Wednesday, December 23, 2009

பக்கத்து வீட்டு செல்லம்...



அமெரிக்கா சென்ற சில மாதங்களிலேயே எனக்கு அந்த ஆசை வந்து விட்டது. இந்தியாவில் இருந்தவரை அந்த மாதிரி ஆசை எனக்குள் எழுந்ததேயில்லை எனலாம். எவ்வளவு அழகா இருந்தாலும் ஜஸ்ட் பார்த்து விட்டு சென்று கொண்டேயிருப்பேன். இங்கு வந்த பிறகு தான் இவர்கள் கொஞ்சுவதையும், கட்டிப்பிடிப்பதையும் பார்த்து பார்த்து எனக்கும் அந்த ஆசை வந்தது. நமக்கும் ஒன்று இருந்தால் எப்படி இருக்கும் என்று.


அப்படி நான் ஏங்கி கொண்டிருந்த ஒரு நாளில் தான் பக்கத்து பிளாட்டிற்கு புதிதாக ஒரு குடும்பம் வந்தது. டிக்ஸி என்ற அழகு தேவதையும் கூடவே.

வந்த புதிதில் என்னை பார்த்தாலே அவள் சற்று ஒதுங்கியே தான் சென்றாள். ஆனாலும் நான் விடாமல் அவளிடம் பழகும் பொருட்டு அவள் வெளியே வரும் நேரம் பார்த்து நானும் அவள் கண்ணில் படுமாறு வெளியில் வந்து நிற்பேன். சில நாட்களில் நான் எதிர்பார்த்ததை போல் அவளும் என்னை சினேகமாக பார்க்க தொடங்கி விட்டால். இருந்தும் எனக்கு அவளிடம் நெருங்கிப் பழக பயமாக இருந்தது.

என் ரூம்மேட் சந்துரு நல்ல தைரியமான ஆளு. வாட்ட சாட்டமாக இருப்பான். அவனிடம் நான் டிக்ஸி பற்றியும், எனக்கு அவள் மேல் உள்ள ஆசை பற்றியும் கூறினேன். அவளும் என்னை சிநேகமாக பார்க்க தொடங்கி இருப்பதை பற்றியும் கூறினேன்.

என்ன நினைத்தானோ அவன், "டே கண்ணா, ஒனக்கு ஏண்டா இந்த ஆசையெல்லாம். வந்தோமா வேலைய பாத்தோமானு போகாம, அது சிநேகமா பார்க்குது, மொறைச்சி பார்க்குது அது இதுன்னு ஏதாவது செஞ்சி வம்புல மாட்டிக்காத. அப்புறம் கஷ்டப்பட போறது நீதான். அவ்வளவுதான் சொல்வேன்" என்று பெரிதாக உபதேசம் செய்ய ஆரம்பித்துவிட்டான்.

ஓரிரு வாரங்கள் சென்றிருக்கும். அன்று ஞாயிற்றுகிழமை. சந்துரு வெளியில் சென்று விட்டான். நான் மட்டும் வீட்டில் தனியாக இருந்தேன் கதவு தட்டும் சத்தம் கேட்டு எழுந்தேன். திறந்து பார்த்தால், பக்கத்து பிளாட்காரர். கூடவே டிக்சியும்.

"ஒரு அவசர வேலை. என் மனைவி இன்னும் ஊரிலிருந்து வரவில்லை. இரவு நேரம் டிக்சி வீட்ல தனியாக இருக்க பயப்படுவா. கொஞ்ச நேரம் உங்க வீட்ல விட்டுட்டு போகட்டுமா? பாத்துக்க முடியுமான்னு" கேட்டவுடன் எனக்கு ஒன்னுமே புரியல. நான் எதிர்பார்க்கவே இல்லை அப்படி ஒரு சந்தர்ப்பம் எனக்கு கிடைக்கும் என்று. ஆஹா பழம் நழுவி பாலில் விழுது என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டே...

Why don't? its my pleasure. please drop her என நான் கூறிக்கொண்டு இருக்கும் போதே டிக்சி பின்னாலிலிருந்து என்னை எட்டி பார்த்தாள். எப்போதும் பார்க்கும் அந்த சிநேகப் பார்வை அவளிடம் இல்லை. சிறிது மிரட்சி அவள் பார்வையில் கலந்திருந்ததை என்னால் காண முடிந்தது.

Ok. thank you very much. bye dixie. will come back soon என்று அவர் கிளம்பவும் டிக்சி உள்ளே நுழையவும், மறக்காமல் நான் கதவை சாத்தி தாழிட்டேன். என் பின்னே தயங்கி தயங்கி வந்தவள் திடீரென நின்று விட்டால். நான் அருகே போய் பேரை சொல்லி, டிக்சி "கம் ஆன்", பயப்படாதே, நான் உன்னை ஒன்னும் பண்ண மாட்டேன் என அவளின் முதுகை அப்படியே என் கைகளால் வருடியபடி உள்ளே அழைத்து வந்தேன். அவளும் அதை எதிர்பார்த்தது போல் அப்படியே அமைதியா என் கூடவே வந்தாள்.

உள்ளே வந்ததும் அவளை வாஞ்சையுடன் தழுவினேன். நான் எதிர்பார்க்கவே இல்லை. அவளுக்கும் என் மீது அவ்வளவு ஆசை இருக்குமென்று. அவளும் என்னை ஆசை தீர கொஞ்சினாள்.

அப்பா எவ்வளவு நாள் ஆசை. இந்தியாவில் இப்படி ஒரு நாயை கொஞ்ச முடியுமா? அது அப்புறம் கடிச்சு கிடிச்சு வச்சா பின்ன தொப்புள சுத்தி 16 ஊசி போட வேண்டியதுதான். இங்க உள்ள நாய்ங்க எல்லாம் பக்காவா தடுப்பூசி போட்டு வளர்கிறாங்க. அதனால எனக்கு பயமே இல்ல. எனக்குள் இருந்த நீண்ட நாள் அசை நிறைவேறிய சந்தோசத்தில் மீண்டும் ஒரு முறை டிக்சியை ஆசை தீர கொஞ்சினேன்.

ஐயோ! யாரது நாய விட்டு என்ன கடிக்க விடறது? சும்மா தமாசுக்கு தான். டிக்சிய எனக்கு புடிச்சது. உங்களுக்கு கத புடிச்சிருந்தா அப்படியே ஒரு வோட்ட போட்டுட்டு போங்க. நன்றி.
share on:facebook

6 comments:

ஸ்ரீராம். said...

என்னென்னவோ ஆசைகள்....

ஆதி மனிதன் said...

சின்ன சின்ன ஆசைதாங்கனா. சே சே.. வேட்டைக்காரன் பார்த்தா இப்படித்தான் இங்கனா அங்கனான்னு வருது.

நன்றி ஸ்ரீராம்.

Madhavan Srinivasagopalan said...

Somehow I could guess it to be a 'dog' particularly whan i was reading 6th- paragraph.

typical 'kumudham' 1 page story

ஆதி மனிதன் said...

வருகைக்கு நன்றி மடி. நடுவுல ஒரு க்ளூ இருக்கட்டுமேனுதான் நான் "மொறைச்சி" என்ற வார்த்தையை சேர்த்தேன். இதுதான் தாங்கள் guess செய்ய உதவி இருக்கும் என நம்புகிறேன்.

கிருபாநந்தினி said...

பக்கு பக்குன்னு படிச்சுக்கிட்டே வந்தேன். கடைசி வரியைப் படிச்சதும்தான் அப்பாடான்னு இருந்துச்சு! ரொம்ப வெவகாரமானவரா இருப்பீங்க போல! :)

ஆதி மனிதன் said...

//கிருபாநந்தினி said... ..ரொம்ப வெவகாரமானவரா இருப்பீங்க போல! :)//

அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல. ஒரு பக்க கதைகள், கடைசி வரி சஸ்பென்ஸ் கதைகள் படித்த தாக்கம் தான்.

Post a Comment