Sunday, November 25, 2012

IT - கனவாகி போகும் கேம்பஸ் வேலைகள்.


கல்லூரி இறுதி ஆண்டிலோ அல்லது அதற்கும் முதல் ஆண்டிலோ கேம்பஸ் இன்டர்வியூ மூலம் நன்கு படிக்கும் மாணவர்கள் பெரிய பெரிய IT கம்பெனிகளில் வேலைக்கு சேர, படிப்பை முடிக்கும் முன்பே வேலைக்கான ஆர்டர் வாங்கி விடுவர். அதும் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கம்பெனிகள் ஆபர் கொடுக்கும் போது எது அதிக சம்பளம் கொடுகிறது எது மிக நல்ல கம்பெனி என்றெல்லாம் பார்த்து அவற்றில் ஒன்றை மாணவர்கள் தேர்ந்தெடுப்பது வழக்கம். அப்புறம் மீதம் உள்ள செமஸ்டர்களை பெயில் ஆகாமல் நல்ல மார்க்குடன் தேர்வாகி விட்டால் வேலைக்கு சேர்ந்த முதல் மாதமே ATM நிறைய சம்பளம். இப்படி தான் IT கனவுகள் இது நாள் வரை இருந்து வந்தன.
  
அதற்க்கெல்லாம் சமீப காலமாக பல வகைகளில் ஆப்புகள் விழ தொடங்கி உள்ளது. கடந்த ஆண்டு கேம்பஸில் தேர்வானவர்கள் பலருக்கு இன்னமும் வேலைக்கு வர சொல்லி பல பெரிய நிறுவனங்களில் இருந்து அழைப்பு போகவில்லை அதற்க்கு பதிலாக சற்று பொறுத்திருங்கள். அடுத்த மூன்று மாதத்தில் சேரலாம் அடுத்த ஆறு மாதம் கழித்து சேரலாம் என்று ஓலை மட்டும் சென்று கொண்டிருகிறது. இதற்க்கு காரணம் எதிர் பார்த்த அளவு IT வேலைகள் ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து கிடைக்காததுதான்.

சரி அதற்க்கு அவர்கள் என்ன செய்வார்கள் பாவம் என்றால்? பாவம் அவர்கள் இல்லை. வேலை உறுதி என்று இத்தனை நாட்கள் காத்திருந்து அதை நம்பி மேற்படிப்புக்கு கூட முயற்சிக்காமல், வேறு கம்பெனிகளில் வந்த ஆபரையும் வேண்டாம் என கூறிய மாணவர்கள் தான். இந்த இடைப்பட்ட காலத்தில் தங்களை இன்னும் நன்றாக பட்டை தீட்டிக் கொள்ளலாம் என்று கூறுபவர்கள் உண்டு. ஆனால், நினைத்து பாருங்கள். படிப்பை முடிக்கும் முன்பே வேலை உறுதி என்ற நிலையிலிருந்து இன்று வேலை திரும்பவும் கிடைக்குமா கிடைக்காதா என விரக்தியோடு வீட்டில் உட்காருவது எவ்வளவு கஷ்டம்.

இது சமீபத்தில் வந்த செய்தி. ஒரு பிரபல IT கம்பெனி இந்த ஆண்டு கேம்பஸ் செலெக்ஷன் ஆனவர்களுக்கு வேலையில் சேரும் முன் மீண்டும் ஒரு திறனாய்வு தேர்வு வைத்ததாகவும் அதில் கலந்து கொண்ட 3000 பேரில் ஆயிரத்து சொச்சம் பேர் மட்டுமே பாசானதகவும், இத்தேர்வில் பாசானவர்கள் மட்டுமே வேலையில்  சேர முடியும் என்று கூறி இருக்கிறது. ஏற்கனவே கேம்பஸ் இண்டர்வியூயில் தேர்வானவர்களுக்கு இன்னும் ஒரு தேர்வு வைப்பது எந்த வகையில் நியாயம் என தெரியவில்லை. அதுவும் எந்த வித பயிற்சியும் அளிக்காமல்.

அது மட்டும் இல்லை. தேர்வுக்கான வினாக்களும் சற்று கஷ்டமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளார்கள். இத்தேர்வில் பெயிலானோர்கள் மறு தேர்வு எழுதி பாசாகும் வரை வேலையில் சேர முடியாது என்றும் மறு தேர்வு எப்போது என தற்போது சொல்ல முடியாது என்றும் கம்பெனி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவர்கள். இந்த கம்பெனி வேலையை நம்பி மற்ற கம்பெனி ஆபர்களை வேண்டாம் என்று சொன்னவர்கள் நிலைமை தான் இன்னும் பாவம்.   

கஷ்டப்பட்டு படித்து பல மாணவர்களுக்கு மத்தியில் கேம்பஸ்யில் தேர்வாகி பின் மாதக்கணக்கில் காத்திருக்கும் மாணவர்களின் மனநிலையை சற்று இந்த கம்பெனிகள் யோசித்து பார்க்கவேண்டும். அட முழு சம்பளம் இல்லை என்றாலும் கூட ஸ்டைபண்ட் போல் எதாவது கொடுத்து உடனே வேலை கொடுக்கலாம். அதே போல் வேலைக்கு தேர்வாகிய பின் மீண்டும் ஒரு தேர்வு வைத்து தான் எடுப்போம் என்று சொல்வது எந்த வகையில் நியாயம் என தெரியவில்லை. இதை எல்லாம் IT கம்பெனிகள் நினைத்து பார்த்து ஒரு நல்ல முடிவை எடுத்தால் ஆயிரகணக்கான மாணவர்கள் வாழ்த்துவார்கள்.     


share on:facebook

10 comments:

பழனி.கந்தசாமி said...

வேலைக்குச் சேர்ந்த பிறகு கூட அந்த வேலை நிரந்தரம் என்று சொல்ல முடியாத நிலைதானே இன்று ஐ.டி. துறையில் நிலவுகிறது?

திண்டுக்கல் தனபாலன் said...

தங்களின் தகவல்களுக்கு நன்றி...

ஐ.டி. துறை உடம்பு கெட்டுப்போகுவதை தவிர வேறு ஒன்றும் கிடைப்பதில்லை... (சிலருக்கு-ஐ.டி. துறையில் ஒரு பகுதி)

18 வருடம் தீவிரமாக வேலை செய்த என் நண்பர் இப்போது அதிகம் செல்வது மருத்துவமனை... சம்பாதித்த பணம் அங்கே செல்கிறது...

மோகன் குமார் said...

கொடுமையான விஷயம் தான்.

அவர்களை செலக்ட் செய்து வேலையில் சேர்வதற்குள் கம்பனிக்கு சில முக்கிய ஆர்டர்கள் குறைந்திருக்க கூடும். அப்போது அவர்களை வேலை இன்றி பெஞ்ச்சில் வைக்கணும் என இப்படி செய்கிறார்களோ?

அன்பு said...

:-) ஒன்னும் சொல்றதுக்கு இல்ல..

ஆதி மனிதன் said...

நன்றி கந்தசாமி அய்யா.

IT வேலையை பொறுத்தவரை அது இன்று இல்லை என்றுமே அப்படிதான். வேலை நிரந்தரம் 'இல்லை'.

ஆதி மனிதன் said...

@ திண்டுக்கல் தனபாலன் said...

//18 வருடம் தீவிரமாக வேலை செய்த என் நண்பர் இப்போது அதிகம் செல்வது மருத்துவமனை... சம்பாதித்த பணம் அங்கே செல்கிறது...//

சும்மா பயமுறுத்தாதீங்க சார்.

ஆதி மனிதன் said...

@மோகன் குமார் said...

//கொடுமையான விஷயம் தான். //

ஆம் மோகன். இருந்தாலும் நேரிடையாக பதிக்கப்படுவது மாணவர்கள் தானே? நான் சொன்னது போல் ஏதோ ஸ்டைபன்ட் மாதிரி ஏதோ கொடுத்து வேளையில் சேர்க்கலாமே?

ஆதி மனிதன் said...

வருகைக்கு நன்றி அன்பு.

Jayadev Das said...

IT நிலைமை இப்படியாயிடுச்சா?

bandhu said...

இது மிகவும் கொடுமை சார். ஆனால், இது அமெரிக்காவிலும் நடந்தது தான், டாட் காம் பஸ்டில்!
எந்த வருடம் படித்து முடிக்கிறோம் என்பது வேலை கிடைப்பதை நிர்ணயிக்கிறது என்பது கொடுமை!

Post a Comment