பெற்றோர்களும் பள்ளிகளும் இவ்வாறு வேறு வகைகளில் தங்கள் காரியத்தை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். டொனேஷன் என்பதற்கு பதிலாக இதை 'தெரிந்தே கொடுக்கும் நல் உதவிகள் என்றும் திரும்ப பெற்றுக்கொள்ளும் முதலீடு' எனவும் பெயர் வைத்துக் கொள்கிறார்கள்.

சில பள்ளிகளில் அவ்வாறு கொடுக்கப்படும் நன்கொடைகளுக்கு வங்கி வட்டி போட்டுக் கொடுப்பதும் நடக்கிறதாம். பெற்றோர்களும் எப்படியோ பிள்ளைகளுக்கு சீட்டும் ஆச்சு. பணத்திற்கு வட்டிக்கு வட்டியும் ஆச்சு என சந்தோசப் பட்டுக் கொள்கிறார்கள். இன்னும் சில பள்ளிகளில் வட்டி இல்லா கடனாக பெற்றோர்களிடம் ஒரு லட்சம் முதல் பெற்றுக் கொண்டு அதை அவர்கள் பிள்ளைகள் பள்ளியை விட்டு செல்லும் போது திருப்பி கொடுப்பதாக ஒப்பந்தம் போட்டு தருகிறார்களாம்.

ஒரு பள்ளியின் நிர்வாகி கூறும்போது, 'இப்போதெல்லாம் பெரிய மனிதர்களிடம் பெற்றோர்கள் போவது நன்கொடை இல்லாமல் சீட்டு வாங்க இல்லை. நாங்கள் அதிகமாக நன்கொடை கொடுக்கிறோம். அதனால் எங்களை சிபாரிசு செய்யுங்கள்' என்று கேட்பதற்கு தான் என்கிறார்.

சென்னையில் நல்ல பள்ளிகளில் நன்கொடைகள் அதிக பட்சமாக 4 லட்சம் வரை வாங்க படுகிறதாம். ஏன் மதுரை போன்ற பிற ஊர்களில் கூட 25,000 முதல் 75,000 வரை நன்கொடையின் வளர்ச்சி அதிகரித்து இருக்கிறதாம். ஹ்ம்ம்...இருக்கிறவன் கொடுக்கிறான் என்கிறீர்களா? அது சரி.

நான் எவ்வளவு நன்கொடை கொடுத்தேன் தெரியுமா? ரூ. 750. இளநிலை பட்டப்படிப்புக்கு தனியார் கல்லூரி ஒன்றில் சேர. வருடம்....?

Thanks: TOI

share on:facebook

10 comments:

கோவை நேரம் said...

அம்மாடி....17 லட்சமா...நாங்கலாம் வெறும் 2 லட்சதில் எஞ்சினிரியங் முடிச்சோம்....நாலு வருசம்..

pudugaithendral said...

ரொம்ப காலமா இப்படித்தான்!!!! அரசாங்க பள்ளியில் நான் படிச்ச போது நன்கொடையா சிலர் பீரோ, டேபிள்,சேர் எல்லாம் வாங்கி கொடுத்ததை பாத்திருக்கேன். கல்வி வியாபாரமா ஆகிடிச்சு. :((

திண்டுக்கல் தனபாலன் said...

யம்மாடி...! நல்ல வேளை, நான் எங்க ஊருக்கு வந்து விட்டேன்...

ADHI VENKAT said...

கல்வி வியாபாரம் தான்....

தில்லியிலும் பயங்கரமாக இது போல் நடக்கும்.

அமுதா கிருஷ்ணா said...

கிராமங்களில் அரசு பள்ளிகளுக்கு ஃபேன்,சேர்,பெஞ்ச் என்று சில பெரிசுகள் வாங்கி கொடுத்து தங்கள் வாரிசுகளை பாசாக்கா சொல்வாங்க.10 வருடங்கள் முன்பு கூட இந்த அநியாயம் இல்லைங்க.

ஆதி மனிதன் said...

@கோவை நேரம் said...
//அம்மாடி....17 லட்சமா...நாங்கலாம் வெறும் 2 லட்சதில் எஞ்சினிரியங் முடிச்சோம்....நாலு வருசம்..//

அம்மாடி வெறும் 2 லட்சமா? நாங்கல்லாம் லட்சத்தையே தாண்டல...

ஆதி மனிதன் said...

@புதுகைத் தென்றல் said...
//ரொம்ப காலமா இப்படித்தான்!!!! அரசாங்க பள்ளியில் நான் படிச்ச போது நன்கொடையா சிலர் பீரோ, டேபிள்,சேர் எல்லாம் வாங்கி கொடுத்ததை பாத்திருக்கேன்//

அங்கேயும் அப்படிதானா?

ஆதி மனிதன் said...

@திண்டுக்கல் தனபாலன் said...
//யம்மாடி...! நல்ல வேளை, நான் எங்க ஊருக்கு வந்து விட்டேன்...//

நாங்கள் எல்லாம் என்ன செய்வது?

ஆதி மனிதன் said...

@கோவை2தில்லி said...
//தில்லியிலும் பயங்கரமாக இது போல் நடக்கும்//

தலை நகரம். கேக்கவா வேண்டும்?

ஆதி மனிதன் said...

@அமுதா கிருஷ்ணா said...
//கிராமங்களில் அரசு பள்ளிகளுக்கு ஃபேன்,சேர்,பெஞ்ச் என்று சில பெரிசுகள் வாங்கி கொடுத்து தங்கள் வாரிசுகளை பாசாக்கா சொல்வாங்க//

உங்களுக்காக யாரும் ஏதும் வாங்கி கொடுத்து இருக்காங்களா?

Post a Comment