சிறு வயதில் குரங்கு பெடல் போட்டுக்கொண்டு சைக்கிள் ஒட்டி பழகும் போது அடிக்கடி கீழே விழுவேன். அப்போது என் அண்ணன் கூறுவார் "நீ என்னைக்கு சைக்கிள் பழகி என்னைக்கு நீயா ஓட்ட போகிறாயோ" என்று.
அதற்கு நான் கூறுவேன், "எனக்கு கார் வாங்கி குடுங்க, உடனே ஒட்டி காட்டுறேன்" என்று. அதெப்படி என்று அவர் கேட்கும் முன்பே என்னுடைய பதில், கார்ல நாலு சக்கரம் இருக்குல்ல அப்புறம் எப்படி அது கீழ விழும். அதனால நான் கீழ விழாமலே ஒட்டிடுவேன்ல? என்று.
அப்படி பார்க்கபோனா ப்ளைட் ஓட்டுவது இன்னும் ஈஸி. எதிரே எந்த வாகனும் வராது. சிக்னல் இல்ல, ஒன் வே இல்ல. படுத்துக்கிட்டே வண்டி ஓட்டலாம். ஆம் அதனால் தான் தற்போது பெரும்பாலான நாடுகள் தங்கள் ராணுவம் மற்றும் உளவு வேலைகளுக்கு ஆளில்லா விமானங்களை உபயோகிக்க தொடங்கி உள்ளது.
சரி விசயத்திற்கு வருவோம். கூடிய சீக்கிரம் ஒட்டுனரில்லா (ஆளில்லா) கார்கள் வரபோகின்றன.
பத்து வருடங்களுக்கு முன் மேலை நாடுகளில் கூட GPS உபயோகம் அவ்வளவாக இல்லை. GPS போன்ற கருவிகள் பற்றி செய்திகள் வந்த போதெல்லாம் அதன் மேல் மக்களுக்கும் அவ்வளவு நம்பிக்கை இல்லை. ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்லவேண்டிய முகவரியை பதிவு செய்தால் கூட, திடீரென்று நாம் திசை மாறி சென்றுவிட்டால் மீண்டும் சரியான திசையை GPS கருவி காட்டுமா? செல்லுமிடத்தை தாண்டி சென்று விட்டால் மீண்டும் திரும்பி வர பாதை காட்டுமா? என்ற கேள்விகள் எல்லாம் எழுந்தன.
ஆனால் இப்போது GPS உபயோகிப்பவர்களுக்கு தெரியும், அதனுடைய பயன், முக்கியத்துவம் மற்றும் புத்திசாலித்தனத்தை பற்றி. ஒரு சந்தை மறந்து அடுத்த சந்திற்குள் நுழைந்து விட்டால் கூட. "அண்ணா திரும்பி மூணாம் சந்துல நுழைந்து பிள்ளையார் கோவில் பக்கமா திரும்பி நேரா போ" என்று கூறி நம் ரூட்டை நேராக்கி விடும். அது மட்டுமா? எங்கெங்கு பெட்ரோல் பன்க் இருக்கு, எங்கு சூடா மசால் வடை (Mc donald's) கிடைக்கும் என அனைத்து தகவல்களை நாம் செல்லும் இடமெல்லாம் அவ்வப்போது தரவல்ல தீர்க்க தரிசியாக மாறி உள்ளது.
தற்போது கூகுல் (Google) நிறுவனம் ஆளில்லாமல் இயங்கும் கார்களை இயக்கி சாதனை புரிந்துள்ளது. சமீபத்தில் வெளியான தகவலின்படி, கூகுல் நிறுவனம் ஏற்கனவே சுமார் ஏழு ஆளில்லா கார்களை களத்தில் (ரோடுகளில்) விட்டு தங்களது சோதனையை வெற்றிகரமாக நடத்தி இருக்கிறார்கள். ஒவ்வொரு காரும் சுமார் 1,000 மைல்கள் எந்த விதமான மனித குறுக்கீடும் இல்லாமல் சரியான பாதையில் சரியான சரியாக இலக்கை சென்று அடைந்து உள்ளன.
அதே நேரத்தில் சோதனையின் போது காரினுள் யாரும் இல்லாமல் இல்லை. ஒரு வேலை கார் தானாக இயங்கும் போது தவறு ஏதும் நேரும் பட்சத்தில் விபத்தாகிவிடாமல் தடுக்க உண்மையில் டிரைவர் சீட்டில் ஒருவரும், ஒரு மெக்கானிக் மற்றும் பின் இருக்கையில் ஒருவரும் சோதனை ஓட்டத்தின் போது இருந்திருக்கிறார்கள். இருப்பினும் இது ஒரு மிக பெறும் சாதனையாக கருதப்படுகிறது. அதில் ஒரு கார், சான் பிரான்சிஸ்கோவின் மிகவும் வளைவு நெளிவு உள்ள லோம்பார்ட் தெரு வழியாக சவாரி செய்துள்ளது.
இம்மாதிரியான கார்கள் உடனே மார்கெட்டுக்கு வர வாய்ப்பிலை என்றாலும் கூட பிற்காலத்தில் விஞ்சான வளர்ச்சியின் முதிர்ச்சியாக நடைமுறையில் மிகவும் சாத்தியமாகவே தெரிகிறது. தற்போது GPS பயன்பாடு போல்.
அப்படியே ஆளில்லா கார்கள் இல்லையென்றால் கூட, அமெரிக்கா போன்ற நாடுகளில் மனித குறுக்கீடுகள் அதிகம் இல்லாத அதே நேரத்தில் மிக நீண்ட தூர பிரயாணங்களில் ஆட்டோ பைலட் மாதிரி செயல் பட கூடிய கார்கள் மிக விரைவில் வருவதற்கான சாத்தியங்கள் தெரிகிறது.
அதில் ஒன்று, சமீபத்தில் போர்ட் கம்பெனி தயாரித்துக் கொண்டிருக்கும் கார் வகை. இந்த வகை கார்கள் அதனை சுற்றி நடக்கும் அல்லது தெரியும் விசயங்களை 360 degrees கோணத்தில் படம் பிடிப்பது மட்டுமில்லாமல் அதனை வைத்து கார் ஓட்டுனருக்கு அவ்வப்போது சிக்னல்களை கொடுத்துக் கொண்டே இருக்கும். இதை பற்றி ஆராச்சியாளர்கள் கூறும் போது, குடித்துவிட்டோ, தூக்க கலக்கத்திலோ கார் ஓட்டுபவர்களை காட்டிலும், ரோபோ டிரைவர்கள் மிகவும் பாதுகாப்பானவையே என்று.
அதிலும் ரோட்டில் ஓடும் அனைத்து வாகனங்களும் ரோபோவினால் இயக்கப்படும்போது அவைகளை நெட் வொர்க்கிர்க்குள் கொண்டு வருவது மிகவும் சுலபம் என்றும் கூறுகிறார்கள்.
ஹ்ம்ம். எல்லாம் சாத்தியமே. முயற்சி செய்யும் பட்சத்தில்...
share on:facebook