தங்கள் பிள்ளைகள் நல்ல பள்ளிகளில் சேர்ந்து படிக்க வேண்டும் என ஒவ்வொரு பெற்றோரும் விரும்புவது இயற்கையே. ஆனால் அதற்கும் ஒரு எல்லை வேண்டாமா?
நேற்று ஒரு ஆங்கில நாளிதழில் வெளியான செய்தி இது தான். தன் குழந்தைக்கு இடம் வாங்க மைலாப்பூரில் இருக்கும் ஒரு பள்ளிக்கு அக்குழந்தையின் தந்தை அப்பள்ளிக்கு கூடை பந்தாட்ட மைதானம் ஒன்றை தன் சொந்த செலவில் கட்டி தருவதாக கூறி உள்ளாராம். சும்மா இல்லீங்க. அதற்கு ஆகும் செலவு ஜஸ்ட் 17 லட்ச ருபாய் தான்.
இன்னொரு குழந்தையின் தந்தை கீழ்பக்கத்தில் உள்ள ஒரு பள்ளியில் தன் குழந்தையை சேர்பதற்காக அப்பள்ளிக்கு தன் சொந்த செலவில் கணிப்பொறி மையம் ஒன்றை கட்டி தருவதாக விருப்பம் தெரிவித்துள்ளார். தற்போது 'நன்கொடைகள்' தடை செய்யப்பட்டுள்ளதால் பெற்றோர்களும் பள்ளிகளும் இவ்வாறு வேறு வகைகளில் தங்கள் காரியத்தை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். டொனேஷன் என்பதற்கு பதிலாக இதை 'தெரிந்தே கொடுக்கும் நல் உதவிகள் என்றும் திரும்ப பெற்றுக்கொள்ளும் முதலீடு' எனவும் பெயர் வைத்துக் கொள்கிறார்கள்.
சில பள்ளிகளில் அவ்வாறு கொடுக்கப்படும் நன்கொடைகளுக்கு வங்கி வட்டி போட்டுக் கொடுப்பதும் நடக்கிறதாம். பெற்றோர்களும் எப்படியோ பிள்ளைகளுக்கு சீட்டும் ஆச்சு. பணத்திற்கு வட்டிக்கு வட்டியும் ஆச்சு என சந்தோசப் பட்டுக் கொள்கிறார்கள். இன்னும் சில பள்ளிகளில் வட்டி இல்லா கடனாக பெற்றோர்களிடம் ஒரு லட்சம் முதல் பெற்றுக் கொண்டு அதை அவர்கள் பிள்ளைகள் பள்ளியை விட்டு செல்லும் போது திருப்பி கொடுப்பதாக ஒப்பந்தம் போட்டு தருகிறார்களாம்.
ஒரு பள்ளியின் நிர்வாகி கூறும்போது, 'இப்போதெல்லாம் பெரிய மனிதர்களிடம் பெற்றோர்கள் போவது நன்கொடை இல்லாமல் சீட்டு வாங்க இல்லை. நாங்கள் அதிகமாக நன்கொடை கொடுக்கிறோம். அதனால் எங்களை சிபாரிசு செய்யுங்கள்' என்று கேட்பதற்கு தான் என்கிறார்.
சென்னையில் நல்ல பள்ளிகளில் நன்கொடைகள் அதிக பட்சமாக 4 லட்சம் வரை வாங்க படுகிறதாம். ஏன் மதுரை போன்ற பிற ஊர்களில் கூட 25,000 முதல் 75,000 வரை நன்கொடையின் வளர்ச்சி அதிகரித்து இருக்கிறதாம். ஹ்ம்ம்...இருக்கிறவன் கொடுக்கிறான் என்கிறீர்களா? அது சரி.
நான் எவ்வளவு நன்கொடை கொடுத்தேன் தெரியுமா? ரூ. 750. இளநிலை பட்டப்படிப்புக்கு தனியார் கல்லூரி ஒன்றில் சேர. வருடம்....?
Thanks: TOI

share on:facebook